Monday, February 1, 2021

சீனாவே தான்.

 💞இந்தியாவிற்கு தாங்கள் தான் ஆகச் சிறந்த நட்பு நாடாக இருக்க முடியும். இதை சொன்னது சாட்சாத் சீனாவே தான்.


உலகமே அதிர்ச்சியில் உறைந்து வாயடைக்க செய்த விஷயமாக இது பார்க்கப்படுகிறது. 


🔥ஏன் இந்த மாற்றம்??????

ஒருவேளை விளையாடுகிறார்களா என்று சீரியஸாக விவாதம், உலக அரங்கில் அலசி ஆராயப்பட்டு வருகிறது.


💥இதை சொன்னது சீனாவின் ஊடகங்களுக்கு பொறுப்பு வகுக்கும் செய்தி தொடர்பாளர் #ஜாவோ_லிஜியன். இவர் பெய்ஜிங் கருத்துக்களை மாத்திரமே பகிர கூடியவர், கிட்டத்தட்ட சீன அதிபர் சி-ஜீங் பிங் கின் ஊதுகுழல் என்றே பெயர் பெற்றவர். இத்தோடு விடாமல் உலகின் அதி சக்தி வாய்ந்த தலைமையாக சீனாவும் இந்தியாவும் இனி வரும் காலங்களில் இருக்க போகிறது என்று அதிரடித்தார். சம பலம் வாய்ந்த வலிமையான நாடுகள் மட்டுமே மிகச் சிறந்த நட்பு நாடாக இருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.


இதனால் தற்போது உள்ள கால சூழ்நிலையில் உலகின் வல்லரசு நாடாக சீனா மற்றும் இந்தியா இணைந்து திகழ கூடிய சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது என்று பேசி முடித்தார்.


இஃது அங்கு குழுமியிருந்த உள்நாட்டு ஊடகங்களை தவிர சில வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் காணப்பட்டனர். பின்னர் சுதாகரித்துக் கொண்ட ஊடகங்கள் சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.


💥 பிறகு ஏன் இந்திய சீன எல்லையில் துருப்புக்களை குவித்து வைத்து போர் சூழலை உண்டாக்கி இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.


அதற்கு அவர் இந்திய எல்லை குறித்த வேண்டும் என்றே தவறான பதிவுகளை இங்கிலாந்து அரசு ஏஜன்சிகள் 1938 ஆண்டு பகுதிகளில் இடம் பெற செய்து விட்டனர். தாங்கள் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு கடித பரிமாற்றம் செய்து இருக்கிறோம். வேண்டுமானால் அதற்கான ஆதாரங்களை தருகிறோம் சரிபார்த்து கொள்ளுங்கள் என்றார்.


💥 எல்லாம் சரி எல்லையில் சீன ராணுவத்தினரை அடித்து கொன்ற இந்திய ராணுவத்தினர் தங்கள் பக்கம் 23 பேர் இறந்ததாக சர்வதேச அரங்கில் பதிவு செய்து இருக்கிறார்கள், ஆனால் சீனா தரப்பில் எத்தனை பேர் வரை இறந்தனர்.??? இதற்கு பதில் நடவடிக்கைகள் என்ன??? என்று அடுத்த கேள்வி எழுப்பி அவரை திணறடிக்க பார்த்தனர்.


சற்றும் சளைக்காத லிஜியன் அது ராணுவ தரப்பில் நடந்துவிட்ட தவறு என்றும் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் நடந்த விட்ட சம்பவம் என்று பதிலளித்தார்.


🔥ஆடி போய் இருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள். இவர் யாரை சொல்கிறார், இந்திய ராணுவத்தினரையா அல்லது சீன ராணுவத்தினரையா என்று மண்டையை பிடித்து கொண்டனர்.


மேலும் அவரே தொடர்ந்தார், அது அதிகார மட்டத்தில் பேசி முடிக்க வேண்டிய சமாச்சாரம் என்றாரே பார்க்கலாம். அங்கிருந்தவர்களுக்கு இது கனவா நிஜமா என்றே நினைக்கும் அளவிற்கு வேறு கேள்விகள் உண்டா என்று கேட்டும் இருக்கிறார்.


👉இது வரை சீனா உலக அரசியல் அரங்கில் இந்திய சீன எல்லை பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. எங்கோ தவறு நடக்கிறது இந்திய ராணுவத்தினர் அமைதி காக்கும் படி வேண்டுகோள் விடுத்ததோடு சரி. இது கூட கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு சமயத்தில் சொன்னது தான். இது நாள் வரை வாயே திறக்காத சீனா தற்போது இப்படி அதிரடித்தை உலகம் நம்பவில்லை.


அநேகமாக இன்றைய ஞாயிற்றுக்கிழமை உலக நாடுகளின் பத்திரிகை தலையங்க செய்தியே இதுவாக தான் இருக்க போகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.


💓 அதேபோல் இந்திய ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் தனித்துவமான களமுனை செயல்பாட்டால் கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.


☝️இந்திய சீன எல்லை பிரச்சினை உலக பிரசித்தம். ஆரம்பத்தில் இந்தியாவிலேயே இது குறித்து கருத்து சொன்ன பலர், தேவையில்லாமல் சீனாவிடம் போய் வம்பில் மாட்டிக்கொண்டது என்றவர்களும் உண்டு.

லடாக் பகுதி இந்தியாவில் கிழக்கா மேற்கா என்று கூட தெரியாதவர்கள் இருக்கிறார்கள் என நாட்டின் பாராளுமன்றத்தில் வைத்தே 39 எம்பிகளை கேலி பேசிய சம்பவமும் நடந்துள்ளது.


இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் எந்த இடத்தில் இந்திய ராணுவ ஊடுருவி தாக்குதல் நடத்தினர் என்று இந்த சபைக்கு தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இந்த அரசுக்கு உண்டு என்று பொங்கி அசிங்கப்பட்டார். நாட்டின் பிரதமராக துடிக்கும் ஒரு மட சாம்பராணியோ ஏன் நமது ராணுவ வீரர்களை ஆயுதம் இல்லாமல் அனுப்பி வைத்து இருக்கிறீர்கள் என்று அலம்பல் வேறு செய்தது.


இரு நாட்டு ராணுவமும் ஆயுதம் ஏந்திட கூடாது என்று ஒப்பந்தமே அவர்கள் ஆட்சி காலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டதை மறுந்து விட்டது...... தவறு அதற்கு அது கூட தெரியாது.


ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.


💓இந்தியாவை உலக நாடுகளுக்கு தலைமை தாக்கலாம் வா என்று அதன் எதிரி நாடாக பார்க்கப்பட்ட சீனா இறங்கி வந்து அழைத்திருக்கிறது. நாம் இணைந்து செயல்பட்டால் இந்த உலகம் நம் காலடி கீழ் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.


வெகு நிச்சயமாக இது ஒரு நாட்டின் செய்தி தொடர்பாளர் பேசும் பேச்சு அல்ல, அதே போன்று இஃது அவரது சொந்த கருத்தாகவும் இருக்க முடியாது.


அப்படி என்றால்.......???????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...