Tuesday, March 31, 2015

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் – சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிக ளில் 21 லட்சம் இடங்கள் உள்ள
நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன.
கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியா தது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.

தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஏழை மாணவர்களுக்கு தரமா ன கல்வி, தனியார் பள்ளிகளில் கிடைக்கும் என்பது அரசின் நம்பிக்கை.
ஆனால், நடந்தது வேறு. ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 25 சதவீத இடங்களை ஒதுக்காமல், அந்த இடங்களை பிற மாணவர்களுக்கு வழங்கி பணம் சம்பாதித்து வந்துள்ளன தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் செயல்படும் இந்த காலத்தில், அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் மதித்து நடக்காத தால், ஏழை மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஆதங்கம் தெரிவித் துள்ளனர் கல்வி ஆர்வலர்கள்.

இந்தச் சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டாலும், செயல்பாட்டுக்கு வந்தது என்னவோ அடுத்த கல்விஆண்டு முதல் தான். அதுவும் முழு மனதாக தனியார் பள்ளி நிர்வாகங்களால் செயல்படுத்தப்படவில்லை என்பதுதா ன் குறைபாடு. குஜராத்தில் உள்ள ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல் வி நிறுவனத்தினரும், இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களும் இணை ந்து நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாவன:
* கடந்த 2013 – 14ம் கல்வியாண்டு இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
* 21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய நிலையில், 6 லட்சம் இடங்கள்தான் ஏழைகளுக்கு கிடைத்துள் ளது.
* ஒன்பது மாநிலங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.
*ஒன்றாம் வகுப்பில், இரண்டுலட்சம் மாணவர்கள் சேர்க்கப்படவேண்டிய நிலையில்,45ஆயிரம்மாணவர்களுக்குத்தான் இடம்அளிக்கப்பட்டுள்ளது.
* பெருநகரங்களிலும் இந்நிலை காணப்படுகிறது. டில்லியில் நிலைமை பரவாயில்லை.
* கல்விக் கட்டணம் இலவசம் என்ற விவரம் பெரும்பான்மையான பெற் றோருக்கு தெரியவில்லை. தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக் கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
தமிழகத்தில் 11.25 சதவீதம்: கடந்த 2013 – 14ம் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள்: டில்லியில் 92 சதவீதம்; மத்திய பிரதேசம் 88 சதவீதம்; ராஜஸ்தான் 69 சதவீதம்; ஆந்திரா 0.2 சதவீதம்; ஒடிசா 1.85 சதவீதம்; உத்தர பிரதேசம் 3.62 சதவீதம்; தமிழகம் 11.25 சதவீதம்; மகாராஷ்டிரா 19.35 சதவீதம்.
1.6 கோடி ஏழை மாணவர் பயன் பெற்றிருப்பர்: சுயநிதி தனியார் பள்ளிக ளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என சட்டம் இயற்றிய பிறகும், அதை செயல்படுத்தாதது மிகப் பெரிய குற்றம் எனவும், அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க, சில பள்ளிகள் முறைகேடான வழிகளை பின்பற்றியுள்ளன எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், கல்வித் திட்ட மிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் நளினி ஜுனிஜா கூறும்போது, “அரசின் இந்த அருமையான சட்டம், ஐந் தாண்டுகள் ஆன பிறகும் முழுமையாக பின்பற்றப்படவில்லை” என்றார்.
ஆமதாபாத் ஐ.ஐ.எம்., பேராசிரியர் அங்குர் சரின், “தேசிய அளவில் 6 லட்சம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில், பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இந்தச் சட்டம் சிறப்பான முறையில் பின்பற்றப்பட்டுள்ளது. அவ்விரு மாநிலங்களில் மட்டும் 3 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன” என்றார்.

“இந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆன பிறகும் சரிவர பின் பற்றப்படாததற்கு காரணம், இப்படியொரு சட்டம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாததுதான்; தெரிந்தவர்களும் அதை பின்பற்றாதது தான். சரியான முறையில் பின்பற்றப்பட்டிருந்தால், ஐந்தாண்டுகளில் 1.6 கோடி மாணவர்கள் பயன்பெற்றிருப்பர்” என, சென்ட்ரல் ஸ்கோயர் பவுண் டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த, ஆஷிஸ் தவான் கூறுகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...