ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, கண்டிஷனில் வெளிவந்திருக்கும் கனிமொழிக்கு- தாரை தப்பட்டைகள் ஒலிக்க…..
காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பாண்டு வாத்தியங்களும், செண்டை மேளங்களும் முழங்க….
கிண்டி முதல் விமான நிலையம் வரை, ஏராளமான வரவேற்புப் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் என ஜொலிக்க…..
“இனி நீ பூங்கொடியல்ல…… போர்க்கொடி!”….. “கங்கை கொண்டாள் கடாரம் வென்றாள்”….. எனக் கோஷங்கள் கிழிக்க…..
சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உற்றார் உறவினர்கள் புடைசூழ……
அசத்தலான வரவேற்பு அம்மையாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!
எப்படி இப்படி ஒரு யோசனை இவர்களுக்கு வந்தது என்று தெரியவில்லை.
உணர்ந்து திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்று நினைக்காமல், ஊழலை மேலும் செய்வதற்கு ஊக்குவிக்கிறார்களே?……
பஸ்சில ஒருத்தன் நம்முடைய பாக்கெட்டுல 5 ரூபா பிக்பாக்கெட் அடிச்சாலே, நாம எவ்வளவு கோபப்பட்டு அவனை அடிக்கிறோம்? ஆனா…. நம்முடைய சொத்து 1,76,000 கோடி ரூபாயைக் கொள்ளையடிச்சவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு அசிங்கமில்லையா?……
அ.தி.மு.க. ஆட்சியிலேயே இப்படின்னா…….. ஒருவேளை இவங்க ஆட்சியா இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?…..
கனிமொழிக்கும் ஒரு ஹர்வீந்தர் சிங் இல்லாமல் போய்விட்டானே?…….. (நானே எழுதுவதற்குக் கூச்சப்பட்ட விமர்சனம் இது).
இப்படியெல்லாம் எழுகிற பொதுமக்களின் விமர்சனங்களை எப்படி இவர்கள் எதிகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை? இதோடு மட்டும் இந்தக் கூத்து முடிந்து விடவில்லை…..
பகல் 12 மணியில் இருந்தே, கனிமொழியின் வீடு அமைந்துள்ள சி.ஐ.டி. காலனியில் கட்சித் தொண்டர்கள் திரள ஆரம்பித்துவிட்டனர்.
மேள தாளங்கள் முழங்கின. பறையாட்டம் காதைப் பிளந்தது. சரவெடி பட்டாசுகள் பட்டையைக் கிளப்பின…..
சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் நிறையப் பேர், தத்தமது திறமைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். முருகன், அசுரர்கள், பூதங்கள் போல வேடமிட்டவர்கள் ஆடினர்.
வீட்டுக்கு முன்புறமாகப் பூக்களால் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. வாசலை நிறைத்து, பெரிய கோலம் போடப்பட்டிருந்தது.
கனிமொழி வந்து சேர்ந்ததும், திருஷ்டி சுத்திப் போடப்பட்டது….. பூசணிக்காய் உடைக்கப்பட்டது…… (பகுத்தறிவு வாசம்?)
வந்திருந்த அனைவருக்கும் சரவண பவன் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட சாப்பாடு பரிமாறப்பட்டது…… (ஓட்டுப் போட்ட மக்களுக்கு ரேசன் அரிசி…… ‘ஓ’ போட்ட இவங்களுக்கு சரவணபவன் சாப்பாடு!)
இதில்லாமல்…. கட்சியில் பதவி வேறு கொடுக்கப் போகிறார்களாம்….. (தி.மு.க.வில் பதவி பெற, இப்படி ஒரு தகுதி வேண்டுமோ?)
“மிசா” எல்லாம் மிஸ்ஸிங்…… ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் “புஸ்ஸிங்”….
கடவுளே….. நீ மட்டும் இருந்தால்….. முதலில் இந்தக் கருமங்களில் இருந்து, பாவப்பட்ட இந்தத் தமிழகத்தைக் காப்பாற்றப்பா!
(இதற்கு முன்னால் நான் பதிவு செய்த “கனிமொழிக்கு ஒரு கடிதம்” என்பது…… அவர் மேல் உள்ள அக்கறையின்பால் எழுதியது.
ஆனால், இந்தப் பதிவு….. தனது வரவேற்பின் மூலம் அவராகப் பொதுமக்களிடமிருந்து சம்பாதித்துக்கொண்ட வெறுப்பு, கோபம், அசிங்கம், அநாகரிக விமர்சனங்கள்….. போன்றவற்றின் வெளிப்பாடு!).

No comments:
Post a Comment