Monday, February 1, 2021

பின்னால் இருந்த அப்பட்டமான உண்மை.

 விவசாயிகள் போராட்டம் ஆரம்பத்தில் இருந்த நோக்கம் கமிஷன் மண்டிகளை காப்பதாகவே இருந்தது. ஆனால் அதற்கு தொடர்ந்து பண உதவி செய்தவர்களால், அது  மோடியை வீழ்த்த பின்னப்பட்ட வலையாக மாறிவிட்டது. 

மோடி இத்தோடு முடிந்தான் என்று  பெரிதும் நம்பியவர்கள் வீழ்ந்தது எப்படி?


விவசாயிகள் போராட்டமும் வில்லங்கமாகிப்போன விவகாரத்தையும் கொஞ்சம் ஆழமாக பார்போம்!. புதிதாக வந்த விவசாய சட்டம் விவசாயிகளுக்கு இருந்த மிடில்மேன்களின் கட்டுப்பாட்டை நீக்கி யாரிடம் வேண்டுமானாலும் விற்கும் ஆதாயமான ஒன்று... இதனால் பயன்படாமல் போனால்கூட பாதிக்கப்பட வாய்ப்புகளே இல்லை. ஆனால் இது வரையில் விவசாயிகளை தன் கைப்பிடியில் வைத்திருந்த இடைத்தரகர்களுக்கு இது மிகப்பெரும் நஷ்டம். இந்த புதிய சட்டம் ஒருபோதும் விவசாயிகளை எந்த வகையிலும் வெளியேதான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அப்படி இருக்க ஏன் அவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் ஆதாயம் கிடைக்குமெனில் அதை தொடர  சுதந்திரம் இருந்தும் அரசுக்கு எதிராக போராடவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஏன் போராடினார்கள். 


இதன் பின்னால் இருந்த அப்பட்டமான உண்மை என்பது

போராடியது விவசாயிகளே அல்ல! பெரும்பாலும் மண்டி வைத்திருக்கும் இடைத்தரகர்கள், சில புரியாத விவசாயிகள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள் என்று ஆரம்பித்து சபரிமலையில் போராடியவர்கள் வரை பலரும் பங்கு பெற காசு கொடுத்து வரவழைக்கப்பட்டார்கள்.  அத்தோடு அரசியல் கட்சிகளின் எதிர்வினை என்றதொரு கூட்டம் என்றுமே அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் ஆஜராகிவிடும், அது இங்கும் உண்டு. அதுவும் பஞ்சாபில் காங்கிரஸ் ஆளும கட்சியாக இருக்க அந்த கூட்டமும், அதனுடன் காலிஸ்தான் தீவிரவாதிகள்,  கம்யூனிஸ்டகளும் கூட சேர்ந்து கொண்டார்கள்.


சரி இத்தனை பேருக்கும் மது, உணவு, பணம் என்று எல்லா வசதிகளையும் செய்தவர்கள் யார்? 


ஆரம்பத்தில் மண்டி வைத்திருக்கும் இடைத்தரகர்கள். 


அப்படியெனில் இதில் இதுவரை விவசாயிகளை ஏமாற்றி எத்தனை கோடிகள் கொள்ளை அடித்திருந்தால் இவ்வளவு செலவு செய்து இந்தியா முழுவதும் இருந்து வந்த அரசியல் போராளிகளுக்கு செலவு செய்திருப்பார்கள்? 


அதுவும் வெறும் பிரியாணியும், குவாட்டரும் மட்டுமல்ல, பிட்சா வரையிலும் கொடுக்கப்பட்டது.

யோசித்து பாருங்கள் எவ்வளவு செலவு? 


அப்படியெனில் எந்த அளவுக்கு இவர்கள் விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சி கொள்ளை அடித்திருப்பார்கள் என்று!


