Tuesday, July 31, 2012

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில்

பிளாஸ்டிக் பைகள் அவ்வளவாக அறிமுகம் ஆகாத சமயம். மளிகைக் கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பொருட்களை பேப்பரில்தான் கட்டி கொடுப்பார்கள். தள்ளு வண்டிக்காரரிடம் திராட்சைப் பழம் வாங்கச் சென்றால், பழைய பேப்பர் கடையில் வாங்கிய மிகவும் மெல்லிதான டைப்ரைட்டிங் பேப்பரில் எடை போட்டு நூலில் கட்டிக் கொடுப்பார். பெரும்பாலும் நூல் ரோஸ் கலரில்தான் இருக்கும். அதேபோல மளிகைக் கடைகளிலும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர எல்லா பொருட்களையும் பழைய செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிற்றால் கட்டிக் கொடுப்பார்கள். பொருட்கள் வாங்குபவர் கூடையையோ அல்லது பையையோ எடுத்துச் சென்று வாங்கி வருவார். இது அப்போதைய நடைமுறை.

இந்தியாவிலேயே முதன் முறையாக, கடலூரைச் சேர்ந்த டாக்டர் C.K. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் ஷாம்பூ என்ற நிறுவனத்தை தொடங்கி, 1979 வாக்கில் தலைக்கு போடும் ஷாம்பூவை ஷாஷேயில் (சிறிய பிளாஸ்டிக் பையில்) விற்கத் தொடங்கினார்.. பெரிய கடை முதல் சாதாரண பெட்டிக் கடை வரை விற்பனை.  புதிய உத்தியின் காரணமாக நல்ல வியாபாரம். பெரிய பாட்டில்களில் அடைத்து வைக்கப் பட்ட விலை அதிகமான பிரபலமான நிறுவனங்களின் ஷாம்பூ வியாபாரம் தேங்க ஆரம்பித்தது. பார்த்தார்கள் பெரிய கம்பெனி முதலாளிகள், ஷாம்பூ, ஹேர்டை மட்டுமல்லாது எல்லா பொருட்களையுமே (எண்ணெய் உட்பட) பிளாஸ்டிக் பையில் கம்பெனி பெயரோடு விற்கத் தொடங்கினார்கள். கடைகளிலும் பிளாஸ்டிக் தூக்குப் பையை (Carry Bag) அவர்கள் பங்கிற்கு இலவசமாக கொடுத்தார்கள்.  இந்த நடைமுறை மக்களுக்கு வசதியாகவும் பிடித்தும் போயிற்று.

ஆனால் இப்போது இத்தனை ஆண்டிற்குப் பிறகு, திடீரென்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கொடி பிடிக்கிறார்கள். இவ்வளவு தூரம் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் ஏதேனும் கண்டு பிடித்தார்களா என்றால் இல்லை. பிளாஸ்டிக் பையில் இப்போதும் அடைத்து விற்கப்படும் பொருட்களை தடை செய்யவும் இல்லை. பிளாஸ்டிக் தூக்குப் பைகளையும் சின்ன குவளைகளையும் மட்டுமே தடை செய்கிறார்கள். பாதிக்கப்படுவது சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்தான். இதுதான் சாக்கென்று சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால் நடத்துபவர்களும் இதுவரை இலவசமாக கொடுத்து வந்த பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கும் விலை வைத்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு என்றால், காசுக்கு மட்டும் பிளாஸ்டிக் தூக்கு பையை விற்பது சரியா?  அதிகாரிகள் திடீர் ரெய்டு என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்வார்கள். பெரிய நிறுவனங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. வழக்கம் போல பள்ளி மாணவர்களை வைத்து  பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம். பின்னர் போட்டோவுடன் செய்தி தருகிறார்கள்.

பிளாஸ்டிக் நல்லது இல்லை என்றால் அதற்கு மாற்று கண்டு பிடிக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாற்று சூழலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊராட்சி நகராட்சிகளில்  அள்ள வேண்டிய குப்பைகளை அள்ளி, துப்புரவு பணிகளை தினமும் ஒழுங்காகச் செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இம்சைதான் நடக்கிறது.

ஜெயலலிதா: ” வந்தாளே மகராசி! “ ஸ்ரீரங்கத்தில் தலைமைச் செயலகம்

சென்னைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கொஞ்ச நாளாகவே ஒத்து வரவில்லை. இவர் முன்பு தனது ஆட்சியில் சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட முயன்றார். ஏகப்பட்ட தடைகள். எதிர்ப்புக் குரல்கள். அவர் செய்ய எண்ணியதை கருணாநிதி முடித்துக் கொண்டார். இப்போது ஜெயலலிதா  சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.. தனி மெஜாரிட்டி இருந்தாலும், சென்னையில் எந்த காரியம் தொடங்கி னாலும், கோர்ட் அது இது என்று இழுத்துக் கொண்டு போகிறது.
சென்ற முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது  ராணிமேரிக் கல்லூரியின் இடத்தை தேர்ந்தெடுக்காமல், வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தால்,  தலைமைச் செயலகத்திற்கு இவரது காலத்திலேயே புதிய கட்டிடம் உருவாகி இருக்கும். அப்போது பிரச்சினை என்று வந்தபோது மற்ற மாவட்ட மக்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இவரை ஆதரித்து அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னைக்கே முதலிடம் தருகின்றனர். சென்னை நகருக்கு மட்டுமே புதிய சாலைகள்,புதிய பேருந்துகள், புதிது புதிதாக மேம்பாலங்கள். மெட்ரோ ரயில், பெரிய நூலகங்கள், துணை நகரத் திட்டங்கள், பூங்காக்கள் என்று சென்னைக்கே அள்ளித் தந்தனர். சென்னையை மட்டுமே முதன்மை படுத்தினார்கள். மற்ற மாவட்ட மக்களுக்கு கிள்ளி கூட தரவில்லை. இன்னும் மற்ற மாவட்டங்களில் உள்ள சாலைகளும், பாலங்களும், குடிநீர்த் தொட்டிகளும், ஆண்டுக் கணக்கில் பராமரிப்பு கூட இல்லாமல் இருக்கின்றன. காவிரிக் கரையில் உள்ள திருச்சி போன்ற நகரங்களில் உள்ள மக்கள் இன்னும் தண்ணீர் தேடி குடங்களோடு அலைகின்ற சூழ்நிலை.
எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தி.மு.க ஆட்சி போன்று சென்னைக்கு மட்டுமே முதலிடம் தராமல் மற்ற மாவட்ட மக்களுக்கும் புதிய திட்டங்களை உருவாக்கினால் சரித்திரத்தில் அவர் பெயர் நிற்கும். அதற்கு முன்னோடியாக தமிழகத்தின் நடுவில் இருக்கும் அவரது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினால் முதல்வர் ஜெயலலிதா பெயர் சொல்லும். யாரும் எதிர்த்து பேச முடியாது. ஸ்ரீரங்கமும் சுற்றியுள்ள இடங்களும் வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்களில் சில புதிய அலுவலகங்களை  தொடங்கலாம். அனைத்து மாவட்ட மக்களும் பயனடை வார்கள். எதற்கெடுத்தாலும் சென்னையிலேயே எல்லோரும் குவிய வேண்டியதில்லை. செய்வாரா?

சிறுவாச்சூர் மதுர காளியம்மன்

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். (சென்னையிலி ருந்து திருச்சிக்கு செல்லும்போது பெரம்பலூரைத் தாண்டி உள்ளது ) சாலைக்கு மேற்கே பிரசித்தி பெற்ற காளி கோயில் அமைந்துள்ளது. ஊர் பெயரையும் இணைத்து சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு கடைசியில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம். மேலே படத்தில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. நடக்க இயலாதவர்கள் இவைகளில் செல்லலாம்.
  

தல புராணம் :

காவிரிப்பூம்பட்டினத்தில் நன்கு வாழ்ந்த கோவலன் கண்ணகி தம்பதியினர் விதி வசத்தால், பிழைப்பைத் தேடி மதுரைக்கு செல்லுகின்றனர். அங்கு கோவலன் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனால் இறக்கின்றான். செய்தி கேட்டு வெகுண்டெழுந்த கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்ததோடு மதுரை பற்றியெரிய சாபம் தருகிறாள். பத்தினி சாபத்தால் மதுரை எரிந்தது. அப்போது மதுரா தெய்வம் கண்ணகி முன் தோன்றுகிறது. அது எல்லாவற்றிற்கும் ஊழ்வினை தான் காரணம் என்று கண்ணகியை அமைதிப் படுத்துகிறது. மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள். ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள்  மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள். சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன்  நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது.  சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். வெளியே சென்ற செல்லியம்மன் கோயிலில் எப்போதும் முதல் மரியாதை தனக்கு தரப்பட வேண்டும் என்றபடியினால்,  தீபாராதனை காட்டும் போது, செல்லியம்மன் இருக்கும் மேற்கு திசை நோக்கி முதலில் காட்டுகிறார்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த காளி, திங்கட் கிழமைதான் பக்தர்களுக்கு காட்சி தந்தாள். எனவே திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் கோயில் திறந்து இருக்கும். இப்போது ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, மற்றைய விழாக் காலங்களிலும், தமிழ் விசேட தினங்களிலும் கோயில் திறந்து வைக்கப் படுகிறது.

