Monday, January 28, 2019

தேர்வு நெருங்கும் போது தந்திரமாக போராட்டம் துவங்கி விட்டு,

ஆசிரியர்களின்
போராட்டத்தை நசுக்கும்
விதமாகவும், மக்களிடம்
ஆசிரியர்கள் மேல் வெறுப்பு வரும்படி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப்போல
அரசுப்பள்ளி
மாணவர்கள்
போட்டித்தேர்வுகளில்
வெற்றி பெறுவதில்லை
மருத்துவ நீட் தேர்வு , ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளில் சொற்ப அரசுப்பள்ளி மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள் ஏன்?.
ஆக
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை
என்கிற குற்ச்சாட்டை
தொடர்ந்து ஊடகங்களும் , சமூக செயல்பாட்டாளர்களும்
வைக்கும் குற்றச்சாட்டு.
நேற்று நடந்த தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கூட
இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
விவாதத்தில் கலந்து கொள்பவர்களும் இந்த இடத்தில் பதில் சொல்ல
முடியாமல் தின்றினார்..
அரசுப்பள்ளி களில் , அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யார்? யார்?
எந்த சூழ்நிலையிலிருந்து வந்து படிக்கிறார்கள்
என்கிற விவரம்
1.தினசரி கூலிவேலை செய்வோரின் குழந்தைகள்
2. முறைசாரா தொழிலாளர்களின் குழந்தைகள்
மேற்காணும் வகையினரும் அப்பள்ளிக்கூடத்தைப் பொருத்து வசதியான
குடும்பத்தைச்சார்ந்தவர்களாக மற்ற மாணவர்களால் கருதப்படக்கூடியவர்கள்
3. பெற்றோர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேறு ஊர்களிலிருந்து வந்து இந்த ஊரில் வசிப்பவர்களின் குழந்தைகள்.
4. வேறு ஊர்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் சொந்த ஊரிலேயே உறவினர்களின் உதவியோடு வாழும் குழந்தைகள்.
5. தாய் தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்த ஏழைக்குழந்தை.
6.
தாய் , தந்தை இருவரும் இருவேறு இடங்களில் வாழ்வார்கள் , குழந்தைகள் வயதான தாத்தா , பாட்டியுடனோ அல்லது சித்தி , பெரியம்மாவுடனோ வாழும் குழந்தைகள்.
ஒரு வேளை பெற்றவர்களுடன் இருந்தாலும் பள்ளிக்குப்புறப்படும் முன்புவரை
தாய் ., தந்தை செய்யும் வேலைக்கு ஒத்துழைப்பு செய்வார்கள்.
வயலுக்குப் போவது
ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது
உணவு சமைக்க உதவுவது
போன்ற வேலைகளில்
ஈடுபடுவது.
மாலையில் கால்நடைகளை அடைப்பது
அவைகளுக்கு இலை தலைகள் , புற்கள் எடுத்து வருவது போன்ற பணிகளை
செய்திடுகிறார்கள்.
பள்ளி முடிந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால்,
பள்ளிக்கூடம் தேடிவந்து சண்டை போடும் பெற்றோர்களும் உண்டு.
இன்னொரு வகை மாணவர்களும் அரசு அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள், அவர்கள் யாரென்றால் தனியார் பள்ளியில் சேர்த்து அங்கு அவர்கள் நடத்தியதில் எதுவும் அவர்கள் மண்டையில் ஏறாமல்
ஆறாவது ஏழாவது எட்டாவது வரை அவர்கள் தரும் கட்டணத்திற்காக வைத்திருந்து பின்பு பத்தாம் வகுப்பு வரும் உள்ளது அவர்கள் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்று டிசி தந்து வெளியேற்றப்பட்டு வேறு வழியின்றி அரசு பள்ளிக்கு வரும் அடிப்படை அறிவுகூட இல்லாத மாணவர்கள்.
