Thursday, December 8, 2011

தமிழனிடம் ஒற்றுமையில்லை...???

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு....

அதுபோல..தமிழனுக்கு சுற்றுவட்டாரமெல்லாம் செருப்பு ..என்று சொல்லலாம்...

காவிரி பிரச்னையில்..உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்தாமல்..எப்போதெல்லாம் கர்நாடகாவில் மழை அதிகமாகி அணை நிரம்புகிறதோ..அப்போது மட்டுமே நமக்குக் கிடைக்க வேண்டிய 205 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது...நீதிமன்ற ஆணையை கெசட்டில் பிரசுரிக்க தமிழக அரசு கேட்டும்..மைய அரசு செயல்படவில்லை.வழக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சரி..அடுத்த மாநிலமான கேரளாவைப் பார்த்தால்..அவர்களோடும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் சர்ச்சை.இங்கும் உச்ச னீதி மன்ற ஆணை செயல்படுத்தாமல்..கேரள அரசு புது அணை கட்டுவேன்..என்கிறது..நீர் மட்டம் 120 அடிக்கு மேல் கூடாது என்கிறது.

.சர்ச்சைகள் உள்ள நிலையில்..அடுத்த மாநிலம்..திடீரென பாலாற்றில் அணை கட்டுவோம்..அதற்கு யார் அனுமதியும் தேவையில்லை என்கிறது.

எது எப்படியோ..இந்த விவகாரத்தில் அப்பாவி தமிழக விவசாயிகளும்..மக்களுக்கும் சொல்லமுடியா துயரங்கள்.

இது இப்படியெனில்...

நமது மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால்...இலங்கை மீனவர்களாலும்..கடற்படையாலும் சிறை பிடிக்கப் படுகின்றனர்..நம் மீனவர்கள் இந்தியர்கள்..சொல்லப்படுவதோ தமிழக மீனவர்கள்.

இலங்கையில் தமிழ் பேசும்..இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட முன்னோர்கள் அங்கு தோட்ட வேலைகளுக்குப் போய் குடியேறினார்கள்.அவர்கள் இலங்கை அரசால் கொடுமைக்கும்..உயிரிழப்புக்கும் ஆளான போதும்...இலங்கை இந்தியர்கள் என்று சொல்ல நம்மவர்களுக்கு மனமில்லை..இலங்கை தமிழர்கள் என்கின்றனர்.

ஆக மொத்தத்தில் தமிழனை ஒரு இந்தியனாக நினைப்பதில்லையோ...இந்தியன் எனப்படுபவர்கள்?

ஒரு கவிதை...

போர் மூளும் போதும்
கிரிக்கெட் விளியாடும் போதும்
மட்டுமே
இந்தியன்..இந்தியானாய்
இருக்கிறான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...