“சிறை பட்டது நீ -
வதை பட்டது நாங்கள் ” !!!
இன்றைய செய்தித்தாள்களிலிருந்து
சில செய்திகள் -
முதலில் புகைப்படங்கள் -
பின்னர் செய்திகள் -

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்,
சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்த
கனிமொழிக்கு, தாரை, தப்பட்டைகள் முழங்க,
சென்னை விமான நிலையத்தில், தி.மு.க.,
தலைவர் கருணாநிதி தலைமையில் வரவேற்பு
கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று மணி நேரம், பேண்டு வாத்தியங்கள்
முழங்கியதாலும், தி.மு.க.வினரின் நெரிசலாலும்,
விமான பயணிகள்
கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கிண்டி முதல் விமான நிலையம் வரை, கனிமொழியை
வரவேற்று ஏராளமான
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
கனிமொழியை வரவேற்க, காலை 10 முதலே
கட்சியினர் வரத் துவங்கிவிட்டனர். உடனடியாக,
காதை கிழிக்கும் சத்தத்துடன் பாண்டு வாத்தியமும்
முழங்கத் துவங்கின.
இதனால், விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட
எந்த அறிவிப்பும், பயணிகளுக்கு கேட்கவில்லை.
பயணிகள் பதட்டத்துடன் உள்ளே சென்றனர்.
பல பயணிகள்,
காதுகளை மூடிக் கொண்டு, வாத்திய கோஷ்டி
நின்றிருந்த இடத்தை அவசரமாக கடந்தனர்.
சி.ஐ.டி., காலனியில் கலக்கல்: பகல் 12 மணியில்
இருந்தே, கனிமொழியின் வீடு அமைந்துள்ள சி.ஐ.டி.,
காலனியில், கட்சித் தொண்டர்கள் திரள ஆரம்பித்து
விட்டனர். மேள தாளங்கள் முழங்கின. பறையாட்டம்
காதைப் பிளந்தது.
சர வெடி பட்டாசுகள்,
பட்டையைக் கிளப்பின. முருகன், அசுரர்கள்,
பூதங்கள் போல வேடமிட்டவர்கள் ஆடினர்.
“சென்னை சங்கமம்’
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் நிறைய பேர், தத்தம்
திறமைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
சி.ஐ.டி., காலனி வீட்டில், பூக்களால் வரவேற்பு
வளைவு அமைக்கப்பட்டிருந்தது. வாசலை நிறைத்து,
பெரிய கோலம் போடப்பட்டிருந்தது.
மதியம் சரியாக,
2.25க்கு தந்தை கருணாநிதி, தாய் ராஜாத்தியுடன்
ஒரே காரில், வீடு வந்து சேர்ந்தார் கனிமொழி.
திருஷ்டி சுத்தி போடப்பட்டது.
பூசணிக்காய் உடைக்கப்பட்டது.
வீட்டுக்குள் எல்லாரும் நுழைந்துவிட,
கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சரவண பவன்
ஓட்டலில் இருந்து, ஆயிரம் பேருக்கு சைவச் சாப்பாடு
வரவழைக்கப்பட்டிருந்தது.
தனியே ஆயிரம் பேருக்கு அசைவ சாப்பாடும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
“எங்கேயாவது மண்டபத்தில் சாப்பாடு போடுவார்கள்
என்று நினைத்திருந்தோம். வீட்டிலேயே போட்டார்கள்.
சாப்பாடு ரொம்ப நன்றாக இருந்தது” என்று
வந்திருந்தவர்களில் சிலர் சொன்னார்கள்.
-செய்தி முடிந்தது !
பின்குறிப்பு -
இவ்வளவு மெனக்கெட்ட பத்திரிகைகள்
இன்னும் சிறிது சிரமம் எடுத்துகொண்டு -
நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், ஊழல்
ஆகிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டு ரிலீஸ் ஆன
திமுக தொண்டர்கள் அனைவருக்கும் இதே போன்ற
வரவேற்பு அளிக்கப்படுமா என்றும்
திமுக தலைமையிடம் கேட்டு அறிவித்து
இருக்கலாம்.
விமான நிலையத்திலும், சிஐடி காலனி வீட்டிலும்
தாரை, தம்பட்டை, பேண்டு வாத்தியங்கள்,
பறையாட்டம், சர வெடி பட்டாசுகள்,
முருகன், அசுரர்கள், பூதங்கள் (!!!),
சரவண பவன் ஓட்டலில் இருந்து,
ஆயிரம் பேருக்கு சைவச் சாப்பாடு,
தனியே ஆயிரம் பேருக்கு அசைவ சாப்பாடு -
அனைத்திற்கும் திமுக கட்சி நிதியிலிருந்து
நிதி ஒதுக்கப்பட்டு இருந்ததா
அல்லது டெல்லியிலிருந்து
கொள்கை பரப்பு செயலாளர் “ராஜா” வே
ஏற்பாடு செய்திருந்தாரா என்பதையும்
சிரமம் பார்க்காமல்
விசாரித்தறிந்து போட்டிருக்கலாம்.
முக்கியமாக திருஷ்டி சுத்திப் போடவும்,
பூசணிக்காய் உடைக்கவும் யார் ஏற்பாடு
செய்திருந்தார்கள் என்றும் கேட்டறிந்து
போட்டிருக்கலாம்.

No comments:
Post a Comment