Thursday, December 15, 2011

பொதுஇடத்தில் கமிஷ்னர், கலெக்டரை மிரட்டிய விஜயகாந்த்... மதுரையில் நடந்த நிஜசம்பவம்


 

தேமுதிக-வை கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமணத்தில் கலந்துகொள்ள மதுரை சென்ற விஜயகாந்த், திருமணத்திற்கு வந்த கட்சியின் பிளெக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி மறுத்த காரணத்திற்காக, மணமேடையில் வைத்தே மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும், கொஞ்சம் கூட நாகரிகமற்ற முறையில் பெயர்களை உச்சரித்து, மிரட்டலோடு பேசியிருக்கிறார். 

கடந்த காலங்களில் மதுரையும், அங்கு வாழும் மக்களும் நிம்மதியற்று இருந்த நிலையில், ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களின் சுவாசக்காற்றை சுகமான, சுதந்திரத்துடன் பரவச்செய்த பெருமை, இப்போதுள்ள கலெக்டரையும், கமிஷனரையும் மட்டுமே சேரும்.

மக்கள் நன்மைக்காக வேலை செய்து வருபவர்களை, எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், விமர்சனப்படுத்தியுள்ளது அவருக்கும் சரி, அவரது கட்சிக்கும் அழகல்ல. பிளெக்ஸ் போர்டுகள் நகரெங்கும் ஆக்கிரமித்தால், போக்குவரத்தில் எவ்வளவு பிரச்னை ஏற்படும் என மதுரைக்காரரான விஜயகாந்துக்கு ஏன் புரியவில்லை. 

சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, 8 கி.மீ., தூரத்திற்கு பிளெக்ஸ் மற்றும் டியூப் லைட் அலங்காரம் செய்திருந்த அமைச்சர் உதயகுமாரை, முதல்வர் அழைத்து கண்டித்ததோடு, அவரையும் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். மக்களை பாதிக்கும் வீண் ஆடம்பரங்களை அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு திருமண நிகழ்வுக்காக வரும் தலைவரை வரவேற்க, நகர் முழுக்க பிளெக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததில் என்ன அநியாயம் நடந்துவிட்டது? தங்கள் தலைவர் வருகையை முன்னிட்டு, கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யுங்கள் அனுமதி கொடுப்பர்; ஏழை மக்களுக்காக மருத்துவமுகாம் நடத்துங்கள், அனுமதி கொடுப்பர்; ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் முகாம் நடத்துங்கள்; அனுமதி கொடுப்பர். வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யுங்கள்; அனுமதி கொடுப்பர். அதைவிடுத்து, 

நகரையும், நகர் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு ஆடம்பர ஆர்ப்பாட்டத்திற்கும் இவர்களிடம் அனுமதி கிடையாது என்பதே உண்மை. 

கலெக்டரையும், கமிஷனரையும் கண்டித்துள்ள விஜயகாந்த், "ஆயிரம் கைகள் சேர்ந்தாலும், ஆதவனை மறைக்க முடியாது' எனக் கூறியுள்ளார். உண்மை தான்; ஆனால், இருள் சூழ ஆரம்பித்து விட்டால், அந்த ஆதவன், தானாகவே மறைந்துவிடுவான் என்பதையும் விஜயகாந்த் அறியவேண்டும். அடுத்த முதல்வராக ஆசைப்படும் விஜயகாந்த், எல்லாவற்றையும் நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் நல்லது.

பொருப்புணர்வுடன் நடந்துக்கொள்ளும்
மதுரை காவல்துறை கமிஷனர் திரு. கண்ணப்பனையும், கலெக்டர் சகாயத்தையும் இந்த நேரத்தில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...