இன்னும் சிலர் கண்ணகி மதுரையை எரித்ததால், மதுரையை விட்டு வெளியேறிய மதுரா தெய்வம்தான் இவ்வாறு சிறுவாச்சூரில் அமர்ந்தது என்றும், அது முதலில் மதுரை காளி என்று அழைக்கப்பட்டு பின்னர் மதுர காளி ஆயிற்று என்றும் கதை சொல்லுவார்கள்.

ஆதி சங்கரர் ஒருமுறை யாத்திரை செல்லும்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது ஒரு மரத்தடியில் ஒரு சுனை நீர் தோன்றுகிறது. தாகம் தீர்த்துக் கொள்ளும் போது சுனை வடிவில் வந்தது நான்தான் என்று மதுரகாளியம்மன் காட்சி தந்துவிட்டு சிலையாக மாறி விடுகிறாள். ஆதி சங்கரர் வைத்து வழிபட்ட, அந்த மதுர காளியம்மன் சிலைதான் இப்போதுள்ளது என்றும் ஒரு கதை உண்டு.

நம்பிக்கைகள் :

இந்த கோயிலில் இருக்கும் கிணற்று நீரில் குளித்துவிட்டு, அங்கேயே மாவு இடித்து மாவிளக்கு, நெய்விளக்கு போடுவது சிறப்பு. கோயில் வளாகத்திலேயே மாவிடிக்க உரல்களும், உலக்கைகளும் இருக்கின்றன. முடியாதவர்களுக்கு மாவு இடித்துத் தர அங்கேயே கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.கோயில் வளாகத்தில் குளித்துவிட்டு துணிகளை மாற்ற வெளிப்புற மண்டபங்கள் உள்ளன.

செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள். அம்மன் என்றாலே மக்கள் வைத்திருக்கும் பொதுவான நம்பிக்கைகளும், வழிபாடும் உண்டு. இந்த கோயிலின் தல மரம் மருத மரம் ஆகும்.

கோயில் திருவிழாக்கள்:

சித்திரை மாதத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மலை வழிபாடு, திருக் கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், தேர் இழுத்தல் முதலிய சிறப்பம்சங்கள் நடைபெறும்.

அருகில் உள்ள கோயில்கள் :


மேற்கே செல்லியம்மன் கோயில், ஆத்தடி குருசாமி கோயில், கம்பப் பெருமாள் சன்னதி ஆகிவையும், வடக்கே ஆலயத்தின் முன்புறம் சோலைமுத்து அய்யனார் ஆலயமும், தெற்கில் ஊர்சுத்தியான் கோயிலும், மேற்புற மேட்டில் பெரியசாமி ஆலயமும் உள்ளன.

(மேலே உள்ள இரு படங்களும் சோலைமுத்து அய்யனார் கோயிலில் எடுக்கப்பட்டவை. கீழே உள்ள இரண்டு படங்களும் ஊர்சுத்தியான் கோயிலில் எடுக்கப்பட்டவை) 




தங்கும் விடுதிகள்:

சிறுவாச்சூரிலேயே இப்போது திருச்சி சென்னை சாலையில் தங்கும் விடுதிகள் உள்ளன. அருகிலுள்ள திருச்சி, பெரம்பலூர் ஊர்களில் தங்கியும் இங்கு வரலாம். இரண்டு இடத்திலிருந்தும் பஸ் வசதி அதிகம்.

Sunday, July 29, 2012

சுமார் 30 சதவீதம் பேர் கொத்தடிமைகளாக

வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை,கட்டட வேலை,தோட்டம், பெட்ரோல் பம்ப் போன்ற வேலைகளுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் செல்கின்றனர்.

அங்குசெல்ல, ரூ.80 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஏஜன்ட்களிடம் கொடுக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஏஜன்ட்கள் சொல்லி அனுப்பும் வேலையோ, வேலை நேரமோ, சம்பளமோ, தங்கும் இடமோ, சாப்பாடு வசதியோ, விடுமுறையோ கிடைப்பது இல்லை. சுமார் 30 சதவீதம் பேர் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகின்றனர். இவர்களுடைய பாஸ்போர்ட்களை முதலாளிகள் வைத்துக் கொண்டு, இவர்களை ஊர் திரும்ப அனுமதிப்பதில்லை.

இவர்களது உறவினர்கள் ,"வீட்டில் தாய், தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; மகனை ஊருக்கு அனுப்பி வையுங்கள்,' என்று கெஞ்சி "பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, வளைகுடா நாடுகளுக்கு இது போன்று தினமும் நூற்றுக்கணக்கான "பேக்ஸ்'கள் அனுப்பப்படுகின்றன. அங்குள்ள நமது தூதரகங்கள் தமிழர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்புவதில் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அண்மையில், குவைத்தில் உடல்நலமில்லாத திருப்புத்தூர் பகுதி வாலிபர் ஒருவரை மீட்க, தூதரகம் தலையிட்டும் 3 மாதங்கள் ஆகி விட்டன.

முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்து உள்ளது. இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும்.


Saturday, July 28, 2012

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு!!!!!!!

கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.

ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.

இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.

இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.

1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.

2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.

3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.

4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.

(ஆனந்தவிகடன், 01.08.2012).

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?

தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ?


தயாநிதி, தயாநிதி என்று ஒரு மாறன் இருந்தாரே -
அவரை நினைவிருக்கிறதா ?
அநேகம் பேருக்கு இந்த விஷயமே மறந்திருக்கும்.
இது தான் நம் நாட்டில் வாடிக்கை.

எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் -
மக்கள்  மறந்து விடுவார்கள் -
அரசியல்வாதிகள் மக்களின் மீது வைத்திருக்கும்
இந்த நம்பிக்கை அநேகமாக வீண் போவதில்லை !

2ஜி விவகாரத்தில் தயாநிதி மாறனும்
சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் அவர் மீதும் வழக்கு
இருக்கிறது என்பதும் பலருக்கும் மறந்திருக்கும்.

நேற்று 2ஜி விஷயம் பாராளுமன்ற கூட்டுக் குழுவின்
முன்னர் விசாரணைக்கு வந்தபோது -

சிபிஐ டைரெக்டர் ஏ.பி.சிங் அதன் முன் விளக்கம்
அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

பிஜெபி  உறுப்பினர் யஸ்வந்த் சின்ஹா
வழக்கு பதிவு முன்னரே ராஜாவை கைது செய்தீர்களே -
வழக்கு பதியப்பட்டு இத்தனை மாதங்கள் ஆன பின்பும்
தயாநிதி மாறனை இன்னும் கைது செய்யாமல்
இருப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார்.

சிபிஐ டைரெக்டரிடம்
இருந்து சரியான விளக்கம் இல்லாத நிலையில்,
குழு உறுப்பினர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து,
தயாநிதி மாறன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இப்படி அறியாத சிறு பிள்ளைகளாக
இருக்கிறார்களே இவர்கள் !
இவர்கள் சொன்னால் அவர் கேட்டு விடுவாரா ?
“Aunty” இருக்கும் வரை தயாநிதியை யாரும்
தொட முடியுமா ?

(பி.கு.- சாதிக் பாட்சா, சாதிக் பாட்சா என்று
ஆ.ராஜாவின் நண்பர் ஒருவர் இருந்தாரே – அவரை
யாருக்காவது இன்னும் நினைவிருக்கிறதா ?
அவர்  கொலை செய்யப்பட்டு இறந்தாரா
அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்று
கண்டு பிடிக்கும் விஷயமும் இன்னும் சிபிஐ யின்
“பரிசீலனை”யில் தான் இருக்கிறது !
எல்லாவற்றிற்கும் “நேரம்”,”காலம்” வர
வேண்டும் அல்லவா !)

Friday, July 27, 2012

முட்டாப் பயலுக்கு வந்த இரண்டு சந்தேகங்கள்......





நீதிமன்றங்களில் எதற்கு வக்கீல்கள்?




