Tuesday, February 23, 2021

பாஜகதான் நாராயணசாமி ஆட்சியைக் கவிழ்த்தது என்று நினைக்கும் மூடர்கள் .

 திமுகவின் பொற்காலம்!

வரும் தேர்தலுக்குப்பின் புதுவையில்
திமுக கூட்டணி அரசு அமைகிறது!
--------------------------------------------------------------------------
தமிழ்நாடு, புதுவை ஆகிய இரண்டு
மாநிலங்களிலும் திமுக ஆட்சி முன்பு
இருந்தது. தமிழ்நாட்டில் கலைஞரும்
புதுவையில் ராமச்சந்திரனும்
முதல்வர்களாக இருந்த காலம்
ஒன்று உண்டு.
அப்படி இருந்த காலமே திமுகவின்
பொற்காலம் என்றார் கலைஞர்.
புதுவையின் திமுக முதல்வராக இருந்த
ஜானகிராமன் வேறு யாருமல்ல,
கலைஞரின் கார் டிரைவர்தான்.
தனது வேலைக்காரர்களுக்கு பதவி
கொடுக்கும் இடமே புதுவை மாநிலம்
என்ற நினைப்பில் இருந்தவர் கலைஞர்.
அந்த நினைப்பில் எல்லாம் மண் விழுந்து
வெகுகாலம் ஆகிப் போனது.
தற்போது ஸ்டாலின் புதுவை மீது
அக்கறை செலுத்தத் தொடங்கி உள்ளார்.
எனவே ஜகத் ரட்சகனை புதுவையின்
மாநிலப் பொதுச் செயலாளராக
நியமித்தார் ஸ்டாலின்.
மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பை
ஏற்றுக் கொண்ட உடனேயே என்ன
செய்தார் ஜகத் ரட்சகன்?
1) நாராயணசாமியை பகிரங்கமாகக்
கண்டித்துப் பேசினார் ஜகத் ரட்சகன்.
2) புதுவையில் வளர்ச்சியே இல்லை
என்றார்.
3) கிரண் பேடியுடன் வீண் சண்டை
இடுவதிலேயே நேரத்தைக் கழிக்கிறார்
நாராயணசாமி என்று குற்றம் சாட்டினார்.
4) வரும் தேர்தலில் திமுக 30 தொகுதிகளிலும்
ஜெயிக்கும் என்றார்.
30 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்க
வேண்டுமென்றால், 30 தொகுதிகளிலும்
திமுக போட்டியிட வேண்டும்.இதன்
பொருள் என்ன? காங்கிரசோடு கூட்டணி
இல்லாமல் திமுக தனித்துப் போட்டியிடும்
என்பதுதான்.
ஆக, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க
மாஸ்டர் பிளான் வகுத்தவரும் ஜகத்
ரட்சகன்தான். அதை நிறைவேற்றிக்
காட்டியவரும் ஜகத் ரட்சகன்தான்.
ஒரு MLAக்கு 1சி அல்லது 2சி வீதம்
அஞ்சாறு MLAக்களுக்குக் கொடுத்தால்
ஆட்சிக்குத் தெவசம் கொடுத்து விடலாம்.
அதிகபட்சமாக என்ன செலவாகும்?
10சி அல்லது 15சி செலவாகும். இது
டீச்செலவு போன்றது ஜகத் ரட்சகனுக்கு.
இதற்கு அப்புறமும் புதுவை ஆட்சிக்
கவிழ்ப்பின் உண்மையான சூத்திரதாரி
திமுக என்ற உண்மையை உணராமல்
இருக்கும் முட்டாள்களை என்ன செய்வது?
நாராயணசாமியின் ஆட்சியைக் கவிழ்க்கும்
அளவுக்கு பாஜக வலுவான கட்சி அல்ல.
ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவால் முடியாது.
இதுதான் உண்மை.
ஆனால் திமுக நினைத்ததை முடிக்கும் .
ஆற்றல் படைத்தது. நினைத்ததுமே
ஆட்சியைக் கவிழ்த்து விட்டது.
பாண்டிச்சேரித் தெருக்களில்
நாராயணசாமியை பைத்தியமாய்த்
திரிய வைத்து விட்டது.
NGO ஆசாமி கூடங்குளம் உதயகுமார்
ஆனந்த லஹரியை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறார். நாராயணசாமி
ஆட்சி கவிழ்ந்ததில் ஜகத் ரட்சகனை
விட உதயகுமாருக்கே சந்தோசம்!
இவ்வளவுக்கு அப்புறமும் கையாலாகாத
பாஜகதான் நாராயணசாமி ஆட்சியைக்
கவிழ்த்தது என்று நினைக்கும் மூடர்கள்
உயிர்வாழத் தகுதியில்லாத தற்குறிகள்.
***********************************************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...