Wednesday, January 30, 2019

ஒரு தோல்விகரமான தோல்வி!

ஜாக்டோ ஜியோ ஆசிரியர் கூட்டமைப்புகள் இறுதியாக ஜெயித்தது என்ன? ஆயிரத்து சொச்சம்பேர் பணியிடைநீக்கம், நூற்றுச் சொச்சம்பேர் சிறைக்கு சென்றதே மிச்சம். பொதுமக்களின் ஆதரவு இல்லாத போராட்டங்கள் இப்படிதான் நீர்த்துபோகும். மன்னிப்புக்கடிதம் கொடுத்து சம்பளப்பிடித்தத்திற்கு ஒத்துகொண்டு கடைசியில் மண்டியிட வைக்கும். போதாத குறைக்கு நீதிமன்றத்திலும் சாட்டையடி வாங்கிய அவமானமும் மிஞ்சியது.
உங்கள் பிள்ளைகள் பயிலும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்ததை நீங்கள் ஆதரிப்பீர்களா? சேவை மனப்பான்மையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டு தொழிலாளர்களைப் போல் சாலை மறியல் செய்கிறீர்களே! அசிங்கமாக இல்லையா? என்று ரொம்ப அசிங்கமான கேள்வியும் நீதிபதியிடம் வாங்கியாயிற்று.
போராட்டத்தில் கைதாகி கல்யாண மண்டபத்தில் இருந்து செல்ஃபி போடும் அப்பாவி டீச்சர்களுக்கு இந்த போராட்டத்தை தூண்டி விடுவது யாரென்று தெரியாது. ரெண்டு நாள் போராட்டத்தில் உட்கார்ந்தால் பழைய பென்ஷன் கிடைச்சுடும் என்று சங்க நிர்வாகிகள் சொன்னதற்காக ஓடிவந்த கூட்டமிது. காட்டில் ராஜ்யம் செய்வதும் நாட்டில் வேட்டையாடுவதும் மூடர்களின் செயல். அததுக்கு இடமிருக்கு. நேரமிருக்கு.நியாயமான கோரிக்கைகளாக இருந்தாலும் போராட்ட களத்திற்கான சூழல் சரியா? என்று எந்த ஒரு வாத்தியார் மூளையும் யோசிக்கவில்லை. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் போராட்டத்திற்கு நாள் குறிச்சவன் எவன்டா? என்று எதுவும் யோசித்து இருக்காது. சலுகை வாங்கித் தரேன் என்று சொன்னதும் ஸ்கூலை இழுத்து மூடிவிட்டு சர்க்கரைப் பொங்கலுக்கு அலையும் கோயில் யானை போல் வரிசையில் நின்றது பேராசை. அதான் பெருநஷ்டம்!
ஆசிரியர் வேலைக்கு தேர்வுசெய்துவிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க சொல்றாங்க. எவன் எவ்ளோ பெத்து வைச்சிருக்கான் என்று கணக்கெடுக்கறதா எங்க வேலை? சொட்டு மருந்து ஊத்தறதா எங்க வேலை? எலெக்ஷன் டியூட்டி பார்த்து ஓட்டு மிஷினுக்கு அரக்கு வைக்கறதா எங்க வேலை? இப்படி நியாயமாக கோவப்பட்டு அதெல்லாம் பண்ண மாட்டோம் என்று சங்கம் மூலம் அழகாக அடம் பிடித்து இருக்கலாம். அதை விட்டுட்டு பென்ஷன் ஸ்கீம்க்கு மாற்றம் வரும் வரை ஸ்கூல் போக மாட்டோம் என ஸ்கூல் பசங்க மாதிரி அடம்பிடிச்சது அழகா ஆசியர்களுக்கு?
நாட்டில் இரண்டு வேலையில் இருப்பவர்களை பார்த்துதான் மக்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். ஒண்ணு உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள். இன்னொன்று அறிவுக்கண்ணை திறந்துவிடும் ஆசிரியர்கள். யாருக்கும் கிடைக்காத ராஜமரியாதையை தெருவில் தவறவிட்டது யார் குற்றம்? நிதானமாக யோசித்தால் உண்மையும், தவறும் புரியும். அன்றைய ஆசிரியர்களிடம் நிறைவான , ஒழுக்கமான.மாணவர்களை நேசித்து, மாணவர்களும், ஆசிரியர்களை நேசித்து " கல்வி இருந்தது. இந்த ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை ....90% சதவீத மக்கள், அரசு ஊழியர்கள. மீதான அலட்சியப் போக்கை, நினைத்து : ஸ்டிரைக் பண்ணியவர்கள் மீது வெறுப்பாக தான் இருந்தார்கள்
இதிலேயே தோற்றுவிட்டது இந்த போராட்டம் ° அன்று எம்.ஜி.ஆர் ஆட்சியில் 60 நாட்கள் நடந்த போராட்டம் இன்று எடப்பாடி ஆட்சியில் 6 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பொதுவாக எந்தக்கட்சி எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்: இது வழக்கமான ஒன்று தான் :
நான்கு நாட்களுக்கு முன்பு எனக்கு வந்த அலைபேசியில் எனது நெருங்கிய முகநூல் நண்பர்கள் அவர்கள்.
நீங்கள் இந்த போராட்டத்தை ஆதரித்து ஒரு பதிவு போட்டால் என்ன? என்றார்கள். அவர்களிடம் தொலைபேசியில் பேசியும் ஃ அவர்கள் மனநிலை மாற்றம் இல்லை:
விமர்சனம் வேறு
புரிதல் வேறு.
மக்கள் மனநிலை வேறு ...
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஆசிரியர் எனது முகநூல் பக்கத்தில் இருந்து என்னிடம் பேசிய செய்திகள்:
நான் மூணாம் வகுப்பு Teacher. எனது சம்பளம் 50000 க்கும் மேல்.லைப்ல
வசதியா செட்டில் ஆகியாச்சு" போராட்டத்துல Interest இல்லனாலும், ச்சும்மா பட்டும் படாம போவேன் : எனக் கு என்ன குறை? நான் நல்லாதான் இருக்கேன் ஃ என்று அவரது பேச்க இந்த பதிவுக்கு கண்டிப்பாகத் தேவை.
அரசு ஊழியர்களே
சற்று சிந்தியுங்கள்
உங்களிடம் பணியில் உதவி கேட்டு வரும் எங்களையும் மதித்து குறை கூறாதீர்கள். அலட்சியப்படுத்தாதீர்கள்"
இன்றும் எங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களை மதிக்கிறோம். இன்னும் தொடர்பில் இருக்கிறோம்
மாதா - பிதா .. குரு ஃதெய்வம் தான் எங்களுக்கு?
சற்று சிந்தியுங்கள் உங்களில் ஒருவன் னாக ° எனது பதிவு: கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...