Tuesday, March 31, 2015

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்

கோப்புப் படம்

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை
வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.
ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந் தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது… 2 வயது தொடங்கிய துமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண் மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்
ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற் கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பி ட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆ ணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடு ப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண் ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கி ன்றனர்.
குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்
முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளி யில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.
சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ் வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.
இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிக ளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மி ஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளி யில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.
சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேட வேண் டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர் கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண் டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ் வொரு முறை. பிரபலங்கள் சிபாரி ஸை எடுத்து கொள் ளும் சில பள்ளிகள் அரசியல் வாதியின் ரெக்கம்மண் டேஷனை மதிப்பதில்லை.
அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசி ன் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்து விடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்
விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும் பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.
சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண் டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொ னேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாய ம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.
ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொ ண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது ‘கல்வி உரிமைச் சட்டம்’ இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளி யிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.
சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.
மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என் ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மி ஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.
அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண் ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமு றைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் – சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிக ளில் 21 லட்சம் இடங்கள் உள்ள
நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன.
கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியா தது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.

தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஏழை மாணவர்களுக்கு தரமா ன கல்வி, தனியார் பள்ளிகளில் கிடைக்கும் என்பது அரசின் நம்பிக்கை.
ஆனால், நடந்தது வேறு. ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 25 சதவீத இடங்களை ஒதுக்காமல், அந்த இடங்களை பிற மாணவர்களுக்கு வழங்கி பணம் சம்பாதித்து வந்துள்ளன தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் செயல்படும் இந்த காலத்தில், அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் மதித்து நடக்காத தால், ஏழை மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஆதங்கம் தெரிவித் துள்ளனர் கல்வி ஆர்வலர்கள்.

இந்தச் சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டாலும், செயல்பாட்டுக்கு வந்தது என்னவோ அடுத்த கல்விஆண்டு முதல் தான். அதுவும் முழு மனதாக தனியார் பள்ளி நிர்வாகங்களால் செயல்படுத்தப்படவில்லை என்பதுதா ன் குறைபாடு. குஜராத்தில் உள்ள ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல் வி நிறுவனத்தினரும், இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களும் இணை ந்து நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாவன:
* கடந்த 2013 – 14ம் கல்வியாண்டு இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
* 21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய நிலையில், 6 லட்சம் இடங்கள்தான் ஏழைகளுக்கு கிடைத்துள் ளது.
* ஒன்பது மாநிலங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.
*ஒன்றாம் வகுப்பில், இரண்டுலட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவேண்டிய நிலையில்,45ஆயிரம்மாணவர்களுக்குத்தான் இடம்அளிக்கப்பட்டுள்ளது.
* பெருநகரங்களிலும் இந்நிலை காணப்படுகிறது. டில்லியில் நிலைமை பரவாயில்லை.
* கல்விக் கட்டணம் இலவசம் என்ற விவரம் பெரும்பான்மையான பெற் றோருக்கு தெரியவில்லை. தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக் கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
தமிழகத்தில் 11.25 சதவீதம்: கடந்த 2013 – 14ம் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள்: டில்லியில் 92 சதவீதம்; மத்திய பிரதேசம் 88 சதவீதம்; ராஜஸ்தான் 69 சதவீதம்; ஆந்திரா 0.2 சதவீதம்; ஒடிசா 1.85 சதவீதம்; உத்தர பிரதேசம் 3.62 சதவீதம்; தமிழகம் 11.25 சதவீதம்; மகாராஷ்டிரா 19.35 சதவீதம்.
1.6 கோடி ஏழை மாணவர் பயன் பெற்றிருப்பர்: சுயநிதி தனியார் பள்ளிக ளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என சட்டம் இயற்றிய பிறகும், அதை செயல்படுத்தாதது மிகப் பெரிய குற்றம் எனவும், அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க, சில பள்ளிகள் முறைகேடான வழிகளை பின்பற்றியுள்ளன எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், கல்வித் திட்ட மிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் நளினி ஜுனிஜா கூறும்போது, “அரசின் இந்த அருமையான சட்டம், ஐந் தாண்டுகள் ஆன பிறகும் முழுமையாக பின்பற்றப்படவில்லை” என்றார்.
ஆமதாபாத் ஐ.ஐ.எம்., பேராசிரியர் அங்குர் சரின், “தேசிய அளவில் 6 லட்சம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில், பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இந்தச் சட்டம் சிறப்பான முறையில் பின்பற்றப்பட்டுள்ளது. அவ்விரு மாநிலங்களில் மட்டும் 3 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன” என்றார்.

“இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆன பிறகும் சரிவர பின் பற்றப்படாததற்கு காரணம், இப்படியொரு சட்டம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாததுதான்; தெரிந்தவர்களும் அதை பின்பற்றாதது தான். சரியான முறையில் பின்பற்றப்பட்டிருந்தால், ஐந்தாண்டுகளில் 1.6 கோடி மாணவர்கள் பயன்பெற்றிருப்பர்” என, சென்ட்ரல் ஸ்கோயர் பவுண் டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த, ஆஷிஸ் தவான் கூறுகிறார்.

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்
உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டில் உள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின்
சார்பில் வீரர்களை தேர்வு செய்வார்கள். இந்தியாவை தவிர இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற தனியார் அமைப்பு தான் இந்திய வீரர்களை தேர்வு செய்யும். இதில் இந்திய அரசா ங்கத்தின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் கூட தலையிட முடியாது. காரணம் அந்த தனியார் அமைப்பின் விதி 

அப்படி! கிரிக்கெட் மூலம் கிடைக்கும் பரிசு தொகைகள் அனைத்தும்  அமைப்பிற்கு தான் சொந்தம். அரசுக்கு அல்ல. மாறாக உலக கோப்பைஇறுதி ஆட்டத்தில் ஒருவேளை இந்திய அணி வென்றிருந்தால், மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் கோடி கோடியாக வீரர்க ளுக்கு பரிசாக கொட்டி கொடுப்பார். ஒரு அர சாங்க ஊழியர். இன்னொரு அரசு துறையிலே அல்லது வேறு தனியார் நிறுவனத்திலே பணி செய்ய இயலாது.
ஆனால் இந்திய கிரிக்கெட்வீரர் அனைவருக் கும் இந்திய அரசு துறைகளில் ஏதாவது உயர் பதவி இருப்பார்கள் மற்றும் பல தனியார் நிறுவனத்தில் கௌரவத் தலைவராக இருந்துகொண்டு தனி ஊ தியம் பெறுவார்கள். இவற்றுக்கு மே லாகஏகப்பட்ட தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு விளம்பரங் களில் நடித்து கோடி கோடியாக சம்பா திப்பார்கள்  பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்ற கேப்டன் இம்ரான்கான்மற்றும் அப்ரிடி அவர்கள் கிரிக் கெட் விளையாட்டின்மூலம் கிடைத்த வருவாய் கொண்டு அவர் அவர் சொந்த ஊரில் ருபாய் 1000 கோடி மதிப்பில் இரண் டு மருத்துவ மனைகள் முற்றிலும் இலவசமாக தன் நாட்டு மக்களுக்காக கட்டி உள்ளார்கள்.
முறையான வருமான வரி செ லுத்துபவர் என்று மார்தட்டி கொள்ளும் தெண்டுல்கரும், உலகின் முதல் நிலை பணக் கார விளையாட்டுவீரர் தோ னி யும். இந்தியமக்களுக்குசெய்த கைமாறுஎன்ன?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க., நாங்கள் உங்களு க்கு தொலைக்காட்சியில் கை தட்டி ரசிப்பது?
நாங்கள் கை தட்டி ரசிப்பது உங்களை அல்ல. உங்கள் பனியன் மீது இருக்கும் எங்கள் தேசத்தின் பெயருக்காக!!


Monday, March 30, 2015

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?

உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் ஏற்பட்டுள்ள‍தா? அதை ஆன் லைன் மூலம் எவ்வாறு திருத்துவது?
உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு, இந்திய அரசால்
வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன் லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம். ஆதார் கார்டி ல் உள்ள குறிப்புகளை ஆன் லைன் மூலம் எவ்வாறு மாற்றம்செய்வது ?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டு க்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டு க்குள் செல்வதற்கு முன் உங்க ளிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனி ல் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும்போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ந்திய குடிமக்கள் தங்களு டைய பெயர், முகவரி, பாலி னம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகிய வற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட்செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார் டை அப்டேட் செய்ய தேவை யான குறிப்புகள்:
1.ஆதார்கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டி ல் சேரும் போது, அந்த வெப் சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வே ண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண் ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொ பைல் எண்ணி ற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்க ப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவில் லை என்றால், அந்த வெப்சைட் டில் ஆதார் கார்டு எண்ணைப் ப திவு செய்யவும். தற்போது மொ பைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒரு வே ளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங் கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப் சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந் தெடுக்கவேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும்தாய்மொழியில்அப்டேட்செய்யவும்
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புக ளுக்கு தேவையான உறுதிச்சான் றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கா ன சான் றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செ ய்தால், பெயர் மற்றும் உங்கள் தோ ற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப் படம் ஆகியவற்றை அப்லோட் செய் ய வேண்டும்.
இ.பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரி க்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்யவேண்டும்.
7. தேவையான உறுதிச் சான் றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்யமுடியவில் லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு

