Wednesday, January 30, 2019

வெற்றி தோல்வியை கண்டிப்பாகத் தீர்மானிக்கும்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் “டிராய்” அமலுக்கு கொண்டு வரும் “விரும்பிய சேனல்களை பார்க்கும் திட்டம்” மக்கள் விரும்பாத ஒன்றாக மாறுகிறது
கேபிள் டிவி மினிமம் கட்டணம் 153 ரூ. அதில் 100 சேனல்கள் இலவசமாக பார்க்கலாம். அவற்றில் 25 தூர்தர்ஷன். மீதி 75 இலவசம்.
செய்தித் தொலைக்காட்சிகள் சில தவிர அனேகமாக இலவசம்.

ஆனால் எந்த இலவச சேனல்களைத் தரவேண்டும் என்பது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கையில் இருக்கிறது.
மக்கள் விரும்பிப் பார்க்கும் பல சேனல்கள் கட்டண சேனல்களாக மாறிவிட்டன.
எங்கள் வீட்டில் இரண்டு டிவி. ஒன்று சீரியல் போன்றவற்றை குடும்பத்தினர் பார்ப்பதற்காக.இன்னொன்று விவாதங்கள், செய்தி போன்றவற்றை நான் பார்ப்பதற்காக.
இரண்டிலும் இப்போது பார்த்து வருகிற சேனல்களைப் புதிய முறையில் மாற்றிப் பார்த்தால் சுமார் 1000 ரூபாய் கட்டணம் வருகிறது.
இது பெரிய பகல் கொள்ளை.
அனிமல் பிளானட் போன்ற அறிவுசார் சேனல்கள் பக்கம் தலை வைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அதிகக் கட்டணம்
ஜெயலலிதா காலத்தில் 70 ரூபாய் கட்டணத்தில் நிறைய சேனல்கள் பார்ப்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்டது அரசு கேபிள்
ஆனால் இப்போது ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக மத்திய அரசு மாற்றி அமைக்கும் புதிய திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு குரல் கூடக் கொடுக்கவில்லை. வேதனை.
இதுகுறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதில் ஏதாவது நிவாரணம் கிடைத்தால்தான் உண்டு.
இல்லையென்றால் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கேபிள் கட்டண உயர்வு வெற்றி தோல்வியை கண்டிப்பாகத் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...