Saturday, December 17, 2011

உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்!


இந்நேரம் என்.டி.டிவியில் ஹாட் நியூஸ் இதுவே. “நான் மிகவும் ஆழமாக காயமடைந்திருக்கிறேன்” என்று  பாராளுமன்றத்தில் திருவாளர் பரிசுத்த சிதம்பரம் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார்.

புதுதில்லியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீதான வழக்கில் அவரை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திலிருந்து பரிந்துரை செய்ததாகவும், நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும்  பாராளுமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது, பிரதமர் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாராளுமன்றம்  களைகட்டியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை  முற்றிலுமாக தான் நிராகரிப்பதாக் கூறிய பரிசுத்த சிதம்பரம்தான்  இன்றைக்கு மேற்படி தன் வருத்தங்களையும்  இப்படியாகத் தெரிவித்திருக்கிறார். அவர் மீது 2ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பிருப்பதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்தபோது அமைதியாய் இருந்தார். திகார் சிறையிலிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கும் இவருக்குமான தொடர்பு மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இவர் பற்றி எழுதிய குறிப்புகள் எல்லாம் வண்டவாளமாய் வெளிப்பட்டபோது கூட, குடும்பத்தோடு ஓய்வெடுக்கப் போய்விட்டார். ஆனால் இப்போது  தாங்க முடியாமல் வெடித்து பீறிட்டிருக்கிறார்.

அவர் ரொம்ப யோக்கியமாம். மயிர் நீப்பின் உயிர் நீக்கும் வழிவந்த அவரால் இதுபோன்ற அவதூறுகளைத் தாங்கிக்கொள்ள முடியாதாம். அன்னாரின் நேர்மையை இப்படியெல்லாம் யாரும் சந்தேகிக்கக் கூடாதாம். இப்படியெல்லாம் சீன் காட்டுகிற வேலைதான் “நான் ஆழமாய் காயமடைந்திருக்கிறேன்” என்பதில் வெளிப்படுகிறது.

அட்ரஸ் இல்லாத கட்சியொன்றை வைத்து, அதில் ஒரு எம்.பியாகி, பிறகு நாட்டுக்கே நிதிமந்திரி ஆன கதையெல்லாம் எவ்வளவு நேர்மையானது? சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தனது தோல்வியை வெற்றியென அறிவிக்க வைத்ததில் எவ்வளவு தருமம் ஓளிந்திருந்தது?  முதலாளிகளைப் பார்த்ததும் பல்லிளித்து,   பலகோடி எழை மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து சீரழித்த உங்கள் கொள்கை எவ்வளவு அறம் சார்ந்தது?  நாக்கு எப்படியெல்லாம் புரண்டு பேசும் என்பதற்கு புது அகராதியே வகுத்த தங்கள்  அரசியல் எவ்வளவு அப்பழுக்கற்றது? அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதற்காக பிறவியெடுத்த உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஒழுக்கமானது?

ஐயா பரிசுத்த சிதம்பரம்!  உங்கள் வருத்தங்களை மக்களாகிய நாங்கள் நிராகரிக்கிறோம். உங்கள் தடித்த தோல் நாடறிந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...