மன்னர் ஆட்சி காலத்தில இரண்டு மனிதர்களுக்குள்ளே பிணக்கு ஏற்ப்பட்டால்; அவர்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மன்னன் விசாரித்து தீர்ப்பளித்ததாக கதைகளிலும், புத்தகங்களிலும் அறிந்திருக்கின்றோம். அதன் பின்னர் பஞ்சாயத்து, ஊர் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்லும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் இன்று ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்வதற்கு எதற்கு வக்கீல்கள் என்கின்ற மூன்றாம் தரப்பை பயன்படுத்துகின்றார்கள்? தாமாக விசாரித்து நீதி யார்பக்கம் என்பதை அறியும் அளவுக்கு நீதிபதிகளுக்கு விபரம் போதாதா? மன்னனாலும், பஞ்சாயத்து பெரிசாலும் முடிந்தது ஏன் இன்று படித்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகளுக்கு முடிவதில்லை?

ஒருவேளை ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது என்கின்ற ஜனநாயக சிந்தாந்தத்தை காப்பாற்றவா வக்கீல்கள்? ஆம் என்றால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வக்கீல்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை, அடிப்பையில் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை வக்கீல் பீஸ்!! எதுக்கு குடுக்கிறம், ஏன் குடுக்கிறம் என்கிறது தெரியாமலே நிறையபேர் கடன் வாங்கி வக்கீலுக்கு படி அளக்கிறாங்க!! வக்கீல்களை குறை சொல்ல முடியாது, ஏன்னா அதுதான் அவங்க பொழைப்பு, எதுக்கு வக்கீலுங்க என்கிறதுதான் என்னோட சந்தேகமே!!!


ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று ஒரு வக்கீல் இருந்தாராம், அவர் எந்த வழக்கையும் வென்று கொடுப்பாராம், தனது கட்சிக்காரன் கொலையாளி என்றாலும் காப்பாறும் அளவுக்கு வாத திறமையும், சாட்சிகளை பார்வையாலேயே மிரட்டி குழப்பும் அளவிற்கு திரமயானவராம்!!! இவர் ஒரு உதாரணம், இப்படி ஒவ்வொரு நாட்டிலும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் சில, பல வக்கீல்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நியாயம் இல்லாத பணம், அதிகாரம் இருக்கிறவன் பக்கம் சிறப்பான வக்கீல்களும், நியாயம் இருக்கின்ற பணம் இல்லாத அன்றாடம் காய்ச்சி பக்கம் ஒப்புக்கு ஒரு வக்கீலும் நீதிக்காக முன்னிற்பது நீதியின் முன் எவ்வகையில் நியாப்படுத்தப்படுகின்றது!!!! அதிகாரம் உள்ளவன், அரசியல்வாதி, பணக்காரன் நீதியை வாங்குவதற்கும்; பணம், வசதி வாய்ப்பு இல்லாதவன் நியாயத்தை அதிகாரம், பணத்தின் முன் இழப்பதற்கும் சட்டத்தின் ஓட்டைகள்தான் காரணம் என்றால்; அந்த ஓட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வக்கீல்கள் மக்களுக்கு நீதி சொல்ல எதுக்கு துணைக்கு வரணும்?

ஒரு நீதிபதிக்கு ஒரு வழக்கினை விசாரித்து தீர்ப்பளிக்க தடுமாற்றம், நம்பிக்கை இல்லை என்றால் இரண்டு மூன்று நீதிபதிகள் இணைந்தாவது ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாமே! நேரம் போதாதா? வக்கீல்கள் வாய்தா வாங்கிற காலத்தைவிடவா நேரச்சிக்கல் ஏற்ப்படப் போகிறது!!! சம்பந்தப்பட இரு தரப்பையும், சாட்சிகளையும் ஒரே நபர் (நீதிபதி) விசாரித்து வழங்கும் தீர்ப்பைவிட; ஒருபக்கம் சிறந்த வக்கீலும், ஒரு பக்கம் சாதாரண வக்கீலும் துணைநிற்க இருதரப்பு நியாயங்களையும் கேட்டுவிட்டு வாத திறமைக்கு கிடைக்கும் தீர்ப்பா சிறந்தது? சட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களாக வக்கீல்களை ஏற்றுக்கொள்ளலாம், நீதியை கேட்டு நீதிமன்றை நாடும் மக்களின் துணையாக நின்று நீதியை பெற்றுக்கொடுக்கும் (?) ஒருவராக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!!

மறதி குற்றச்செயலா?




மோட்டார் வாகனம் ஒன்றை வீதியில் செலுத்தும்போது மூன்று முக்கிய ஆவணங்கள் எப்போதும் எம்முடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறது போக்குவரத்துப் பிரிவு சட்டம். ஓட்டுனர் உரிமம், வரி கட்டிய பற்றுச்சீட்டு, காப்புறுதி கட்டிய பற்றுச்சீட்டு என்பவைதான் அந்த மூன்றும். இவை கையில் இல்லாத பொழுது போக்குவரத்து போலிஸ் இடைமறித்து சோதனை செய்தால், அந்த இடத்தில் வாகனம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்படும், பின்னர் தண்டப்பணம் செலுத்த வேண்டும். அதிகமானவர்கள் இவை அனைத்தையும் தமது பர்சில் தான் வைத்திருப்பார்கள். பர்சை மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு போகும் நாளில் போக்குவரத்து போலீஸின் கைகளில் சிக்கினால்; ஏகப்பட்ட நேர விரயம் மற்றும் தண்டப்பணமாக மாத வருமானத்தின் ஒரு பகுதியை கட்டவேண்டிய கட்டாயம், இது 1% - 50%வரை பலதரப்பட்ட மக்களின் மாத வருமானத் தொகையாக இருக்கின்றது!! இந்த இடத்தில் போக்குவரத்து பொலிசாருக்கு 500 ரூபாவை லஞ்சமாக கொடுப்பது சிறந்த முடிவென்று பலரும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது!!!

குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள், திருடப்பட்ட வாகனங்கள் போன்றவற்றையும்; மறதியால் மேற்ப்படி ஆவணங்கள் தவறவிட்டு சென்றவர்களையும் கண்டறிவதில் இருக்கும் நடைமுறை சிக்கலையும் மறுப்பதற்கில்லை. அதே நரம் மறதி என்னும் ஒரு உளவியல் வியாதிக்கு இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை!!! இதற்கு எது சரியான தீர்வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஆனால் இவ்வகையில் சிலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக்கொண்டும், அதனால் லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது!!!

இந்த மறதிக்கான தண்டனை பொலிசாரால் மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோராலும் சிறுவயதுமுதலே வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கடைக்கு போகும்போது சொல்லிவிட்ட பொருட்களில் ஒன்றிரண்டை வாங்க மறந்து வந்து வீட்டில் திட்டு, அடி வாங்கிய பெருமக்கள் இதை அறிவார்கள் :-) அதேபோல பாடசாலையில் மறந்துபோய் சொன்ன பொருட்களை கொண்டு செல்லாமல், வீட்டு பாடத்தை செய்யாமல் போய் அடிவாங்கிய பலரும் அறிவார்கள்; ஆனாலென்ன பஞ்சியில், விளயாட்டுத்தனத்தில் வீட்டு பாடங்களை செய்யாமல் இருப்பவர்களும் மறதியை காரணம் காட்டுவதால் அங்கும் ஆசிரியர்களுக்கு பிரித்தறிவதில் சங்கடம் ஏற்ப்படலாம், ஆனால் நம்ம ஆசிரியர்கள் மறதிக்குத்தான் அதிக ஷொட் போடுவார்கள்; குறிப்பாக "இந்த வயதிலேயே உனக்கு மறதியா" என்று பஞ்சு டயலாக் பேசி மாணவர்களை வெளுத்து வாங்குவதையும் சொல்லியே ஆகவேண்டும் :-)
குறிப்பு :-
நாலுநாள் இண்டர்நெட், கம்பியூட்டர் இல்லாம ப்ரீயா இருந்து பாருங்க, உங்களுக்கும் இதேபோல பல சந்தேகங்கள் கிளம்பும் 

விலையேற்றம்!! அருமையான திட்டங்களை போடும் அரசு!!

 அருமையான திட்டங்களை போடும் அரசு!!


தனியார் மருத்துவமனைகள் சந்திக்கு சந்தி உருவாக்கி வருகின்றன!!! 25 வயதிலேயே இதயநோய், கொலஸ்ரோல், சக்கரைவியாதி முதற்கொண்டு வாயில் பெயர் நுழைய முடியாத பல வியாதிகளும் இன்று அதிகரித்து வருகின்றது!! மெடிக்கல் செக்கப், டயட் மாத்திரைகள், ஜிம், இலத்திரனியல் எடை குறைப்பு இயந்திரங்கள் என நாளுக்குநாள் செலவுகளும், வீண் விரயங்களும் அதிகரித்து வருகின்றன!! இந்த நிலையை இப்படியே விட்டால் எதிர்வரும் காலங்களில் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள திட்டம்தான் 'விலை அதிகரிப்பு'!!!

