Tuesday, February 23, 2021

முயற்சி செய்வதில் முடங்கிக் கிடக்காதே.

 ஒரு காட்டில் தவளை ஒன்று இருந்தது. அது மகிழ்ச்சியால்

தாவித்தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது,
அங்கிருந்த ஒரு குழிக்குள் விழுந்து விட்டது.
அக்குழியிலிருந்து
வெளியே வருவதற்குத் தவளை தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தது.
ஓயாமல் குதித்தது.
ஆனாலும் முடியவில்லை.
பிறகு
அங்குவந்த எல்லா விலங்குகளிடமும் தனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்.
என்னைக் குழியிலிருந்து வெளியே எடுத்து விடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டது தவளை.
ஆனால்,
அந்த விலங்குகள் தாங்கள் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு பிஸியாக இருப்பதாகவும்,
தங்களால் உதவி செய்வதற்கு நேரமில்லையென்றும் கூறிவிட்டன.
விலங்குகள் கூறியதைக் கேட்டு தவளை மனம் சோர்ந்து விடவில்லை.
தனது முயற்சியைக் கைவிடவில்லை.
குழியிலிருந்து மேலே வருவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது தவளை.
அடுத்த நாள்.....!
அந்தப் பகுதிக்குச் சென்ற விலங்குகளுக்கு ஓர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
குழியிலிருந்து வெளியே வந்த நிலையில் அந்தத் தவளை குதித்து விளையாடிக் கொண்டிருந்ததை அவ்விலங்குகள் பார்த்து ஆச்சரியம் அடைந்தன.
அந்த விலங்குகள் தங்களுக்குள்ளாகவே கேள்வியைக்கு கேட்டுக் கொள்ளத் தொடங்கின.
"நாம் யாருமே அந்தத் தவளைக்கு உதவவில்லையே!
அப்படியிருக்க அந்தத் தவளை எப்படிக் குழியை விட்டு வெளியே வந்தது?" என்று யோசித்தன அம் மிருகங்கள்.
அப்போது ஒரு மிருகம் சொன்னது.
"வாருங்கள், அந்தத் தவளையிடமே சென்று கேட்போம்".
எல்லா விலக்குகளும் தவளையிடம் சென்றன.
"தவளையாரே!
நாங்கள்தான் யாரும் உனக்கு உதவி செய்யவில்லையே,
அப்படியிருக்க,
பிறகு எப்படி அந்தக் குழியிலிருந்து வெளியே வந்தாய்? என்று
அம்மிருகங்கள் கேட்டன.
"நான் அந்தக் குழியிலிருந்து வெளியே வருவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.
உங்களிடமும் உதவி கேட்டேன்.
நீங்கள் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருப்பதாகவும்,
உதவி செய்வதற்கு ஓர் நொடி கூட ஒதுக்க முடியாத அளவுக்குப் பிஸியாக இருப்பதாகவும் கூறிவிட்டீர்கள்.
உங்களுடைய போக்கு
எனக்குச் சோர்வைத் தரவில்லை.
மாறாக மன உறுதியைத் தந்தது.
"தனித்தோ, குழுவாகவோ முயற்சிப்பதில் வெற்றி நிச்சயம் என்று உணர்ந்து கொண்டேன்", என்று கூறிய தவளை தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்தியது.
பின்னர்,
நான் தொடர்ந்து எட்டி எட்டிக் குதித்துக் கொண்டே இருந்தேன்.
அதைத்தான் என்னால் செய்ய முடியும்.
அந்த அளவுக்குத்தான் இயற்கை எனக்கு உடலமைப்பையும், சக்தியையும் கொடுத்திருக்கிறது.
தொடர்ந்து நான் குதித்துக் கொண்டே இருந்ததால் எனக்குப் பசி எடுத்தது.
பசி அதிகமாக அதிகமாக என்னால் தாங்க முடியவில்லை.
அதனால், கத்த ஆரம்பித்து விட்டன்.
"அப்போது எனது எதிரியாகிய பாம்பு எனது சத்தத்தைக் கேட்டு,
என்னைப் பிடித்து சாப்பிடுவதற்காக குழிக்குள் வந்தது.
அவ்வாறு பாம்பு வருகின்ற சமயம் பார்த்து,
நான் எட்டிக் குதித்து பாம்பின் கழுத்தை இறுகக் கட்டிப ்பிடித்துக் கொண்டேன்.
பாம்பு என்னைச் சாப்பிட அப்படியும் இப்படியும் முயன்றது.
ஆனால்
நான் எட்டிக் குதித்துத் தப்பித்துக் கொண்டேன்." என்று
தான் குழியிலிருந்து வெளியே வந்த கதையைச் சொல்லி முடித்தது தவளை.
தவளையின் பதிலையும், அது தப்பிப் பிழைத்த விதத்தையும் கேட்ட மற்ற மிருகங்கள்,
தவளையைப் பாராட்ட முடியாமல்,
தங்களது சுயநலத்தை எண்ணியபடி தலை குனிந்து நின்றன.
முயன்றால் ஒரு ஆபத்தைக் கூட வாய்ப்பாக மாற்றி நம்மால் வெற்றி பெற முடியும் என்பதற்கு
இந்தத் தவளைக் கதை
நல்ல எடுத்துக்காட்டு.
எனவே,
முயற்சியில் தோற்கடிக்கப்படலாம்.
ஆனால்,
முயற்சி செய்வதில் முடங்கிக் கிடக்காதே.
தோற்றுவிடாதே.
அப்போதுதான் நமக்கு வெற்றி நிச்சயம்.
பதிவாகிடுத்து.
இரவில் கண்ட கனவுகள்
மறந்து போகலாம்.
ஆனால், இதயம் தொட்ட உறவுகளின்
நினைவுகள் என்றும் மறப்பதில்லை.
இனிமையான காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...