Monday, October 15, 2012

ஜிமெயில் தரும் இன்னொரு புதிய வசதி

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெயில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. 

இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம்.

தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,) இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம் விரும்புவதைப் பெறலாம். 

தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக, ஒபாமா (Obama) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Obama எனத் தர வேண்டும். நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Obama என அமைக்கப்பட வேண்டும். 

முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும் எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல். பைல்களாக இருக்க வேண்டும்.

 Word, Excel, and Powerpoint போன்ற பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது. 

தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது. இது இன்னும் பன்னாட்டளவில் தரப்படவில்லை என்றாலும், விரைவில் வழங்கப்படும் எனத் தெரிகிறது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...