கோதுமை மா -: இன்றைய அதிக நோய்களின் முக்கிய காரண கர்த்தா கோதுமை மா!! இன்றைக்கு அதிகமானவர்களுக்கு குடைச்சலாக இருக்கும் கொலஸ்ரோல் வியாதிக்கு டாக்டர்கள் சொல்லும் முதல் அறிவுரையே கோதுமை மாவின் பாவனையை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்!! என்னதான் டாக்டர்கள் சொன்னாலும் எம்மவர்கள் கேட்ப்பதேயில்லை!! இதனை கருத்திற் கொண்டுதான் அரசு செய்த திடீர் மருத்துவ திட்டம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!! 1 kg கோதுமை மாவின் விலை இன்று 88 ரூபா!!! (போஸ்ட் பப்ளிஷ் ஆவதற்கும் விலை இன்னமும் அதிகரித்தால் நான் பொறுப்பல்ல!!)15 ஆண்டுகளிற்கு முன்னர் 15 ரூபா அளவில் விற்கப்பட்ட கோதுமை மா இன்று கிட்டத்தட்ட 6 மடங்கு உயர்வடைந்துள்ளது!! இவ்வாறு கோதுமை மா விலை அதிகரிப்பதால் உள்ளூர் உற்பத்திகளான மரவள்ளி, சோளம் போன்றவற்றை மக்களை உணவிற்கு பயன்படுத்தச் செய்வதும் இதன் மற்றொரு சிறப்பம்சம்!!

பால்மா -: 400 கிராமின் பால்மா 90 களின் நடுப்பகுதியில் 60 ரூபாய்க்கு வாங்கிய ஞாபகம்! இன்று அதன் விலை 60 'ஓவா'வால் அதிகரித்துள்ளது; 1 kg பால்மா 161 'ஓவா'வால் அதிகரித்துள்ளது!! 400 கிராமின் இன்றைய விலை அண்ணளவாக 325 ரூபாவாக உயர்ந்துள்ளது!!! இப்படி ஒரு விலை அதிகரிப்பை இதற்கு முன்னர் இலங்கை மக்கள் எதிர்கொண்டதில்லை!! இதற்கு காரணம் அதிக 'டீ' குடிப்பதால் ஏற்ப்படும் சக்கரைவியாதி மற்றும் கொலஸ்ரோல் போன்ற நோய்களை குறைப்பதுதான் என்றாலும் அதையும் தாண்டி கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரியமுறை இன்று இல்லாமல் போவதை தடுத்து அதனை மீண்டும் ஊக்கப்படுத்துதலும் முக்கியமானது!!!

பால்மா விலை ஏற்றத்தால் வீடுகளில் கறவை மாடுகளும், மறி ஆடுகளும் வளர்க்க ஆரம்பித்தால் பாலும் கிடைக்கும், கூடவே வீட்டில் மிச்சமாகும் கழிவு உணவுப் பொருட்களும் அவற்றுக்கு உணவாக்குவதால் சுற்றமும் சுகாதாரமும் பேணப்படும்!! இதனால்த்தான் பால்மாவின் விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அரசு!!! பால்மா விலை ஏற்றத்தால் பலர் 'பிளேட் டீ' மட்டும் குடிக்க ஆரம்பிப்பார்கள்; இதனால் தேசிய தேயிலை உற்பத்தியை மக்கள் அதிகளவில் நுகரவும் வாய்ப்புள்ளது!! கூடவே கோப்பியும்!!

சமையல் எரிவாயு :- அப்பப்போ தாறுமாறாக விலையேற்றம் எகிறும், இம்முறை விலை ஏறி இருப்பது ஒரு சிலிண்டருக்கு வெறும்.. வெறும்.. வெறும்... வெறும்.. 350 ரூபாயால்த்தான்!!!! ரொம்ப கம்மியாத்தான் ஏற்றி இருக்கிறாங்க! எரிவாயுவால் ஏற்ப்படும் புகையானது 'பீ'சோன் (ஒசொனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா) படத்தை தாக்கும் என்பதாலும், அதிகளவில் தேக்கமாகும் பொச்சுமட்டை, தென்னைமட்டை, பனைமட்டை, தென்னோலை, பனையோலை, ஊமல்கொட்டை போன்றவற்றை எரிப்பதால் சூழலில் அவை தேங்குவதால் உருவாகும் நுளம்பு பெருக்கத்தை இல்லாமல் செய்து டெங்கை ஒழிப்பதுதான் இதன் மறைமுக திட்டம்!! அதே நேரம் வீதிகளில் அதிகளவு சிலிண்டர்களை கொண்டுவரும் கண்டெய்னர்களை சிட்டி (வேஷன் 2.௦) போன்ற மோட்டு ரோபோக்கள் பிரட்டினால் உண்டாகும் சேதங்களும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது!! 2008 களில் 800 ரூபாயில் இருந்த சிலிண்டர் இப்போது 2500 க்கும் மேல்!!!


சீமெந்து :- 70 ரூபாவால் அதிகரித்துள்ளது!! வெற்றுக் காணிகளில் கட்டடங்களை கட்டுவதால் பல மரங்கள் தறிக்கப்பட்டு இயற்கையின் சமநிலை குழப்பப்படுகின்றது. மழை குறைவாக கிடைப்பதற்கும் இதுவே ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகின்றது!! சீமெந்தின் விலையை அதிகரிப்பதால் தேவையற்று கட்டப்படும் கட்டடங்களின் அளவை குறைக்கலாம் என திட்டமிட்டிருக்கின்றார்கள்; மணல் விற்கும் விலைக்கு சீமெந்தின் விலை ஏற்றம் அவ்வளவாக பாதிப்பில்லை என்றே சொல்லவேண்டும்! இருந்தாலும் இந்த விலை ஏற்றங்களால் உண்டாகும் மற்றொரு நன்மை மண்னினாலான வீடுகளை ஊக்குவிப்பது!! எமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மண்னினாலான வீடுகள் குளிர்மையானவையாக இருக்கும் என்பது குறிப்படதக்க விடயம்! அத்துடன் செங்கல்லின் பாவனையை அதிகப்படுத்தி செங்கல் உற்பத்தியை அதிகரிக்கவும் இவ்விலை ஏற்றம் ஆவன செய்திருக்கின்றது!!

எரிபொருள், வாகனம் - இவற்றின் விலைகள் அதிகளவில் ஏற்றப்பட்டமைக்கான காரணம் சூழல் மாசடைதல், மற்றும் வீதி விபத்துக்கள்தான்!! குறைவான விலைகளில் எரிபொருட்களும் வாகனங்களும் இருக்குமிடத்தில் அவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் மேற்சொன்ன காரணங்கள் பாதகமாக அமைந்து விடுகின்றன; எனவே இவற்றை குறைக்கவே இந்த விலை ஏற்றங்கள்!! அத்துடன் இதனால் துவிச்சகரவண்டி, மாட்டுவண்டில் பாவனைகளும் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உண்டு; இவை உடலுக்கு பயிற்சியாக அமைவதால் உடலின் கொழுப்பு கரைக்கப்படுகின்றது; இதனால் கொலஸ்ரோல் போன்ற கொழுப்பு வியாதிகள் குறைக்கப்படலாம்!! மற்றும் இன்சூரன்ஸ், டக்ஸ், லைசென்ஸ் வழங்கப்படும் இடங்களில் கூட்டமும் நெரிசலும் குறைக்கப்படலாம்; இதனால் அரசுக்கு பணத்தால் நஷ்டம் ஏற்ப்பட்டாலும், மக்களின் நலனே முக்கியம் என்பதால் அரசு நஷ்டத்தை பெரியமனதாக ஏற்றுக்கொள்கின்றது!!

நள்ளிரவு 12 மணிக்கு விலை ஏற்றப்படும் என்கின்ற அறிவிப்பை முதல்நாள் மாலைக்கு முன்னமே அரசு SMS மூலம் அறிவித்து விடுகின்றமை இன்னும் விசேடம்!! மாலை 3 மணிக்கு SMS வருகின்றதென்றால் எமது கடைகளில் குறிப்பிட்ட பொருட்கள் மாலை 3 மணியில் இருந்து மறுநாள் அதிகாலைவரை இருப்பதில்லை!!! எப்படித்தான் ஒட்டுமொத்த கடைகளிலும் தீர்ந்துபோய் விடுகின்றதோ!! (ஒரு சில கடைகள் விதி விலக்காகவும் உண்டு) முன்பெல்லாம் விலையில் ஏற்ற இறக்கம் வரும்போது வியாபாரிகளுக்கு லாப, நஷ்டம் வரும்; இப்போதெல்லாம் விலையேற்றம் மட்டுமே என்பதால் லாபம் மட்டும்தான், அதிலும் அப்பப்போ கொள்ளை லாபம்!!

