Sunday, December 4, 2011

கனிமொழி ஜாமீன் மீது எழும் ஒரு அடிப்படைக் கேள்வி


கனிமொழி ஜாமீனில் வெளிவந்துவிட்டார். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என பல ஏடுகள், சட்ட நிபுணர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். யாராக இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளி என கருதமுடியாது. ஆகவே, குற்றச்சாட்டு பதியப்பட்டதும் சிறையில் அடைத்து வைப்பது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட ஜாமீனில் விடுவிப்பது நியாயமானது, சரியானது என முன் வைக்கப்படுகிற வாதங்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த சட் டத்தின் ஆட்சி, எல்லோருக்கும் சமமாக வழங்கப்படுகிறதா? என்பதுதான் அடிப்படையான கேள்வி.

இந்தியா முழுவதும் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் விசாரணைக் கைதிகளாக சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் கணிசமான பகுதியினர் பல ஆண்டுகளாக எந்த விசாரணையும் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இப்படி விசாரணை கைதிகளாக உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 24 ஆயிரத்தை தாண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இது மொத்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கையில் 15 விழுக்காடாகும்.

தமிழ்நாட்டு சிறைகளில் ஆண்டுக்கு சராசரியாக 70 பேர் உயிரிழக்கின்றனர். இதில் பல பேர் சித்ரவதை காரணமாக உயிரிழக்கின்றனர் என்பதும் இன்னும் பல பேருக்கு போதுமான மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழக்கின்றனர் என்பதும், சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பொதுவாக சிறைக்கைதிகளை பற்றி நீதிபதி கிருஷ்ணய்யர்  “வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள், அப்படி கொள்ளையடித்ததின் காரணமாகவே பணக்காரர்களாக இருப்பதால் சிறையில் `பி’ வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் பெயர் தெரியாத சாதாரண மனிதர், அவர் இந்திய சாமானிய மக்களில் ஒருவராக இருப்பதால் `சி’ வகுப்புச் சிறையில் இருக்கிறார்” என்று கூறுகிறார்.  “ பட்டப் பகல் திருடர்களை பட்டாடைதான் மறைக்கிறது,  ஒரு பஞ்சையைத்தான் திருடன் என்று ஊரு கூடி உதைக்குது” என்று பட்டுக்கோட்டையார் பாடியது நிஜம்தானே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...