Monday, March 23, 2015

அழகு குறிப்பு – கருத்த‍ முகம் சிவக்க‍வும், பருக்களால் வந்த தழும்புகளை போக்க‍வும் சில குறிப்புகள்

முகத்தில் உள்ள கருமையைப்போக்க குங்குமப்பூவை யூஸ் பண்ணு ங்க…
குங்குமப்பூவை பாலில் போட்டு கர்ப்பிணிக ள் குடித்தால், வயிற்றில் வளரும் சிசு நல்ல நிறத்தில் பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மட்டு மின்றி, அனைவருமே பின்பற்றலாம். ஆனால் அத்தகைய குங்குமப்பூவை வேறு எப்படியெல்லாம் பயன்ப டுத்தலாம் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த குங்கு மப் பூவைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகள் போடலாம். அதிலும் வாரம் முழுவது ம் நன்கு அலைந்து முகத்தில் உள்ள பொலிவு நீங்கி, கருமையானது சூழ்ந்து இருக்கும். இத் தகைய கருமையைப்போக்கி, முகத்தைப் பொலிவோடும், கருமையை நீக்கி நல்ல நிறத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக குங்குமப்பூ மிகவும் விலைமதிப்பான து. ஆனால் அதன் நன்மை உண்மையிலேயே மிக வும் சிறப்பானது. இருப்பினும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே, அதன் பலன் கிட்டும். என வே சீக்கிரம் வெள்ளையாக ஆசைப்படுபவர்கள், குங்குமப்பூவைக் கொ ண்டு ஃபேஸ் பேக்குகள் மற்றும் பல செயல்களை மேற் கொண்டு வந்தால், எளிதில் நல்ல நிறத்தைப் பெற லாம்.
சரி, இப்போது அந்த குங்குமப்பூவை எப்படியெல் லாம் பயன்படுத்தி னால், சருமத்தில் உள்ள கரு மை நீங்கி, சருமம் பொலிவோடும், அழகாகவும் இருக்கும் என்று பார்ப் போம்.
குங்குமப்பூ மற்றும் பால்
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி, முகம் பொ லிவடையும்.
குங்குமப்பூ மற்றும் க்ரீம் ஃபேஸ் பேக்
ப்ரஷ் க்ரீம் உடன் சேர்த்தும் ஃபேஸ்பேக் போடலாம். அதற்கு க்ரஷ் க்ரீமுடன் குங்குமப்பூவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, பின் அதன் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், சருமம் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும்.
குங்குமப்பூ மற்றும் மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தி ல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெது ப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.
உணவில் குங்குமப்பூ…
குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப் பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.
குளிக்கும் நீரில்…
குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டு மெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெ துப்பான நீரில் சிறிது குங்குமப்பூவை தூவி 20 நிமிடம் ஊற வை த்து, பின்னர் குளித்தால், முகம் மட்டுமின்றி, உடல் முழுவதுமே நல்ல நிறத்தைப் பெறலாம்.
குங்குமப்பூ ஸ்கரப்
குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள் ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை ஊற வைத்து, அந்த கலவையைக்கொண்டு சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினாலும், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
சந்தனப் பொடி மற்றும் குங்குமப்பூ
குங்குமப்பூவானது உடலின் வெப்பத்தை அதிகரி க்கும். இதனால் முகத் தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற் கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.
குங்குமப்பூ, பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போ ட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.
குங்குமப்பூ மற்றும் எலுமிச்சை சாறு
எண்ணெய் பசை சருமம் உள்ளவரா? அப்படியெ னில், குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந் து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்.
பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் சில‌ குறிப்புகள்!!!
டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவதுசகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறி த்து சரியான பராமரிப்புக்களை மேற் கொண்டிருக்க மாட்டோம். மேலும் அப்போது சருமத்தின்மீது அதிக அக்க றை எடுத்து கவனித்திருக் கமாட்டோ ம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப் போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டி ருக்கும்.
இதனால் அந்த தழும்புகளால் அழகு பாழாகிறது என்று பலர் வருத்தப் படுவதுண்டு. அதனால் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்தி, அதனைப் போக்குவதற்கு முயற்சி ப்பதும் உண்டு. இருப் பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ஆகவே அவ் வாறு க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிப்பதை விட, இயற்கைப் பொரு ட்களைக் கொண்டு முய ற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழு ம்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலி வோடு காணப்படும். இப்போது அந்த பருக்களை யும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்ப்போமா!!!
சந்தன ஃபேஸ் பேக்
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகிய வற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண் ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வெந்தயக்கீரை ஃபேஸ் பேக்
சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி க் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.
வெந்தய ஃபேஸ் பேக்
சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண் டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன் கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்பு ள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டா ம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின்மீது தடவி மசாஜ் செய்யு ங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல் லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத் தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத் தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
தேன் மகத்துவம்
கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத் திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். இதனால் தேனி ன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பா ன தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கு வதைக் காண்பீர்கள்.
எலுமிச்சை மருத்துவம்
எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவு ங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண் ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பள பளப்பான முகம் உங்களுடையதாகும்.
பன்னீர்/ரோஸ் வாட்டர்
சிறிதுபன்னீர் எடுத்துக்கொள்ளுங்கள். பன்னீர் கிடை க்கவில்லையென் றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொ திக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத் துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு
ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள்.பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன் றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
உடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள்
எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் சிறிது சிறி தாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத் தழு ம்புகளும் மறைந்து காணப்படும்.
காய்கறி ஜூஸ் அருந்துங்கள்
ட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்தி ற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுட ன் பளபளப்பதைக் காண் பீர்கள்.
க்ரீன் டீ
உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழி யில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகு ம். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீ ன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்து விடும்.
தக்காளி
ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட் டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன் றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.
ஐஸ் கட்டிகள்
சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவ ற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவ றாமல் இதனை செய்யுங்கள். பின்அதன் பலன் தெரியும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற் பயிற்சி செய்வதால், தேவை யற்ற சதைகள் குறைந்து, எடை குறைவ துடன், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil)
கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளை யும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந் த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்க ள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக் குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக் கும்.
மேக் அப்புகளை உடனே நீக்கிவிடுங்கள்
தினந்தோறும் மேக் அப் போடும் பழக்கம் உள்ளவரா? அப்படியென்றால், வீடு திரும்பியதும் உடனடியாக அவற்றைக் களை ந்து விட்டு, முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக்அப் சாதனங்களைத் தவிர்த் திடுங்கள்.
முகத்தை கைகளால் தொடாதீர்கள்
முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தா ல், அவை பெருகும். அதோ டு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல் களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.
சமையல் சோடா ஃபேஸ் பேக்
சிறிது சமையல் சோடா வை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதுதண்ணீரை சேர்த்து பசை போல கலக் கவும். இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள். பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத் தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழு ம்புகளும் மறையக்கூடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...