அத்தியாவசிய பொருட்கள் விலைமட்டும் அப்பப்போ பெரியளவில் எகிறும்போது பியர், சிகரட், சோடா விலைகள் மட்டும் எப்படித்தான் மந்தகதியில் ஏறுகின்றனவோ!!! இவற்றின் விலையை கூட்டினால் மட்டும் குடிக்காமல் இருந்துவிடவா போகிறார்கள்!! அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 5 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளபோதும் தொழிலாளர்களின் சம்பளம் மட்டும் நகர கஷ்டப்படுகின்றது!! அரச தனியார் ஊழியர்களுக்கு ஓரளவிற்கு அப்பப்போ சம்பள உயர்வு கிடைத்தாலும் அதிகளவு கடைகள், தொழிற்சாலைகள், தோட்டங்களில் பணி புரிபவர்களுக்குத்தான் சம்பள அதிகரிப்பு வெறும் கனவாகவே இருந்து வருகின்றது!!

1990 களின் நடுப்பகுதியில் 9 ரூபாய் விற்ற பாணின் இன்றயவிலை 58 ரூபா!! பால்மாவின் விலை 60 இல் இருந்து 325 ரூபா!! மண்ணெண்ணெய் 11 ரூபாயில் இருந்து 100 +!!! அடிப்படை தேவைகளான இவையே இப்படியென்றால் தங்கம் 4000 இல் இருந்து இன்று பத்து மடங்கு தாண்டியாகிவிட்டது!! ஆனால் இவர்களின் சம்பளம் மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட 3000 ரூபாயில் இருந்து 7000 வரைக்கும் தான் உயர்ந்திருக்கின்றது!! 7000 ரூபா சம்பளம் வாங்கி ஒரு குடும்பத்தை நடத்துவது சாத்தியாமா? என்று எந்த முதலாளியும் சிந்திப்பதில்லை!! குடும்ப கஷ்டம், படிப்பறிவின்மை போன்ற காரணங்களால் முதலாளிகளுக்காக தெரிந்தோ, தெரியாமலோ அடிமாடாய் உழைக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்குக அரசு குறைந்த பட்சம் நியாயமான ஊதியம், வேலை நேரம் , விடுமுறை போன்றவற்றை நியாயமாக பெற்றுக்கொடுப்பது கட்டாய கடமை!

பல கடைகளில் காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை பெண்ட் எடுக்கப்படும் எத்தனையோ இளைஞர்/சிறுவர்களை காணலாம்; வாரம் ஒருநாள் விடுமுறையே கெஞ்சி வாங்கும் அளவிற்கு கொடூர முதலாளிகள் பலருண்டு!! குறிப்பிட்ட நேரம் தாண்டி வேலை செய்தால் மேலதிக சம்பளம், விடுமுறை தினங்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம், ஞாயிறுகளில் கட்டாய விடுமுறை என பல சட்டங்கள் வர்த்தக சங்கங்களில் உண்டு என்றாலும், முதலாளிகளின் பணத்திற்கு முன்னால் சட்டம் இருட்டறைதான்!! கடைகளிலும், தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வாழ்வை தொலைக்கும் இவர்களுக்கு அடிப்படை உரிமை மற்றும் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது இன்றியமையாதது!!

சில நாட்களில் வழமைபோல படித்தவன் விலை உயர்வுக்கு போராட்டம் செய்வான்; அரசும் ஒரு சிறுதொகையை ஊதிய உயர்வாய் அறிவிக்கும்; ஆனால் படிக்காத, ஏழ்மையை சமாளிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனுக்கும்/யுவதிக்கும் வழமைபோல அதே சம்பளம், அதே வேலை!!! தொழிற் சங்கங்கள், மனித உரிமை நிறுவனங்கள் அனைத்தும் A/C கட்டடம் + வாகனங்களில் நேரத்தை விரயமாக்கவே அன்றி ஏழைகளுக்காக அல்ல!! விலை ஏற்றங்கள் இப்படியே தொடர்ந்தால் இவர்களது வாழ்க்கைதரம் எப்படி உயரும்? நாடு எப்படி வளர்ச்சி அடையும்? இதை தமிழர்களுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த அவலம் நாடு முழுவதும் உள்ளவைதான்; சகோதர இனத்தவர்களும் சந்திக்கும் பிரச்சனைதான். அன்றெல்லாம் பாண், பருப்பு விலைகளில் பத்து பைசா ஏறினாலே ஆட்சியை மாற்றும் சகோதர இனத்தவர்கள் இன்று இத்தனை பாரிய விலை ஏற்றங்களையும் சகிப்பது/மௌனிப்பது எதனால்!!!!

அரசியல், இனம், மதம் கடந்து சிந்திக்கவேண்டி பிரச்சனைகள் இவை, இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒருமாத சம்பளம் ஒருநாள் தீவனத்திற்கே போதாத நிலையை உண்டாக்கிவிடும்!!!!

Monday, July 23, 2012

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிடம் தோற்கும்போதெல்லாம்


 


 இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடம் எப்போதெல்லாம் தோற்கிறதோ அப்போதெல்லாம் இலங்கை கடற்படை ரவுடிகள், தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது வேண்டும் என்றே நடக்கிறதா அல்லது தற்செயலானதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. வேண்டும் என்றே நடக்கும் சம்பவமாக இருந்தால் எதிர்காலத்தில்
மிகப் பெரிய அபாயத்தை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இலங்கை அணி, இந்தியாவிடம் தோற்றபோது இரண்டு முறை தமிழக மீனவர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதையடுத்து அன்று இரவு நான்கு தமிழக மீனவர்களை நடுக் கடலில் வைத்து கொடூரமாக சுட்டு கடலில் வீசியது இலங்கை கடற்படைக் காலிக் கும்பல்.
அதேபோல சனிக்கிழமை நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா, இலங்கையைத் தோற்கடித்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை 23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று விட்டது. இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ளனர். இலங்கையுடன் கிரிக்கெட் உறவுகளை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் இந்தியா வெல்லும்போதெல்லாம் தங்களது உயிருக்குத்தான் ஆபத்து ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
காலம் காலமாக இரு நாட்டு மீனவர்களுமே பாக் ஜலசந்திப் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இங்குதான் மீன்வளம் நன்றாக உள்ளதால், இலங்கை மீனவர்களும் இங்கு மீன் பிடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கச்சத்தீவு நம்மிடம் இருந்தவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. ஆனால் 1974ம் ஆண்டு கச்சத்தீவை தூக்கி இந்திய அரசு, இலங்கையிடம் தாரை வார்த்த பின்னர் நிலைமை மோசமாகி விட்டது. நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இலங்கை தீவிரமாக இறங்கியது.
இந்திய மீனவர்களின் மீன்பிடி எல்லையானது சுருங்கிப் போனது. கச்சத்தீவு பகுதியில்தான் நிறைய மீன்வளம் உள்ளது என்பதால் நமது மீனவர்கள் அங்கு போகின்றனர். ஆனால் அங்கு போனாலே சுட்டுக் கொல்கிறார்கள் அல்லது அடித்து விரட்டுகிறார்கள் அல்லது சிறை பிடித்துச் செல்கிறார்கள். இத்தனைக்கும் கச்சத்தீவில் நமது மீனவர்கள் ஓய்வெடுக்க, ஒப்பந்தத்தில் வழி உள்ளது. ஆனால் அதை டாய்லெட் பேப்பர் போலத்தான் இலங்கை அரசு பாவித்து வருகிறது.
80களில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மிகுந்திருந்த நேரத்தில், இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதையே விட்டு விட்டனர். தமிழகத்தை ஒட்டிய இலங்கைக் கடற்பகுதி முழுவதுமே புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அப்போது தமிழக மீனவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. இலங்கைக் கடற்படையிடம் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று கூறுகிறது. ஆனால் ஒரு முறை கூட இந்திய அரசு உறுதியான,விரைவான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாகும்.
இந்த கொடூரத் தாக்குதலை நிறுத்த வேண்டும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை, தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியபடிதான் உள்ளனர். ஆனால் மத்திய அரசோ அசைந்து கொடுப்பதாகவே தெரியவில்லை. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழக அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ என பலரும் ஒரே குரலில் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை சீனா குறித்த பயத்தால்தான், இலங்கையிடம் தேவையில்லாமல் பணிந்து போவதாக கருதப்படுகிறது. எங்கே இலங்கை அரசைப் பகைத்துக் கொண்டால், சீனாவின் கை ஓங்கி விடுமோ, இலங்கையில் அது நிலை கொண்டு விடுமோ, நமது பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடுமோ என்று இந்திய அரசு பயப்படுகிறது. இதனால்தான் நமது நாட்டு குடிமக்கள் செத்தாலும் பரவாயில்லை, நமது நாட்டின் பரம விரோதியை, இலங்கையில் நிலை கொண்டு விட அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் சொந்த நாட்டு மக்களை சாகடித்து விட்டு வெறும் மண்ணை மட்டும் காத்து என்ன புண்ணியம் என்பதை மத்திய அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி இந்திய அரசு பயந்து பயந்து செத்தாலும் கூட இலங்கை தன் வேலையில் தீவிரமாகவே உள்ளது. இந்தியாவை அது மதிப்பதில்லை. குறிப்பாக ஈழப் போரை இந்தியாவின் பேருதவியுடன் முடித்து விட்டதால் இப்போது அதற்கு இந்தியாவின் உதவி கூடத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்தியாவைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்த இலங்கை, இப்போது சீனா இருக்கும் தைரியத்தில் இந்தியாவை நோக்கி கால் மேல் கால் போட்டபடி தமிழக மீனவர்களை பந்தாடி வருகிறது.
இலங்கையிடம் இந்தியா எவ்வளவுதான் பணிந்து போனாலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை என்பதே உண்மை. பல முக்கியப் பணிகளை சீனாவுக்கே கொடுத்துள்ளது இலங்கை. ஆயுத ஒப்பந்தங்களையும் பெரிய அளவில் செய்துள்ளது. எவ்வளவு கடன் கேட்டாலும் கொடுக்கத் தயார் என்று சீனாவும் கூறி வருகிறது. இப்படி இந்தியாவின் தயவு சற்றும் தேவையில்லை என்ற நிலையில்தான் இலங்கை உள்ளது. ஆக, நாம் இலங்கையை குளிர்ச்சிப்படுத்தினால் அது சீனாவை அண்டாது என்ற வாதம் பொய்யானது, உப்புச் சப்பில்லாதது என்பது நிரூபணமாகியுள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்தியா, இப்படி மொட்டைத்தனமாக நடந்து கொள்ள வேண்டும், அப்பாவித் தமிழக மீனவர்களின் உயிருடன் இலங்கை விளையாடுவதை ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது - பதில்தான் இல்லை.
ராமநாதபுரம், நாகப்பட்டனம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி தொழில்தான் பிரதானமானது. அவர்களுக்கு அதை விட்டால் வேறு வேலை தெரியாது. அதிலும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மிகவும் பரிதாபமானவர்கள். அவர்களுக்கு வேறு வேலை எதுவுமே தெரியாது. அந்த மாவட்டத்திலும் வேறு வேலைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அவர்கள் கடலை நம்பி மட்டுமே இருக்கவேண்டிய நிலை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் மீன்பிடியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்கள் குறித்து மத்திய அரசு மட்டுமல்லாமல், இதுவரை இருந்த தமிழக அரசுகளும் கூட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுத்ததில்லை. இறங்கி வர முயன்றதில்லை.
இவர்களின் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தீவிரம் காட்டினால் மட்டுமே முடியும். மேலும் மாநில அரசும் சற்று தீவிர அக்கறை காட்ட வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். நமக்காக ஓட்டு் போட்டவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் கொஞ்சமாச்சும் அரசுகளின், பதவியில் உள்ளோரின் மனதில் உறைக்க வேண்டும். அப்படி உறைத்தாலே போதும் நிச்சயம் தீவிரமாக முயற்சியில் இறங்குவார்கள்.
அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தானிடமே நாம் அவ்வளவு துணிகரமாக, துணிச்சலாக, தைரியமாக மோதும் போது, சுண்டைக்காய் நாடான இலங்கையைப் பார்த்துப் பயப்படுவது, அதை தாஜா செய்வது அவசியமே இல்லாதது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சீனாதான் நமது பயம் என்றால், இப்போது இலங்கை நடந்து கொள்வது சீனாவை விட மோசமாக உள்ளதே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
என்ன செய்வது, முன்பு பாகிஸ்தானை சமாளிக்க வங்கதேசத்தை உருவாக்கினார் இந்திரா காந்தி. ஆனால் இன்று இந்திரா காந்தியும் இல்லை, அவர் போன்ற தைரியமான, அரசியல் துணிச்சல் கொண்ட தலைவர்களும் இல்லை!(

ஜனாதிபதி தேர்தல் - கேவலமா இருக்கு?


மத்த தேர்தல் மாதிரி இது கிடையாது...குடியரசுத் தலைவர் போஸ்ட், ரொம்ப பலமான போஸ்ட்..நல்லா கவனிக்கணும்...
எத்தனை பேரு நிக்குறாங்க..ரெண்டு பேரு..
அவுகளை தேர்ந்தெடுக்க போறது யாரு??? நம்ம ஊரு மந்திரிங்க.

உள்ளூருல நடக்கிற எம்எல்ஏ  தேர்தல்ல நிச்சயம் 20 பேராவது நிப்பான்..சில சமயத்துல ஒரே பேருல 3 பேரு கூட இருப்பான்??? ஓட்டு  போட  வர்றது நம்ம ஊரு பாமர சனங்க..அவங்க செல்லாத ஓட்டு  போடுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு..ஆனா நம்மளை எல்லாம் ஆட்டி படிக்கிற, நம்மளை ஆளுகின்ற ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி க்களோட ஓட்டு  செல்லாத ஓட்டா  மாறி இருக்கிறதை மாதிரியான கேவலம் இந்த உலகத்துல இந்தியாவுலதான்ய நடக்குது.இவனை நம்பி நம்ம நாட்டை எழுதி கொடுத்திருக்கோம்...

விளங்குமா இந்தியா? இந்த லட்சணத்துல சோனியா காந்தி அம்மா ஓட்டு  போடுறதுக்கு முந்துன நாளு  எல்லாருக்கும் மதிய விருந்து கொடுத்து ஓட்டு  எப்படி போடணும்னு ஸ்பெஷல்  கிளாஸ்  எடுத்திருக்கு னு  நியுஸ் வேற வந்துச்சு..

ஏன்யா??? இருக்கிற போட்டியாளர்கள் ரெண்டு பேரு...அந்த ரெண்டு பேரை கூட பார்த்து தேர்ந்தெடுக்க தெரியாதவன் எல்லாம் மந்திரி? ஓட்டு போட  விருப்பம் இல்லேனா பேசாம ஒதுங்கி போக வேண்டியதுதானே. அத விட்டுட்டு செல்லாத ஓட்டு  போட்டு கேவலப்படுத்தி இருக்கீங்களே!!!! 

தமிழ் நாட்டு மக்களை தொடர்ந்து இழிவு  பண்ணிக்கிட்டு இருக்கிற குரூப் இப்போ குடியரசுத் தலைவர் போஸ்ட்ல வேற இருக்கு, தமிழ் நாட்டோட நிலைமை இன்னும் சீரழியப் போகுது, அதுதான் உண்மை. இனி காங்கிரசுக்கு ஜால்ரா  போடலைனா அந்த ஸ்டேட்டுல  356 வந்திடும்னு நான் நினைக்கிறேன்...

சரி இந்த பிரணாப் பை தூக்கி உட்கார வைச்சதுமே அடுத்த பிரதமர் ராகுல் னு ஒரு செய்தி வருதே, அது வேற கதை சைடுல ஓடுது..

பொதுவா குடியரசுத் தலைவர் எந்த கட்சியை சார்ந்தவராகவும் இருக்க கூடாது னு  நான் கேள்விப் பட்டிருக்கின்றேன்..இவரு எப்படி இருக்கப் போறாரோ தெரியலை????

யார் இந்த பிரணாப் ஜி ?  ராஜீவ் காந்தி ஒதுக்கி வச்ச ஆளத்தான் இன்னிக்கு இந்த குடியரசுத் தலைவர் போஸ்ட் க்கு மிஸ்ஸஸ் ராஜீவ் காந்தி பரிந்துரைத்து இருக்காங்க..என்னே ஒரு பதி  பக்தி..நினைச்சாலே மெய் சிலிர்க்குது..

அந்த அம்மாவோட உண்மையான நோக்கம் என்ன? ராகுல் காந்தியை பிரதமராக்கி ஏற்கனவே டம்மி பீசா இருக்கிற பிரதமரை நிதியமைச்சரா மாத்துரதுதான் மெகா பிளான்னு  அவங்க கட்சிக்காரங்களே முனுமுனுக்கிறாங்க ..

