நதி நீர் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியசாமி, இதுகுறித்து திடீரென உண்ணாவிரதமிருந்த ரஜினி தற்போது தூங்கி கொண்டுள்ளார். அவரிடம்போய் கேளுங்கள், என, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கிண்டலாக தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: 2006 பிப்., 23ல் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இன்றும் அமலில் உள்ளது. இதற்கு தடை விதிக்கப்படவில்லை. நீர் மட்டத்தை உயர்த்தும் ஷட்டர் தமிழகத்திற்குள் உள்ளது. தேர்தலை காட்டி, ஜெயலலிதாஉத்தரவை அமல்படுத்தாமல்விட்டார். பின் வந்த கருணாநிதியும் நடவடிக்கை எடுக்கவில்லை.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ராஜாவும் வனவிலங்குகளை காட்டி, நீர் மட்டத்தை உயர்த்தநடவடிக்கை எடுக்க தயங்கினார். பெரியாறு அணை அமைந்தபகுதியை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்ததயாராக இருப்பதாக கேரள முதல்வருக்கு முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுத வேண்டும். பேச்சுவார்த்தையின் போது,தமிழகத்திற்கு உரிய பங்கீடு பெற வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்டுவது குறித்துவிவாதிக்கலாம். அணைகட்டினால், தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்உத்தரவின்படி உரிய பங்கீடு கிடைக்கும் வகையிலும், நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் வகையிலும் கட்ட வலியுறுத்தலாம். புதிய அணையை மத்திய அரசு கட்டி கொடுக்கவேண்டும். இப்பிரச்னையை இரு மாநிலங்களிலும் தூண்டி விட்டு, அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.
நீர்மட்டத்தை குறைக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, கேரள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க., எம்.பி., கனிமொழி விடுதலையாகவில்லை. ஜாமினில் வெளிவந்தவருக்கு தடபுடல் வரவேற்பு கொடுப்பது வெட்ககேடு. அவரது ஜாமினை ரத்து செய்ய சி.பி.ஐ., மனு செய்ய வேண்டும்.இந்த ஊழலில் முன்னாள் மத்தியஅமைச்சர் ராஜாவுக்கு இருக்கும் பங்கு, மத்தியமைச்சர் சிதம்பரத்திற்கும் உண்டு. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை 2008ல் 2001 விலைக்குவிற்றதில் சிதம்பரத்திற்கும் பங்கு உள்ளது. அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்றார்.
ரஜினியிடம் கேளுங்கள்:சாமி கிண்டல்:நதி நீர் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியசாமி, ""நான் ஏற்கனவே மத்தியமைச்சராக இருந்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தேன். அதன்பின் வந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து திடீரென உண்ணாவிரதமிருந்த ரஜினி தற்போது தூங்கி கொண்டுள்ளார். அவரிடம்போய் கேளுங்கள்,'' என, கிண்டலடித்தார்.
No comments:
Post a Comment