இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு சென்னை வருகிறார். திங்கட்கிழமை காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் கணித மேதை ராமனுஜத்தின் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக பயணமே ஒட்டுமொத்த மோசடி பயணம். அரசு விழாக்களுக்கு இடையே இரண்டு தனியார் விழாக்கள் நடக்கிறது. அதற்குதான், இரண்டு அரசு விழாக்களையே ஏற்பாடு செய்திருக்கிறார் ‘சிவகங்கை சின்னபையன்’ப.சிதம்பரம்
காரைக்குடி செல்லும் பிரதமர் அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரைக்குடியில் கட்டப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை ஆகிய இரண்டையும் திறந்து வைக்கிறார். ஏற்கனவே, திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு மருத்துவமனைகளை மீண்டும் திறப்பதற்கு வருகை தந்திருப்பது ஒரு மோசடி தானே.
எப்படி இந்த மோசடி நடக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரிக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலத்தை, வங்கியில் கடன் பெற்று திவால் ஆனவர் என்று சொல்லப்பட்ட நபரிடமிருந்து சிதம்பரத்தின் சகோதரியும், சகோதரியின் மகனும் வாங்கியிருக்கிறார்கள். அதை விசாரித்தால், பல விவகாரங்கள் அம்பலத்துக்கு வரும்.
இந்த நிலத்தில்தான் 9 ஏக்கர் நிலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒன்றரைஏக்கர் நிலம் வாசன் கண் மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மருத்துமனைகளும் சிதம்பரத்தின் குடும்பத்திற்காக கட்டப்பட்டவை
சிதம்பரத்தின் மருமகள் டாக்டர் ஸ்ரீநிதிக்காக அப்பல்லோ குழுமம் காரைக்குடியில் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை கட்டிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மளமளவென உருவாகி வரும் வாசன் கண் மருத்துவமனையின் குழுமத்தையே கார்த்திக் சிதம்பரம் தான் நடத்துகிறார்
இந்த இரு மருத்துவ மனைகளைத் திறப்பதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துவந்திருக்கிறார். காரணம், மத்திய அமைச்சரவையிலிருக்கும் ப.சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது இமேஜை நிலை நிறுத்திக் கொள்ள இப்படியொரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்து வருகிறார் என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏன் பிரதமரை அழைத்து தாஜா செய்கிறார் என்றால், காங்கிரஸில் நடக்கும் உள்குத்து மோதலில் ப.சிதம்பரத்தை காலி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ப.சி.க்கு யாருமே ஆதரவு அளிக்க வரமாட்டார்கள். தனக்காக சோனியாவிடம் பேசக்கூடியவர் மன்மோகன் சிங் மட்டுமே, என்பதால், அவரை தாஜா செய்துக் கொண்டிருக்கிறார்