என்(ன) குடும்பம் இது..?
சிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன்
சிறையிலிருந்து “ஜாமீனில் “ வெளிவந்த பிறகு...அப்பாவே “ஏர்போர்ட் “ சென்று வரவேற்றதை புரிந்து கொள்ள முடியவில்லையே---
அரசியலில் இதெல்லாம் சஹஜமப்பா--என்பதா?..
தாரை தப்பட்டை--பாண்டுவாத்யங்கள்---
ஒயிலாட்டம்..கரகாட்டம்---”சிறை
என தடபுடலான..”பிளக்ஸ் ..போர்டுகளுடன்”--வரவேற்பு..
அப்பாவும் மகளும் அருகருகே காரில் அமர்ந்திருக்கும் “போஸுடன் “பத்திரிக்கையில் படங்கள்..
இவையெல்லாம் என்ன கொலை பாதகங்களா?--
வரவேற்க போகக்கூடாதா?--
பத்திரிக்கையில் படங்களே வரக்கூடாதா?---
-சரி..இப்படி கேள்வி கேட்பது தவறானவையா?--
நம் வீட்டில் வெளியூரிலிருந்து வரும் நம் குடும்பத்தினரை கூப்பிட்டு வர..ரயில் நிலையம்--ஏர்போர்ட்டுக்கு நாம் செல்வோம்.இது வரவேற்க அல்ல..அழைத்து வர...ஒருவேளை நாம் இல்லாவிட்டால்..ஓட்டுனரை அனுப்புவோம் வண்டியுடன்.அதுவும் இயலாவிட்டால் அவர்களே வாடகை வண்டியில் வீடு வந்து சேர்வர்..
அதுதானே வழக்கம்..
கருணாநிதி குடும்பம் வித்தியாசமானது...தகப்பன்..---
அப்பனை..மகன்கள்..மகள்..பார்க்
பேரக்குழந்தைக்கு..தாத்தாவை காட்டுவதெல்லாம் டி.வி.க்கள் மூலமே நடைபெரும்..
ஒருவேளை கருணாநிதி முதலமைச்சராகவும் கனிமொழி மத்திய அமைச்சராகவும் இருந்திருந்தால் வரவேற்க செல்வது “பதவி நிமித்தமாக “ என்று சொல்லலாம்.
இது “உறவு நிமித்தமாக” என்றால் --நம் நாட்டில் எந்தக் குடும்பத்தில் இப்படி நடக்கிறது...கிடையாதே..
ராகுல் காந்திகூட சோனியாவை வரவேற்க ஏற்போர்ட் போவதில்லையே..
விஜயகாந்தை வரவேற்க பிரேமலதா செல்வதில்லயே..
”ஜெ”யை வரவேற்க “சசி “ செல்வதில்லையே..(எப்போதும் ஒருவரை
விட்டு ஒருவர் பிரிவதில்லை எனபது வேறு விஷயம் )..
பணத்தாலே--பதவியாலே மட்டும் கட்டுண்டுள்ள குடும்பத்தில்
..”வரவேற்புக்கள் “நிகழ்த்தப்படாவிட்டால்..உறவு
ராசாத்திக்கள்--ராட்சசிக்களாக மாறுவர்..
அம்மாக்கள் அதிருப்தி அடைவர்...
சகோதர சகோதரிகள்..சதுராடுவர்---
அப்படி ஒரு விஷப் பரிட்சை நடத்தும் நிலையில் கருணாநிதி இன்று இல்லை...
தடபுடல் வரவேற்பு --கருணாநிதியின் இடர்களை சரிசெய்யவே..
இது என்ன குடும்பம் என்கிறீர்களா?--இதுதான் அவர் குடும்பம்..
No comments:
Post a Comment