Monday, March 23, 2015

காலத்திற்கேற்ற‌ நவீன சமையலறைகள் (உங்கள் பார்வைக்கு)


பெண்களுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் அவர்கள் தான் அங்கு நீண்ட நேரம் இருந்து,சாப்பிட உணவுகளை தயார் செய்கிறார்கள். ஆகவே வீட்டி ல் உள்ள எந்த அறை வேண்டு மானாலும் எப்படிவேண்டுமா னாலும் இருக்கலாம், ஆனா ல் அவர்களுக்கு கிச்சன் மட்டு ம் அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதி லும் சமையலுக்குத் தேவை யான பொருட்களை எந்த இட த்தில் வைத்தால், சுலபமாக இருக்கும் என்பதைப் பற்றியும் நிறைய ப்ளான் போடுவார்கள். அதிலும் அபார்ட்மெண்ட் செல்பவர்கள் போ டும் ப்ளானிற்கு அளவே இருக்காது.
ஆகவே புது வீட்டிற்கு செல்லும்போது எந்தவிதமான கிச்சன் வேண் டும் என்று, இங்கு குறிப்பிட்டுள்ள கிச்சனை படித்து தெரிந்து கொண்டு, அவ்வாறு உங்கள் புது வீட் டையும் அழகாக உங்களுக்கு பிடித்தாவாறு அமைத்து, சந் தோஷத்துடன் சமைத்து உண் ணுங்கள். இப்போது அந்த வித விதமான கிச்சன் டிசைனை பார்த்து, உங்கள் கிச்சனை நீங் களே அலங்கரியுங்களேன்…
விண்டேஜ் சமையலறை
தோற்றம் மட்டுமே பழங்கால அமைப்பு கொண்டது ஆனால் இது ஒரு நவீன சமையலறை ஆகும். இது ஒரு பெரிய மாளிகை அல்லது வில்லா போன்ற வீடுகளுக்கு பொருத்தமாக இருக்கும். அலமாரிகள்டார்க் நிறத்தில் இருப்பதோடு, அதற்கு பயன்படுத்தபட்ட மரம் நல்ல தரமானதாகவும் இருக் கும். இந்த சமையலறையின் வடிவமைப்பு உயர்சீலிங் மற் றும் உயர் அலமாரிகள்கொ ண்டது. மேலும் இச்சமயல றைக்கு கருப்பு நிற மைக்ரோ ஓவன் மிகுந்த அழகை சேர்க் கும்.
வருங்காலத்தில் சமையலறை
இந்த சமையலறையின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒருரோபோசமையலறை போன்று காணப் படும். அடுத்து வரும் 10 ஆண்டுக ளில் நவீன சமையலறையின் வடிவமைப்பு, இது போன்றுதான் இருக்கும். இதன் சிறப்பான அம் சம் என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட நிறம் இல்லாமல், திரும்பி பார்க்கும் இடம் அனை த்தும் உலோகத்தால் பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமையலறை அதன் தனிப் பட்ட ஒரு வித்தியாசமான டிசைனால் அனைவரையும் கவர்ந்து விடும் தன்மையை கொண்டுள்ளது.
சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சமையலறை
ச்சமையலறையும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சமையலறை வடிவமை ப்புடையது. இந்த சமையலறை யின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. மேலும் இந்த சமையல றையில் பூ ஜாடிகள் மற்றும் அழகான மரத்திலான டைனிங் டேபிள் என்று அலங்கரிக்கப்ப ட்டு, குடும்பத்தினர் அனைவரு ம் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு சிறந்த சமையல றையாக இருக்கும்.
சிவப்பு நிறத்தாலான சமயலறை
வண்ணங்களில் சிறந்ததாக கருதப்படுவது சிவப்புதான். இந் த சிவப்பு நிறத்தை அதிக நேரம் பார்க்க பசியும் அதிகமாகும். அதனால்தான் பல புகழ்பெற்ற ஹோட்டல்கள், தங்கள் லோ கோ மற்றும் அலங்கா ரத்திற்கு சிவப்பு நிறத்தை பயன்படுத்துகி ன்றனர். மேலும் ஒரு சிறிய அறையில் அனைத்து அலமாரி களும் பளபளப்பான சிவப்பு நிற த்தால் பெயிண்ட்செய்து, சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, மைக் ரோ ஓவனை சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் சுவாரசிய மான விஷயம்.
கிளாசிக் மரத்தாலான சமை யலறை
இந்த சமையலறை அழகான உறுதியான கிளாசிக் மரத்தா ல் செய்யப்பட்டுள்ளது. மேலு ம் இந்த அறையில் நவீன குளிர்சாதனபெட்டி, மைக் ரோவேவ், புகைபோக்கியுட ன் எரிவாயு அடுப்பு போன்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய நவீன சமையல் அறை யை போன்று முழு அளவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதும ட்டு மல்லாமல், இந்த டிசைன் சமையலறையில் பளிங்கு பலகைக ள் மற்றும் பளிங்கு டைனிங் டேபிள் சரியாக ரசனையுடன் பொருத் தப்பட்டிருப்பது சிறப் பம்சமாக உள்ளது. அதிலும் இது மிகவும் ஆடம் பரமாக இல்லாமல் ஒரு வசதியான நவீன சமையலறை வடிவ மைப்பு கொ ண்டுள்ளது.
ஆகவே மேற்கூறிய ஏதேனு ம் ஒரு சமையலறை டிசைனை உங்கள் வீடுகளில் அமைத்து, மகிழ் ச்சியாக சமைத்து சாப்பிடுங்கள். என்ன நண்பர்களே! உங்களுக்கு எந்த டிசைன் பிடிச்சிருக்கு?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...