இன்னொரு வகையினர் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாமல் அங்கிருந்து தொடர்ந்து படிக்க வைக்க இயலாத நிலையில் அங்கிருந்து மாற்றுச் சான்றிதழை கூட பெற்று வராமல் அரசு பள்ளியில் வந்து சேர்கின்ற மாணவர்கள் உண்டு.
அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களை பார்த்தால்
பெரும்பாலும் ஓரளவேனும் படித்த பெற்றோர்கள்,
நடுத்தரம் மற்றும் அதைவிட கூடுதல் பொருளாதாரம் கொண்டமாணவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் குழந்தை வரை படிக்கிறார்கள்.
என்ன படிக்க வேண்டும்
எப்படி படிக்க வேண்டும்
எங்கு படிக்க வேண்டும்
என திட்டமிட்டு படிக்கிறார்கள்.
தன்குழந்தைகளின் படிப்பிற்காக எந்த தியாகமும் செய்யதயாராக இருப்பவர்கள்..
அரசு பள்ளிகளில் மாணவனுக்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வும் இல்லாமல் பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் ஆனால் தனியார் பள்ளிகளில் 500-க்கு 490 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்றவர்கள் 480 மதிப்பிற்கும் அதிகமாக பெற்றவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு extra கோச்சிங், ஸ்பெஷல் கிளாஸ் என்று பல சிறப்பு வகுப்புகளை எடுத்து பயிற்சி அளிக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினோராம் வகுப்பிலிருந்தே நடத்துகிறார்கள். பத்தாம் வகுப்பிற்கான பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நடத்துகின்றனர் இரண்டு ஆண்டுகள் ஒரு பாடத்தை படிக்கும் மாணவனுக்கும் அரசு பள்ளியில் பத்தே மாதங்களில் அந்த பாடத்தை படிக்கும் மாணவனுக்கும் உள்ள வேறுபாட்டை பெற்றோர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்வதே இல்லை .
450 மதிப் பெண் எடுத்துவிட்டாலே அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் கொண்டு போய் விட்டு விடும் பெற்றோர்கள் அந்த 450 மதிப்பெண் எடுத்து தந்த அரசு பள்ளி ஆசிரியர்களை நம்பாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்புவது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் ஒரு முட்டாள்தனம். இவ்வளவு குறைகளை வைத்துக் கொண்டு இருக்கின்ற அதே பொதுமக்கள் அரசு பள்ளியில் தரம் இல்லை என்று கூறுவது எவ்வளவு ஒரு மடத்தனமான செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நான் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மூன்று ஆண்டுகளில்
45 சென்டம்களையும் 120 - (99 /100)மார்க் க ளையும் பெற்றுத் தந்தேன் .
நான் அரசு பள்ளிக்கு வந்து ஆறு ஆண்டுகளில் ஒரு centum கூட பெற்றுத்தர முடியவில்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மாணவர்களின் தரம் வேறு .
அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் தரம் என்பதை பொதுமக்கள் என்று புரிந்து கொள்வார்களோ.
தனியார் பள்ளியில் எந்த அரசு பள்ளி ஆசிரியரை பணியாற்ற செய்தாலும் அவரால் அந்த மாணவர்களை மிகச்சிறந்த மதிப்பெண்களை எடுக்க வைக்க. முடியும் ,,ஆனால் அதே தனியார் பள்ளி ஆசிரியர் ஒரு அரசாங்க பள்ளி மாணவனை கூட தேர்ச்சி பெற வைக்க கூட முடியாது., என்பதே நிதர்சனமான உண்மை.. எந்தவிதத்திலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட தகுதியும் திறமையும் கொண்டவர்கள் இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது சொல்லுங்கள்
இரண்டுதரப்பு மாணவர்களையும் எப்படி ஒப்பிடமுடியும்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலையே செய்வதில்லை என்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் கூறுவது எவ்வளவு தவறு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...