Tuesday, February 23, 2021

ஜெயா ஏகாதசி.

 மாசி மாத வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்ய த்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கு இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரி டம் கேட்டார். " பகவான் கிருஷ்ணரே, முழுமுத ற் கடவுளே, ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோ ன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவ ராசிகளின் மூல காரணம் நீரே.."
"அனைத்தையு ம் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறை யைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள்.."
பகவான் கிருஷ்ணர் கூறினார், "மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பி றையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகா தசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாத சியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும்.."
"இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர். எக்காரண த்திற்கும் பிசாசு உடலை ஏற்க வேண்டியதில் லை. முக்தி அளிப்பதலும், ஒருவரின் பாவ விளைவுகளை அழிப்பதிலும் இந்த ஏகாதசிக் கு நிகர் வேறு ஏதும் இல்லை. சிங்கம் போன்ற மன்னா, நான் ஏற்கனவே பத்ம புராணத்தில் விளக்கியுள்ளபடி இந்த ஏகாதசியைப் பற்றி இப்பொழுது கேள்..."
" தேவர்கள் சுவர்க்க லோகத்தில் இந்திரனின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன ர். பாரிஜாத மலர்களின் நறுமணம் நிறைந்த நந்தன் கனனா என்ற காட்டில் இந்திரன், அப்ச ரஸ்களுடன் பலவிதமான பரிமாற்றங்களை அனுபவித்து வந்தார்."
"ஒரு முறை இந்திரன், ஐந்து கோடி அப்சரஸ்க ள் கொண்ட ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த சபையில் புஷ்பதந்தா என்ற ஒரு கந்தர்வ பாடகர் இருந்தார். சித்ரசேனா என்ற மற்றொரு கந்தர்வர், தன் மனைவி மாலி னி மற்றும் தன் மகளுடன் அங்கு வந்தார்..."
"சித்ரசேனாவிற்கு புஷ்பவனா என்ற ஒரு மக ன் இருந்தான். புஷ்பவனாவின் மகன் பெயர் மல்யவன். புஷ்பவதி என்ற ஒரு கந்தவர்ப் பெண் மல்யவனின் அழகால் கவரப்பட்டாள்.."
"புஷ்பவதி மிக அழகானவள் மன்மதனின் கூரி ய அம்புகளால் தாக்கப்பட்ட புஷ்பவதி, மல்யவ னை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, சை கைகள் கடைக்கண் பார்வை என பல வழிகளி ல் முயற்சித்தாள்.."
"மன்னா, அவளுடைய அழகை நான் எவ்வாறு வர்ணிப்பேன். முழு நிலவை போன்ற முகம் கயல் போன்ற விழிகள். தோடுகளால் அலங்க ரிக்கப்பட்ட காதுகள், அவளுடைய கழுத்தோ சங்கின் அழகை வெற்றி கொண்டன.."
அவளுடைய ஒளிரும் பாதங்கள் செந்தாமரை யின் அழகை வெற்றி கொண்டன. ஆடம்பரமா ன மற்றும் அழகான ஆபரணங்களும் ஆடைக ளும் அவளுடைய அழகான மேனிக்கு மீண்டும் அழகு சேர்த்தன. இந்த அழகான புஷ்பவதியை கண்டவுடன் மல்யவன் முழுமையாக வசீகரிக் கப்பட்டான்.."
"இந்திரனை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் மல்யவன் மற்றும் புஷ்பவதி ஆகிய இருவரும் மற்ற அப்சரஸ்களுடன் சேர்ந்து ஆடுவதிலும் பாடுவதிலும் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கவர்ந்ததால் அவர்களால் நடன நிகழ்ச்சியால் சரிவர செயல்பட இயலவில்லை.
"அதன் பலனாக நடன சபையில் சில தடுமாற் றங்கள் ஏற்பட்டன. இருவரும் ஒருவரை ஒருவ ர் ஓரக் கண்ணால் இடைவிடாமல் பார்த்துக் கொண்டு, மன்மத அம்புகளால் தாக்கப்பட்டன ர். ஆடலிலும் பாடலிலும் ஏற்பட்ட ஓயாது இடை யூறுகளை கவனித்த இந்திரன், அவ்விருவரி ன் மன நிலையை புரிந்து கொண்டார்.."
" நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தொடர்ந்து இடை யூறுகளால் இந்திரன் அவமதிப்பை உணர்ந்தா ர். பிறகு அவர்களை சபித்தார். நீங்கள் இருவ ரும் மூடர்கள் மற்றும் பாவமிக்கவர்கள். என்னு டைய ஆணையை மீறியதால் நான் உங்களை ப் சபிக்கிறேன். நீங்கள் இருவரும் ஆண் மற்று ம் பெண் பிசாசு உடலைப் பெற்று பூலோகத்தி ல் உங்கள் கர்ம வினைகளை அனுபவியுங்கள்
"இவ்வாறுஇந்திரனால் சபிக்கப்பட்ட மல்யவன் மற்றும் புஷ்பவதி பிசாசு உடல்களைப் பெற்று, இமயமலையின் ஒரு குகையில் தங்கள் துன்ப மயமான வாழ்க்கையை துவங்கினர். பிசாசு உடலைப் பெற்றதால், இருவரும் மிகுந்த துயரத்திற்கும் புலம்பலுக்கும் ஆளானார்கள்.."