பதவிங்கிறது தானா தேடி வரணும்? அதுக்குத்தான் மரியாதை எப்பவுமே உண்டு..தமிழ்நாட்டுச சிங்கம் அப்துல் கலாமுக்கு அது கிடைத்தது..

தற்போது கிடைத்த பதவி எப்படி என்பது அவனவன் மனசாட்சிக்கு தெரியும்???? ஏன்யா இதெல்லாம் ஒரு வெற்றி?? இதுக்கு பட்டாசு, இனிப்பு வேறயா??? ரொம்ப கேவலப்படுத்திக்கிட்டாங்க?

 

Sunday, July 22, 2012

RFID என்ற தொழில்நுட்பம்

RFID என்ற தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்

 Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும்.  இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும். 

RFID இனுடைய அடிப்படைச்சுருக்கம்
தமிழில், வானொலி அதிர்வெண் அடையாளம் என்றைழைக்கப்படும் நுட்பம் (கருவி) தனக்கு கொடுக்கப்பட்டுள்ள Programe இற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும். 

உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு  வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.

இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980  களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.

RFID எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது.  இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency  பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது  அனைத்துவகையான Tag களிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

RFIDஇல் Tags எவ்வாறு வேலைசெய்கின்றன?
        பொதுவாக இவை இரண்டுவகைப்படுகின்றன. 
  •                                   Passive Tags
  •                                   Active Tags
 Passive tags ஆனவை எல்லாநேரங்களிலும் Reciever உடன் தொடர்பில் இருக்காது. தேவை ஏற்படும் போது மாத்திரம் அல்லது நாம் பயன்படுத்தும் போது மட்டும் இயங்குகின்ற. இதற்கு உதாரணமாக வியாபார நிலையங்களில் விற்பனை பொருட்களில் உத்தரவாத அட்டைகளில் பயன்படுகின்றன. இவற்றிலும் இரண்டுவகைகள் உள்ளன Class0 என்பவை Send only மற்றயவை Class1 இவை Send/Write ஆகிய இரண்டையும் செய்கின்றன.

RFIDஇல் Readers எவ்வாறு வேலைசெய்கின்றன?
Reader ஆனது குறித்த தூர அளவில் வானொலி அலையூடாக tag இலிருந்து அனுப்பப்படும் தகவலை அறிகிறது இவ்வேளை  ஒரே அலைஎண்ணையுடைய இரு tags காணப்பட்டாலும் தனக்குரியதுடன் மாத்திரம் தொடர்பை பேணுவதர்காகவே இங்கு தனித்தனியான Protocol பயன்படுத்தப்படுகிறது. 
எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எவ்வாறு இருக்கும் என பார்த்தால்.. வியாபாரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பார்கோட் இற்கு பதிலா இது அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் கண்காணிப்பு மற்றும் தொடர்பதிவுகளை மேற்கொள்ளும் துறைகளில்  இதன் ஆதிக்கம் அதிகரிக்கும் எனலாம்.

RFID எவற்றில் அதிகம் பயன்படுகிறது?
  • சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் கைகளில் இதை பொருத்திவிட்டால் அவர்கள் தப்பிவிடாதவாறு பார்க்கமுடியும்
  • விமானங்களின் Passport இல் பொருத்தப்பட்டுள்ளதால் அவர்களையும் அவதானிக்க முடியும்.

  • இரத்தவங்கிகளில் வேகமாக என்னவகை இரத்தம் இருப்பில் உள்ளது என்னவகை இரத்தம் தேவை என தீர்க்கமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு பயன்படுகிறது.

 

ஜனாதிபதி தேர்தல் - இதுவரை .

 
இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், அவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த பட்டியலும்:-



1952
1.பாபு ராஜேந்திர பிரசாத்
5,07,400
2. கே.டி.ஷா 92,827

1957
1. பாபு ராஜேந்திர பிரசாத் 4,59,698
2. செளத்ரி  ஹரிராம் 2,672

1962
1. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5,53,067
2. செளத்ரி  ஹரிராம்
6,341

1967
1. டாக்டர் ஜாகிர் ஹுசைன் 4,71,244
2. கோட்டா சுப்பாராவ் 3,63,971

1969
1. வி.வி.கிரி
4,01,515
2. நீலம் சஞ்சீவரெட்டி 3,13,548

1974
1. பக்ருதீன் அலி அகமது 7,65, 587
2. த்ரிதிப் செளத்ரி 1,89,196

1977
நீலம் சஞ்சீவ ரெட்டி ஏக மனதாகத் தேர்வு

1982
1. கியானி ஜெயில் சிங் 7,54, 113
2. எச்.ஆர்.கன்னா 2,82,685

1987
1. ஆர்.வெங்கட்ராமன் 7,40,148
2. வி.ஆர். கிருஷ்ண அய்யர் 2,81, 550

1992
1. சங்கர் தயாள் சர்மா 6,75, 864
2. ஜி.ஜி.ஸ்வெல் 3,46, 485

1997
1. கே.ஆர்.நாராயணன் 9,56,290
2. டி.என்.சேஷன் 50,631

2002
1. ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
9,22,884
2. லட்சுமி சேகல்
1,07, 366

2007
1. பிரதிபா தேவிசிங் பாட்டீல் 6,38,116
2. பைரோன் சிங் ஷெகாவத் 3,31,306

2012
1. பிரணாப் முகர்ஜி    7,
13,7632. P.A. சங்மா               3,15,987
இவர்களுள்  ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை நீலம் சஞ்ஞீவரெட்டிக்கும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பெருமை கே. ஆர்.நாராயணன்(9,05,659) க்கும் உண்டு

Friday, July 20, 2012

தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.

இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
                              பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை  உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பல குடும்பங்களில் வறுமைக்கு எமன்.
                               அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசு என்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும் பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால் பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரை பூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
                                 விளக்கு வைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல் எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத் தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
                                 தயிர் சேர்க்கும் குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல் இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்று ஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரை தயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களே அப்படி!
                                 மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன் தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
                                 உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில் அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும் குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
                                 ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.

Thursday, July 19, 2012

வாழ்த்துகிறேன்...!

அன்பு முகமதிய நண்பர்கள் ரமலான் கடமையை சிறந்த முறையில் முடிக்க நான் மனமுவந்து வாழ்த்துகிறேன்...!

சிவ சங்கர் மேனன் கொழும்பில் என்ன பேசியிருந்திருப்பார்?

2009 மே மாத்திற்கு முன்னர் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ் சங்கர் மேனனனும் எம் கே நாராயணனனும் அடிக்கடி கொழும்பு சென்று இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதாகச் செய்திகள் வரும். அச்செய்திகளில் அவர்கள் இலங்கை இனப்பிரச்சனைக்கு போர் மூலாமாகத் தீர்வு காணமுடியாது என்று கூறவும்  போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் செல்வதாகக் கூறப்படும். ஆனால் இலங்கையின் இன அழிப்புப் போரில் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராயணனும் மிக முக்கிய பங்காளிகள் ஆவார்கள். இவர்கள் இலங்கைக்குப் பயணங்கள் மேற்கொண்டமை இலங்கையின் இன அழிப்புப் போரில் எப்படி இந்தியா உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆராயவும் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் முறைமை பற்றி மீளாய்வு செய்யவும் ஆலோசனை வழங்கவுமே. ஒரு கட்டத்தில் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் போரை நடாத்தி இந்தியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுங்கள் என இவ்விருவரும் சொல்லியதாகக் கூடச் செய்திகள் வெளிவந்தன.

சோனியா குடும்பத்தின் பாதுகாப்பு
இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் சோனியா காந்தியில் அரசு முனைப்புக் காட்டப்பட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 2009 மேமாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்தால் அதன் பின்னர் வரும் அரசு சோனியா குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்காவிடில் அவர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட திட சங்கற்பம் பூணப்பட்டது. போருக்குப் பின்னர் இந்தியா இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரில் புரிந்த போர்க்குறம் தொடர்பான தனது செய்மதிப் படங்களைக் காட்டி இலங்கையை மிரட்ட முற்பட இலங்கை பதிலுக்கு தம்முடன் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளைப் பதிலுக்குக் காட்டி இவையும் போர்க்குற்றத்திற்கு உடனதையாக இருந்தமைக்கான ஆதாரங்கள் என்று மிரட்டி இந்தியாவைப் பணிய வைத்தது. இதனால்தான் 2009ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையின்மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அது மட்டுமல்ல 2012 மார்ச் மாதம் நடந்த கூட்டத் தொடரில் அமெரிக்காவை அடுத்து நிற்பது போல் நடித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானதின் கடும் போக்கை குறைத்து இலங்கைக்குச் சாதகமாக்கியது.


