தயாநிதி, தயாநிதி என்று ஒரு மாறன் இருந்தாரே -
அவரை நினைவிருக்கிறதா ?
அநேகம் பேருக்கு இந்த விஷயமே மறந்திருக்கும்.
இது தான் நம் நாட்டில் வாடிக்கை.
எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் -
மக்கள் மறந்து விடுவார்கள் -
அரசியல்வாதிகள் மக்களின் மீது வைத்திருக்கும்
இந்த நம்பிக்கை அநேகமாக வீண் போவதில்லை !
2ஜி விவகாரத்தில் தயாநிதி மாறனும்
சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் அவர் மீதும் வழக்கு
இருக்கிறது என்பதும் பலருக்கும் மறந்திருக்கும்.
நேற்று 2ஜி விஷயம் பாராளுமன்ற கூட்டுக் குழுவின்
முன்னர் விசாரணைக்கு வந்தபோது -
சிபிஐ டைரெக்டர் ஏ.பி.சிங் அதன் முன் விளக்கம்
அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
பிஜெபி உறுப்பினர் யஸ்வந்த் சின்ஹா
வழக்கு பதிவு முன்னரே ராஜாவை கைது செய்தீர்களே -
வழக்கு பதியப்பட்டு இத்தனை மாதங்கள் ஆன பின்பும்
தயாநிதி மாறனை இன்னும் கைது செய்யாமல்
இருப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார்.
சிபிஐ டைரெக்டரிடம்
இருந்து சரியான விளக்கம் இல்லாத நிலையில்,
குழு உறுப்பினர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து,
தயாநிதி மாறன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு
மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இப்படி அறியாத சிறு பிள்ளைகளாக
இருக்கிறார்களே இவர்கள் !இவர்கள் சொன்னால் அவர் கேட்டு விடுவாரா ?
“Aunty” இருக்கும் வரை தயாநிதியை யாரும்
தொட முடியுமா ?
(பி.கு.- சாதிக் பாட்சா, சாதிக் பாட்சா என்று
ஆ.ராஜாவின் நண்பர் ஒருவர் இருந்தாரே – அவரை
யாருக்காவது இன்னும் நினைவிருக்கிறதா ?
அவர் கொலை செய்யப்பட்டு இறந்தாரா
அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்று
கண்டு பிடிக்கும் விஷயமும் இன்னும் சிபிஐ யின்
“பரிசீலனை”யில் தான் இருக்கிறது !
எல்லாவற்றிற்கும் “நேரம்”,”காலம்” வர
வேண்டும் அல்லவா !)
No comments:
Post a Comment