I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, March 23, 2011
வரலாறு மறந்த வடிவேலு வோட்டு கேட்டு வருகிறார்
வடிவேலு இன்று கருணாநிதியின் வீட்டு வாசலில் காலை வைப்பதற்கு முன் MGR பற்றி சற்று யோசனை செய்திருந்தால், தான் செய்துள்ள தவறை உணர்ந்திருப்பார். லட்ச்கனக்கான் அவரது MGR ரசிகர்கள் இன்றும் கருணாநிதி MGR க்கு செய்த துரோகத்தை மறக்கவில்லை. உயிர் உள்ளவரை MGR கருணாநிதியை தனது பக்கம் அண்ட விடவில்லை. இன்று வடிவேலு அதெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதிக்கு ஓட்டு பிச்சை எடுக்க கிளம்பிவிட்டார். அதன பயனை அவர் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இவருக்கும் விஜய காந்துக்கும் உண்டான தனிப்பட்ட பிரச்சனயை அரசியலோடு தொடர்புறுத்தி, கருணாநிதி என்னும் தீய சக்திக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. மின் வெட்டு, வரலாறு காணாத விலை வாசி உயர்வு, பொது மக்கள் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, மக்கள் வரி பணத்தை விரயம் செய்து மாநாடுகள் நடத்துதல், எல்லாவற்றுக்கும் மேலாக spectrum ஊழலில் கோடி கோடியாக கொள்ளையடித்து தங்கள் குடும்ப நபர்களுக்கு வாரி வழங்கியது, இது போன்ற இன்னும் ஏராளமான புகார்கள் உள்ளன. மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், இன்னும் சொல்ல மறந்த பல அராஜகங்கள் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளாகும். இப்படி பட்ட ஒரு அராஜக கட்சிக்கு வோட்டு கேட்டு வடிவேல் மக்களிடம் வருகிறார். மக்கள் வடிவேலுவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment