Tuesday, December 6, 2011

செம்மொழியாம் தமிழ்....

"வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக வேண்டும்
செம்மொழியாம் தமிழுக்கு
எம்மொழியும் ஈடில்லை
செந்தமிழ் தழைத்தோங்க
சங்கத்தமிழ் எங்கும் ஒலிக்க
உரத்துப்  பேசுவோம்
எங்கும் தமிழில்
எதிலும் தமிழில்
தமிழ் வாழ்க
தமிழ் வெல்க"
மூச்சு  வாங்க
பேச்சை முடித்து
மேடையை விட்டு கீழிறங்கி 
"நைட்டுக்கு மட்டன் பிரியாணி,
சிக்கன் 65, பிஷ் பிரை அப்படியே
ஒரு குவார்ட்டர் சொல்லிடு"
என்றார் சுத்தத்  தமிழில்
பேச்சாளர் தன் உதவியாளரிடம்...
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...