சாபம் பெற்றதன் விளைவால், அவர்களால் தொடு உணர்வு, வாசனை மற்றும் தூக்கம் போன்ற உணர்வுகளால் இன்புற இயலவில் லை அடர்ந்த காடுகளிலும் குளிர்ந்த இமயம லைத் தொடரிலும் திரிந்து வந்த அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து தங்களைப் பற்றி யோசி க்கத் துவங்கினர்..."
"ஆண் பிசாசு, பெண் பிசாசிடம் கூறியது, நாம் எப்படிப்பட்ட பாவச்செயலை செய்து விட்டோம். அதனால் இந்த துயரம் மிகுந்த பிசாசு உடலை பெற்றோம்! இவ்வாறு மிகுந்த கவலையுடன் தங்கள் செயல்களை எண்ணி மிகவும் வருந்தினர்..."
"தங்களுடைய தவறான நடத்தையை எண்ணி மிக துயருற்று அன்று முழுவதும் எந்த ஒரு உணவையும் ஏற்கவில்லை. தற்செயலாக அந்த நாள் மங்களகரமான ஜெயா ஏகாதசி நாளாயிற்று. பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்ப ட்டிருப்பினும் அன்று அவர்கள் எந்த ஒரு ஜீவ னையும் கொல்ல வில்லை. அவர்கள் கிழங்கு களையோ, பழங்களையோ (அ) நீரையோ கூட ஏற்க வில்லை.."
" மன்னா, இவ்வாறு துயரத்தில் ஆழ்ந்து அவர் கள் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்திருக்கையி ல் சூரியனும் மறைந்தது. குளிராலும், கவலை யில் ஆழ்ந்திருந்ததாலும் அன்று இரவு முழுவ தும் அவர்கள் தூங்க வில்லை. மன உளைச்ச லால் அவர்களுக்கு புலனின் பத்திலும் விருப் பம் இருக்கவில்லை..."
"சிங்கம் போன்ற மன்னா, இவ்வாறு அவர்கள் தன்னையறியாமலே ஜெயா ஏகாதசியை அனு ஷ்டித்தனர். இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பலனாக அடுத்த நாளே, அவர்கள் பிசாசு உடலில் இருந்து விடுபட்டு, தங்களுடைய முந்தைய நிலையை அடைந்து விமானம் மூலம் சுவர்க்க லோகத்திற்குச் சென்றனர்.."
சுவர்க்க லோகத்தை அடைந்தவுடன் மகிழ்ச்சி யுடன், தேவர்களின் மன்னனான இந்திரனை அணுகி தங்கள் வணக்கங்களை சமர்ப்பித்த னர்.
அவர்களைக் கண்டவுடன் இந்திரன் ஆச்சர்ய த்துடன் கேட்டார். என்ன அதிசயம்?. எந்த புண் ணிய பலனால் உங்களுடைய பிசாசு நிலை அழிக்கப்பட்டது. எந்த தேவதை உங்களை என்னுடைய சாபத்திலிருந்து விடுவித்தார்?.."
இதற்கு மல்யவன் பதிலளித்தார். " முழு முதற் கடவுளின் காரணமற்ற கருணையாலும் ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனா லும், நாங்கள் உம்முடைய சாபத்தில் இருந்து விடுபட்டோம். எஜமானே, பக்தி தொண்டின் காரணத்தால் சுலபமாக நாங்கள் பேய் வாழ்க் கையில் இருந்து விடுபட்டோம்.."
இதைக் கேட்ட இந்திரன் மல்யவனிடம், "பகவா ன் விஷ்ணுவின் பக்தித்தொண்டாலும், ஏகா தசி விரதத்தாலும் நீங்கள் புனித மடைந்து உள்ளீர்கள். ஆகையால் நீங்கள் என்னாலும் வணங்கத் தக்கவர்கள். பகவான் விஷ்ணுவி ன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர் யாரா யினும் என்னால் வணங்கப்படுகிறார். மற்றும் மதிக்கப்படுகிறார்..."
"அதன் பிறகு புஷ்பவதியும் மல்யவனும் சுவர் க்க லோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஓ! யுதிஷ்டிர மன்னா! ஒருவர் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஜெயா ஏகாதசியின் அனுஷ்டானம். அந்தணரை கொல்லும் பாவத் தையும் நீக்கிவிடும்..."
"தானமளிப்பது யாகம் செய்வது மற்றும் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்றவற்றால் அடையும் புண்ணிய பலனை இந்த ஏகாதசி யை அனுஷ்டிப்பதன் மூலம் கூடுதல் பலனாக ஒருவர் அடைவார்.."
இந்த ஏகாதசியை நம்பிக்கையுடனும் பக்தியு டனும் அனுஷ்டிப்பவர் என்றென்றும் வைகுண் டத்தில் வாழ்வார். இந்த ஏகாதசியின் பெருமை களைப் படிப்பதாலும், கேட்பதாலும் ஒருவர் அக்னிஸ்தோம யாகத்தின் பலனை அடைவார்.
ஓம் நமோ நாராயணாய....
May be an image of 1 person and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...