க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு
க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தினரால், இந்திய குடி மக் க‍ளுக்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட் டை இன்னும் கூட
சிலஆயிரம்பேருக்கு  கிடைக்கவில்லை. ஆனால், இங் கே என்ன‍டான்னா? இந்து மத‍த்தில் சைவ பிரிவினர்க ளால் வணங்கப்படும் கடவுளான சிவபெருமானின் பு கைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடை யாள அட்டை முகநூலில் யாரோ வெளி யிட்டுள்ளார்கள். இதைப்  பார்த்த‍தும் எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந் தது.
விஷமிகள் செய்த வேலையா? அல்ல‍து தேர்தல் ஆணைய பணியாளர்களின் தவறா ? என்பது தெரிய வில்லை.
சிவபெருமானின் புகைப்படத்துடன் கூடிய‌ வாக்காளர் அடையாள அட்டை உள்ள‍ புகைப்படம் இதோ

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களும்! நீங்கள் உணராத உண்மைகளும்!

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்க ளும்! நீங்கள் உணராத உண்மைகளும்!

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களு ம்! நீங்கள் உணராத உண்மைகளும்!
அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற் றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய
நவீன உலக வாழ்க்கையை பார்க்கும்போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மை கள் விசித்திரமாகவே கருதப்படுகின்ற ன. மேலும் அத்தகைய உண்மை களைக் கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட் பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார் கள். உதாரணமாக, உலகிலேயே வெடி குண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான் பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என் று சொன்னா ல் ஆச்சரியம் தானே.
இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொ டுத்துள்ளோம். அதைப் படித்து தெரி ந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்க ளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளை ப் பார்ப்போமா !!!
லிப்ஸ்டிக்
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ் டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாட ல்களை ஹெட்போனில் கேட்கிறீர் களா? அவ்வாறு ஒருமணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீ ரியாவானது 700 மடங்கு அதிகரிக் கும்.
இறால்
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படி யெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனி ல் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைக ள்  ஒவ்வொருவருக்கும் வேறுபடு கிறதோ, அதேப் போன்று உதடுகளி ன் ரேகைகளும்.
பட்டாம்பூச்சி
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவை யை வாயால்தான் சுவைக்கிறது என்று நினைத் தால், அதுதான் தவறு. ஏனெ னில் உண்மையில் பட்டாம் பூச்சி தேனின் சுவையை அத ன் கால்களில் தான் சுவைக்கிறது.
யானை
பாலூட்டிகளிலேயே யானை யின் பிரசவ காலம்தான் அதிக ம்.அதுவும் 645நாட்கள், யா னை யானது தன் கருவை சுமக் கும்.

ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களி ல் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
நெருப்புக்கோழி
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரிய ப்பட வைக்கும் ஒரு உண்மை.
புகைப் பிடித்தல்
ப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில் லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்கை ட்ரிக்
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங் கும் அசைக்க முடிந்தாலும், முழங்கை யை மட்டும் எவராலும் நாக் கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.
சிலந்தி
உலகில் எத்தனையே ஃபோபியாக்க ளைப் பார்த்திருப் போம். ஆனால் இன் றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலே யே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.
தும்மல்
சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும் மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும்.மேலும் இவ்வாறு திடீரென்று கடுமை யாக தும்பும்போது, சிலநேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்தி க்கவும்கூடும். ஆக வே இம் மா திரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்துதும் மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலா ம்.
பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அள வில் தான் இரு க்கம். ஆனால் மூக்கு மற்றும் காது கள் வளர்ச்சியடையும் என்பது தெரியு மா?

கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரி சையில் ‘typewriter’ என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய் யலாம்.
முதலை
பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்குமட்டும்தான், மேல்தாடை தூக்கி வாய் திறக்கப் படும்.
கரப்பான்பூச்சி
வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான் பூச்சி, தலை இல்லாமல், 9 நாட் கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல் லும்போது, கவனமாக அடித்து க் கொல்லுங் கள்.
வெங்காயம்
யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்கா து. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெ ங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண் ணீர் வருவதை தவிர்க்கலாம்.
தூசிப்படிந்த வீடு
வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சரு மத்தில்உள்ள இறந்தசெல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக் கின்றன.
கர்ப்பமான மீன்
வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமா ன தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...