Sunday, July 8, 2012

பிறர் தலைமையின் கீழ் செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங்-அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை விமர்சனம்

அமெரிக்கா டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிய பதிப்பு புத்தகத்தில், பிறர் தலைமையின் கீழ் செயலாற்றும்  பிரதமர் மன்மோகன் சிங் என்ற விமர்சனம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
 பிறர் தலைமையின் கீழ் செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங்-அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை விமர்சனம்
கடந்த எட்டு வருடங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதம மந்திரியான மன்மோகன் சிங் உலக அரங்கில் அரசியல் நிலைத்தன்மை, சமுதாய ஒற்றுமை, பன்னாட்டு ஒருங்கிணைப்பு,பொருளாதார வளர்ச்சி, மற்றும் உலக விசயங்களில் அக்கறை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இது அவருடைய சொந்த சுய சிந்தனையால் நடந்தவை அல்ல என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
 
இது டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் 'பிறர் தலைமையின் கீழ் செயலாற்றும் தலைவர், இந்தியா மீண்டும் தூண்டப்படவேண்டும்' என்ற விமர்சனத்தால் காங்கிரஸ் கட்சியானது  நாட்டில் பலகட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
 
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான எந்தவித சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் மன்மோகன் சிங்கை மேலும் சாடியுள்ளது.
 
தற்போது அவரது தலைமையின் கீழ் செயல்படும் மந்திரிகளை கட்டுப்படுத்த முடியாத மன்மோகன் சிங்குக்கு மேலும் ஒரு நிதித்துறை பொறுப்பை ஏற்றுள்ள அவர் எவ்வாறு சீர்திருந்தன்களை கொண்டு வருவார் என்றும் சாடியுள்ளது.
 
முன்பு இதே டைம்ஸ் பத்திரிக்கையில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வர்த்தகம், கட்டுமானம்,பாதுகாப்பு மற்றும் குறிப்பாக குஜராத் மக்களிடையே ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த செய்திகளை தெரிவித்திருந்த நிலையில்  தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமரான மன்மோகன் சிங் ஆட்சியில் லஞ்சம், ஊழல்,ஏமாற்றம், நம்பிக்கையின்மை  மற்றும்,ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஆகியவவை குறித்த செய்திகளை ஒப்பிட்டு  பி.ஜே.பி தலைவர் தருண் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
பி.ஜே.பி.யின் இந்த விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.மேலும் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இருவரிடையே ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று  மற்றொரு காங்கிரஸ் தலைவர் சுருக்கமாக பதிலளித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...