மோடி அரசை பொறுத்து உளவுத்துறை மூலம் கிளியராக விவசாயிகள் போராடவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டுவிட்டது. எனவே இது Matter of time to fail என்று முடிவும் செய்துவிட்டது. ஆனால் மோடி அரசு எதிர்பாராதவிதமாக இது இடைத்தரகர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் மோடியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மதம் மாற்றும் கும்பல், மதத்தை வைத்து தீவிரவாதம் செய்த கூட்டம் (தமிழ்நாட்டில் பால் தினகரன் மூலம் பெரும் தொகை வந்ததா அங்கு ரெய்ட் நடந்தது), மத போதகர்கள், எதிர்கட்சிகள் என்று மட்டும் இல்லாமல் சீனா, கனடா, இங்கிலாந்து போன்ற நாட்டில் இருந்தும் மோடியை எதிர்த்து அவரால் பாதிக்கப்பட்ட குரூப்கள் வரை நிதி அளிக்க ஆரம்பிக்க இந்த போராட்டம் அரசு எதிர்பார்த்தைவிட அதிக நாள தொடர்ந்தது. 


போராட்டக்காரர்கள் எதிர்பார்ப்பின்படி இதற்கு மோடி அரசு கடுமையாக எந்த நடவடிக்கையும் எடுத்தால் அது ஒரு வகையில் போராட்டத்தை ஊக்கப்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவேயில்லை, இருந்தாலும் விடா முயற்சியுடன் பணம் மூலம் போராட்டம் தொடர்ந்தது. 


ஒரு சில வாரங்கள் என்றால் சமாளிக்கலாம், ஆனால் இது காலவரையின்றி செல்ல இடைத்தரகர்கள் கை வீழ தொடங்கியது. ஆனால் மோடியின் அரசு பின்வாங்கும் என்ற அறிகுறிகள் எதுவும் தோன்றவில்லை. எனவே, இதை தொடர முடியாமல் வாழ்வா, சாவா என்று முடிக்க நினைத்தது இடைத்தரகர்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த களம் டெல்லிக்குள் ட்ராக்டர் போராட்டம், தெரிந்தெடுத்த நாள் குடியரசு தினம். 


அவர்களின் கணக்குப்படி, எல்லை மீறும்போது, மோடியின் அரசு கடுமையான நடவடிக்கையை போராட்டகாரர்களுக்கு எதிராக எடுக்கும், அதன் மூலம் உலக அரங்கிலும், இந்திய விவசாயிகள், மக்களிடையே போராட்டக்காரர்களுக்கு செல்வாக்கு பெருகும் என்று நினைக்க, மோடி அரசோ அதற்கு நேர்மாறாக அவர்கள் இஷ்டத்திற்கு ஆட விட்டது. இதில் ஏற்கனவே அளவில் அதிகமாக புகுந்துவிட்ட தவறான சக்திகள் தங்கள் உண்மையான கோர முகத்தை காட்ட, விவசாயிகள் எனும் முகத்திரை முற்றிலும் கிழிந்தது. அதுவும் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் நடந்த நடவடிக்கைகள் எல்லை மீறின. 


கட்டுக்கடங்காத போராட்ட்காரர்களால் எதிர்கட்சிகள், இந்திய விரோத சக்திகள் முகத்தில் கரியை ஒருபக்கம் பூச, மறுபக்கம் மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களே கோபப்பட்டு கூறுமளவுக்கு இது மாற எல்லாம் ஒரு நாளில் தலைகீழாய் மாறிப்போனது. அதன் விளைவாக விவசாய சங்கம் தனக்கு ஏற்பட்ட பெயரை மேலும் மோசமாகாமல் தடுக்க  பின்வாங்கியது, போராட்டத்தை வாபஸ் வாங்கியது.


விளைவு மோடி அரசு டிப்ளமேட்டிக்காக இந்த போலி போராட்டக்காரரர்களை நாசூக்காக நாக் அவுட் செய்தது. 


கிடைத்த ஒருவாய்ப்பும்  கலங்கிப்போக  அரசியல்வாதிகள்  சோரம் போனார்கள். 


இது வரும் மாநில தேர்தல்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், முழு வெற்றியை NDA கூட்டணிக்கு கொண்டுவர போதுமானதாக இருக்குமா?..


மோடி, அமித்ஷா போன்ற அகாய சூரர்களுக்கு முன்னால் சோடை போன தலைவர்கள் தலை மீண்டும் தொங்கியது.


இப்போதைக்கு, "என்ன செய்யப்போகிறாய்?' என்ற பாடலோடு  அவர்கள் அரசியல் அரைகுறையாய் முடிந்துபோனது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...