தமிழக பா.ஜ.க.வில், மோடியின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை! ஓரிருவர் டி.வி.யில் முகம் காட்டுவதோடு சரி! விவரமான பல தலைவர்கள் இருப்பினும், எதிர்க்கட்சிகளின் காட்டுக்கூச்சல் மற்றும் கொச்சைமொழி கையாடலினால் அவர்கள் கூறுவதை பத்திரிகைகளும், பொதுமக்களும் சட்டை செய்வதாகத் தோன்றவில்லை!
ஆகவே, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அழகிரியை கட்சியில் இணைத்து தென்மண்டல பொறுப்பை அவர் வசம் ஒப்படைக்கலாம் என்பது என் கருத்து! அவரும் பா.ஜ.க.வுக்கு இணக்கமான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்!
உடனே, பா.ஜ.க. ஆதரவாளர்கள் எல்லாம் ஐயையோ வேண்டாம் என்று கோஷம் போடாதீர்கள்! நான் சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை!
தி.க., தி.மு.க., இந்து விரோத கும்பலுக்கு சாத்வீகமான முறையில் மட்டுமே பதிலளித்துக் கொண்டிருந்தால் எடுபடாது! அதை நம் பலவீனமாகவே கருதி மேலும் வன்மத்தைக் காட்டுவார்கள். அதன் வெளிப்பாடுதான் லயோலா ஓவிய கண்காட்சியும் அதை தொடர்ந்த திருச்சி தேசவிரோத மாநாடும்! அவர்களுக்கு ரஜோ குணத்தையும் காட்டி, புரியும்படி பேசக்கூடிய ஆள் தேவை! இன்றைய தேதியில், அப்படிப்பட்ட ஒரு மனிதர் தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அது திரு. MK Alagiri மட்டுமே இருக்க முடியும்!!
இராஜாஜி மொழி புரியாதவர்களுக்கு தேவர் மொழியில்தானே சரியான பதிலடி கொடுக்க முடியும்!

No comments:
Post a Comment