கருணாநிதியை சந்தித்த மேனனும் நாராயணனும்
2009 மே மாதத்திற்கு முன்னர் சிவ் சங்கர் மேனனும் எம் கே நாராணனும் இலங்கை செல்ல முன்னர் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியைச் சந்திப்பதும் உண்டு. அப்போது வெளிவரும் செய்தி இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்ததாக இருக்கும். ஆனால் உண்மையில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படும் செய்தியால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாமல் செய்திகளை மூடி மறைப்பது, கொந்தளிப்பைத் தடுப்பது, மக்களைத் திசை திருப்புவது எப்படி என்பது பற்றியே இருக்கும்.

செய்தி வேறு உண்மை வேறு
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா சொல்வதும் செய்திகளாகக் கசிய விடுவதும் வேறு அதன் உண்மை நிலைப்பாடு வேறு. இந்தியாவின் இப்போதைய உண்மையான திட்டம் வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அங்கு தமிழர்களின் தேர்தல் வாக்கு பலத்தைக் குறைத்து அவர்களை மலையகத்தில் வாழும் தமிழர்கள் போல் ஆக்குவதுதான். இதன் பின்னர் எந்த ஒரு நாடும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன் வைத்து இலங்கையில் தலையிடாது. இதைச் செய்வதே இந்தியாவின் நோக்கமாகும்.

சிவ் சங்கர் மேனனின் பரம்பரைத் தொழில்
இந்தியாவை ஒரு பரம்பரை ஆண்டு கொண்டிருக்க இன்னொரு பரம்பரை அந்த ஆளும் பரம்பரைக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறது. சிவ் சங்கர் மேனனின் தாத்தா ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமானவர். சிவ் சங்கரின் தந்தை தந்தையின் சகோதரர் இப்படி இவர்கள் பரம்பரையும் இந்தியாவில் உயர் பதவிகளில் இருந்தார்கள். இக்குடும்பம் சீனாவிற்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது. சிலர் இவர்களைச் சீனக் கைக்கூலிகள் என்றும் கூறுவர். ஜீ பார்த்தசாரதி இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த போது இலங்கையில் அமெரிக்க ஆதிக்கம் ஏற்படாமல் இருப்பதில் அதிக அக்கறை கட்டி வெற்றி கண்டனர். சிவ் சங்கர் மேனன் புது டில்லியின் ஆலோகராக இருக்கும் போது சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்பி வருகிறது

 சிவ் சங்கர் மேனனின் பயணம்
 29-06-2012 இலன்று சிவ் சங்கர் மேனனின் 24 மணித்தியால இலங்கைப் பயணம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசு செய்யும் இழுத்தடிப்புக்கள் மீதான இந்தியாவின் அதிருப்தியை இலங்கைக்கு கடும் தொனியில் தெரிவிக்கவே என்று செய்திகள் வெளிவந்தன. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நாம் பாக்க வேண்டும். பிரேசில் ரியோ நகரில் நடந்த G-20 மாநாட்டின் பின்னர் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்த போது இந்தக் "கடும் தொனி" செய்தியை தெரிவித்திருக்கலாம்.  அப்போது தெரிவிக்காததை இப்போது தெரிவிக்க மேனன் இலங்கை சென்றாரா? இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் என்றால் அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கை செல்லாமல் இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் சென்றது ஏன்? இந்திய தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சென்றமையால் இப்பயணத்தின் முக்கிய நோக்கம் இந்திய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டமையே அன்றி வேறல்ல. 2012 மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கை இந்தியாவை ஓரம் கட்டுவதை அதிகரித்துள்ளது. இலங்கை போருக்கு உதவியமைக்கு பிரதி உபகாரமாக போர் முடிந்ததும் இலங்கை இந்திய இருதரப்பு வர்தக உடன்பாடு கைச்சாத்திடுவதாக இலங்கை இந்தியாவிடம் வாக்குறுதி அளித்திருந்தது. இலங்கையிடம் சமர்ப்பிக்கப்ப ட்ட இந்த உடன்பாட்டில் இதுவரை இலங்கை கையொப்பமிடவில்லை. திருமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்த குத்தகையை இரத்துச் செய்வது பற்றி இலங்கை தீவிரமாக ஆராய்கிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா முன் வந்ததை இலங்கை நிராகரித்து விட்டது. மன்னார் எண்ணெய் வள ஆய்வில் இந்தியா புறக்கணிக்கப்படுகிறது. சம்பூர் அனல் மின்னிலையத்திலும் இந்தியா ஏமாற்றப்பட்டுள்ளது. இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவைப் புறக்கணிப்பதும் சீனாவுடன் உறவை வளர்ப்பதிலும் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது. இது இந்தியப் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால்தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவ் சங்கர் மேனன் இலங்கை சென்றார். அவர் அங்கு உண்மையில் பேசியவை தொடர்பான செய்திகள் வெளிவராது.

தனது சந்திப்பு தொடர்பாக மேனன் கூறியமை:
 "I discussed recent developments, bilateral relations and areas of common concern. I was also briefed about steps being taken by the government of Sri Lanka on political reconciliation and settlement. While this is a Sri Lankan issue and something that Sri Lanka has to do, we will continue to remain engaged with all concerned and offer any support required in this regard. My visit to Sri Lanka today has been in the context of regular consultations and exchange of views between the government of India and the government of Sri Lanka. We agreed that fishermen's associations on both sides, which had met in the past and reached some understandings, needed to meet again to work on developing this further. This could then serve as the basis for finding a solution to this humanitarian issue," he said.

 பழைய பல்லவியில் ஒரு புதிய சாகித்தியம்
சிவ் சங்கர் மேனன் தனது வழமையான "இலங்கைய பிளவு படாத ஒரு நாடாக வைத்திருக்க இந்தியா எப்போதும் உதவும்" என்னும் பல்லவியை இம்முறையும் பாடத் தவறவில்லை. ஆனால் மேனன் இம்முறை தனது வழமையான பாடலிற்குப் புது சாகித்தியத்தை இணைத்துள்ளார். அது இலங்கை தனது மக்களின் மனித உரிமைகளைப் பேணவேண்டும் என்பதே. இது ஹிலரி கிளிண்டன் அக்காவின் வேண்டுகோளாகத்தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் பாடும் 13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார் என்ற பாடலை மேனன் இசைக்கவில்லை. அந்தப் பாடலுக்கான இசையமைப்பும் வரிகளுக்கும் சொந்தக்காரனே மேனன்தான். இந்திய அரசியல்வாதிகளையும் தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்ற புதுடில்லியின் தென்மண்டல பூனூல் கும்பலும் கொழும்பும் இணைந்து உருவாக்கிய பாடல்தான் "13இற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதாக மஹிந்த ராஜபக்ச என்னிடம் வாக்குறுதியளித்தார்".

உதவிக்குப் பதில் ஏமாற்றம்
இப்போது இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை முந்திவிட்டது. இந்த ஆண்டில் இந்தியா 740.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகும். ஜப்பான் 12.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 102.5 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை ஏமாற்றும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாமிடம் வகிக்கிறது. இதைப் பல சிங்கள அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தெளிவுபடக் கூறியுள்ளார்கள்.

ஏன் இந்தத் தமிழின விரோதி
சிவ் சங்கர் மேனன் இலங்கை செல்கிறார் என்ற செய்தி வந்தவுடன் இந்திய வால்பிடித் தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கை அரசு தமிழர் பிரச்சனையில் காட்டும் அசமந்தப் போக்குத் தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியைக் கடுமையான தொனியில் தெரிவிக்கப்  போகிறார் என்று செய்திகள் வெளிவிட்டன. இந்திய உளவுத்துறை தினமணியில் இப்படிப் பொய்ச் செய்தியை வேண்டுமென்றே கசியவிட அதை பிரதி செய்து பல இணையத் தளங்களும் தம்மை அரசியல் விமர்சகர்கள் என்று நினைப்போரும் (முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த காளான்கள்) பிரசுரித்தனர். இலங்கையில் வாழ் தமிழர்களின்மேல் அக்கறை இருந்தால் இந்தியா தமிழர்களின் நலன்களில் அக்கறை உள்ள ஒருவரை இலங்கைக்கு அனுப்பியிருக்கும். அதை விட்டு தமிழின விரோதியும் தமிழின அழிப்புப் போரின் முக்கிய பங்காளியுமான பாலக்காட்டானை இலங்கைக்கு  அனுப்பியது ஏன்?

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...