Tuesday, March 24, 2015

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்நிறுவனத்திலிருந்து தமக்கு கிடைக்க‍க் கூடிய அதி அற்புத பயன்களைத் தெரிந்து கொள்வதில் அவ்வ‍ளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்
நட்ட‍ம் அந்த நிறுவனத்திற்கு அல்ல. இவர்களுக்குத்தான். ஒரு நிறுவனத் திலிருந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு நியாயமாக கிடைக்க‍க் கூடிய சலுகைகள் பயன்க‍ளில் குறிப்பிடத்தக்க‍தாக இருக்கும் எல்.டி.ஏ. (L.T.A.) அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

விடுமுறை சுற்றுலா படி (Leave Travel Allowance) என்பது ஒரு நிறுவனத் தால், அந்நிறுவனத்தின் சம்பளதாரர்களுக்கு வழங்கக்கூடிய தொகை யாகும். இந்தப் பணத்துக்கும் ஊழியர்கள் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எல்டிஏவினால் என்ன பயன், இதற்கான வரிச் சலுகை கள் என்னென்ன என்பதைப் பற்றி ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். அவர் கொடுத்த விவரங்கள் இங்கே உங்களுக்காக…

 “எல்டிஏ விதிமுறைகளின்படி, ஒரு எல்டிஏ பிளாக்கில் (ஒரு பிளாக் எ ன்பது மொத்தம் நான்கு ஆண்டுகள்) இரண்டு முறை எல்டிஏ தொகையை ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், அந்த நிறுவனத்திடமிருந்து க்ளெய்ம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் ஒரு குடும்பத் தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உடனிருக்கும் பெற்றோர்கள், உடன்பிறந்த வர்கள் அனைவரையும் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடியும்.  குழந்தைகள் என்கிறபோது, எல்டிஏ விதிமுறைகளின்படி இரண் டு குழந் தைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதே சம யம், முத லில் ஒரு குழந்தைப் பிறந்து, அதற்கு அடுத்து பிறக்கும் குழந்தை இரட்டை யராக இருந்தால் மொத்தம் மூன்று குழந்தைகளுக்கும் எல்டிஏ செலவுகள் வரிச் சலுகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

எல்டிஏ விடுப்பு!
சுற்றுலா என்கிறபோது, அலுவலகத்தில் எடுக்கும் விடுப்பானது எல்டிஏ விடுப்பாக இருக்க வேண்டுமே தவிர, மருத்துவ விடுப்பைப் பயன்படுத்தி யோ அல்லது இருப்பில் இருக்கும் இதர விடுப்புகளைப் பயன்படுத்தி சுற் றுலாவுக்குச் சென்றுவந்து எல்டிஏ தொகையை க்ளெய்ம் செய்துகொள்ள முடியாது.

பயணச் செலவுக்கு மட்டுமே!
எல்டிஏவின்படி சுற்றுலாச் சென்றிருக்கும்  இடத்தில் தங்குவதற்கான செலவு, உணவுச் செலவு மற்றும் இதர செலவுகள் என அனைத் தையும் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும் எனப் பலரும் தவறாகவே புரிந்து வைத் திருக் கிறார்கள். எல்டிஏ விதிமுறைகளின்படி, சுற்றுலாச்செல்வதற் கான போக்குவரத்து செலவு களை மட்டும்தான் க்ளெய்ம் செய்துகொள்ள முடி யுமே தவிர, இதர செலவு களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. ரயில் (முதல் ஏசி வகுப்பு உள்பட), விமானம் (எக்கனாமிக் வகுப்பு உள்பட), கார் பேருந் து எதுவாக இருந்தாலும், அதற் குரிய கட்டண ரசீதை சமர்ப்பிப்பது மிகவு ம் அவசியம்.

வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு எல்டிஏ க்ளெய்ம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற மற்றுமொரு தவறான புரிதல் பலபேரிடம் இருக்கிறது. இந்தியா வுக்குள் செல்லும் சுற்றுலாக் களுக்கு மட்டுமே  எல்டிஏ வரிச்  சலுகை பெற முடியும். தவிர, அயல்நாட்டு சுற்றுலாக்களுக்கு வரிச் சலுகை கிடை க்காது. அதேபோல, இன்றைய நிலையில் சுற்றுலா பேக்கேஜ்கள் மூலம் பெரும்பாலானவர்கள் சுற்றுலாச் சென்றுவருகிறார்கள். சுற்றுலா பேக்கே ஜ்களில் அனைத்து விதமான செலவுகளும் அடங்கி இருக்கும் என்பதால், அதை எல்டிஏவுக் காக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், டூர் பேக்கேஜ்களில் டிராவல் கட்டணங்களுக்கான டிக்கெட்களை சுற்று லாவுக்கு அழைத்துச் செல்லும் நிறுவனத்தாரிட மிருந்து தனியாக வாங்கித் தரும்பட்சத்தில் க்ளெய்ம் பெற முடியும்.

எல்டிஏ க்ளெய்ம் தொகை மற்றும் வரிச் சலுகை!
ஒரு நிறுவனமானது ஊழியர் களுக்காகச் செய்யும் செலவினங்களின் ஒருபகுதியாகவே எல்டிஏ இருக்கிறது. அதனால், எல்டிஏ விதிமுறைக ளின்படி, ஒரு நிறுவனமானது அவர்களது பணியாளரின் சம்பளம் மற்றும் பணிக் காலத்தைப் பொறுத்து அவர்களுக்கு எல்டிஏ தொகையை வழங்கு ம். அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே Section 10(5) கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

கணவன், மனைவி இருவரும் க்ளெய்ம் செய்யலாம்!
கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்திலோ அல்லது வெ வ்வேறு நிறுவனத்திலோ வேலை பார்த்தாலும், அவர்கள் இருவரும் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து தனித்தனியாக எல்டிஏ க்ளெய்ம் பெற முடியும். அந்த இரு எல்டிஏ தொகைக்கும் வரிச் சலுகை உண்டு. ஆனால், ஒரே சுற்றுலாவுக்கான டிராவல் செலவுக்கு இருவரும் எல்டிஏ பெற முடியாது. கணவன், மனைவி இருவருக்கும் விடுப்பு இருக்கும் பட்சத்தில், ஒரே வருடத்தில் இரண்டு முறைகூட சுற்றுலா வுக்குச் சென்று, அதற்கு எல்டிஏ பெறலாம்.

எல்டிஏ பிளாக்!
முதல் எல்டிஏ பிளாக்கில் எல்டிஏ தொகைக்கான வரிச் சலுகையைப் பெறத் தவறிவிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அடுத்த எல்டிஏ பிளாக்கின் முதல் வருடத்தில் முந்தைய எல்டிஏ பிளாக்கினு டைய எல்டிஏ தொகைக்கான வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியு ம்.

அதாவது, 2014, 2015, 2016, 2017 என்கிற நான்கு ஆண்டுகள், L.T.A. Claim பெற தகுதியுள்ள ஊழியரின் முதல் எல்டிஏ பிளாக் வருடங்கள் எனக் கொள்வோம். இந்த எல்டிஏ பிளாக்கில் அவர் இரண்டு முறை அவரது நிறுவனத்தாரிடமிருந்து எல்டிஏ  தொகையை க்ளெய்ம் செய்து கொள்ள லாம். அந்தந்த வருடங்களில் அதற்கான வரிச் சலுகையையும் அவர் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், வரிச் சலுகையைப் பொறுத் தவரை முதல் எல்டிஏ பிளாக்கில் வரிச் சலுகையைப் பெறத் தவறிவிட்டால், இதற்கு அடுத்த 2018, 2019, 2020, 2021 என்கிற பிளாக்கின் முதல் வருடத்துக்குள் (2018-ல்) பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, எல்டிஏ தொகையைக் கொண்டு சுற்றுலாவுக்கும், அதேசமயம் அதைக்கொண்டு வரிச் சலுகை யும் பெறமுடியும் என்றால், நம் எல்லோருக்கும் இரட்டைமகிழ்ச்சிதானே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...