Saturday, September 29, 2012

கேக்கிறவன் கேனையா இருந்தா கேப்பையிலும் கேஸ் சிலிண்டர் வரும்

தமிழ்நாட்டினை பல அரசியல்வாதிகள் தொடர்ந்து சீண்டிப் பார்த்து வருகின்றார்கள். அதற்க்கு ஒரு சில எட்டப்பன்களும் உதவியாய் இருந்துக் கொண்டு கழுத்து அறுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நமக்கு முறையாக வர வேண்டிய தண்ணீரை தர மறுக்கின்றது கர்நாடக அரசு. அதற்க்கு அவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு பக்கம் நமக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதற்காகவே கேரளா அணை கட்ட முயற்ச்சிக்கின்றது. நம் இன உணர்வுகளை கொச்சைப் படுத்துவதற்க் கென்றே ராஜபக்சேவிற்கு சிவப்புக்கம்பளம் விரிக்கப் படுகின்றது.

அவர்களை கேள்வி கேட்கும் உரிமை நம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லை, உரிமை என்று சொல்வதை விட வசதி, வாய்ப்புகள் என்று சொல்லலாம். அவர்களை நாம் கேள்வி கேட்கும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே. அந்த ஒரு நாளுக்கு பிறகு அவர்களது ஆட்டம் பேயாட்டமாகவே இருக்கின்றது.


கர்நாடகா தண்ணீர் தர மறுக்கின்றது. அது நமக்கு வர வேண்டிய நியாயமான பங்கு. இந்தியாவின் மிகப் பெரிய விசயமாக நாம் மதிப்பது உச்ச நீதிமன்றத்தை தான்...அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே காலில் தூக்கி போட்டு மிதித்து விட்டார்கள் கன்னடர்கள். தனது தாய்மொழிக்காக, தனது சொந்த மாநிலத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.எம் கிருஷ்ணா குரல் கொடுத்து பேசி வருகின்றார்.,
ஆனால் நம் ஊரை சேர்ந்த, நம் தாய் மொழியை உரிமை கொண்டாடும் பஞ்சத்தில் அடிப்பட்ட சிதம்பரம் சொந்த மண்ணிற்காக, சொந்த மக்களுக்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? அவர் பிரதமரை அழைத்து எஸ்.எம் கிருஷ்ணா இப்படி பேச கூடாது, அப்படி என்றால் நானும் பேசுவேன் என்று கூட சொல்ல முடியாதவரா? அதற்க்கு நீங்கள் ஏன் அங்கிருக்க வேண்டும்? எங்களோடு வந்து பிச்சை எடுக்கலாமே? உங்களுக்கு ஓட்டு போட்ட காலத்துலே இருந்து நாங்க அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்...

எஸ்.எம்.கிருஷ்ணா விற்கு கன்னடன் என்ற வெறி இருக்கும் போது உங்களுக்கு தமிழன் என்ற உணர்வு கூட இல்லையா?  கர்நாடகாவில் மட்டும்தான் விவசாயி இருக்கின்றானா? தமிழ்நாட்டில் இருப்பது உன் கண்களுக்கு தெரியவில்லையா? இன்னொருவர் தமிழன், தமிழ் பால், தமிழ் மோர், என்று படம் காட்டிகொண்டு இருப்பவருக்கு பல எம்பிக்கள் இருக்கின்றார்கள். நீங்கள் நினைத்தால், உண்மையில் தமிழர்கள் மீது அன்பிருந்தால் உங்களால அந்த உரிமையை வாங்க முடியாதா? என் இன மக்களை கொன்றவர்களின் வாழ்வுரிமைக்காக டெ(த்)சோ மாநாடு எல்லாம் நடத்தினீங்க...அதுல என்னத்த சாதிச்சீங்க தலைவரே? இரண்டு நாளைக்கு முன்னாடி வந்து சிரிச்சிக்கிட்டே ஆட்டம் போட்டுட்டு போயிட்டானே அந்த கொடுங்கோலன் ராஜபக்சே....கிரிக்கெட்டுல நாம ஒரு சிக்சர் அடிச்ச சிங்கள வெறிபிடிச்ச நாய், நம்ம மீனவர்களை ஆறு பேரை அடிக்கிறானுங்க...இப்போ சொல்லுங்க இந்தியா செயிக்கணும்னு என் மீனவ குடும்பம்  நினைப்பானா? நாங்க மட்டும் இந்தியா, இந்தியா னு கனவு காணனும், நீங்க மட்டும் சுவிஸ் பேங்க், சுவிஸ் பாங்குனு பணத்துல மிதக்கனுமா? 
 
பேஸ்புக், டுவிட்டருக்கு எல்லாம் நேரம் கிடைக்குதே, உங்களுக்கு தமிழனுக்காக குரல் கொடுக்க நேரம் இல்லாம போச்சே னு நினைக்கிறப்ப கவலையாத்தான் இருக்கு.. ஐயா பெரியவரே...நாங்கதான் கண்டனம் தெரிவிக்க முடியும்..எங்களுக்கு அவ்வளவுதான் சக்தியும் உரிமையும் இருக்கு. ஆனா அரசியல்வாதிங்க உங்களுக்கு மட்டும்தான் அந்த பாழாய் போன முழு சக்தி இருக்கு. அதையும் மீறி கண்டனம் தெரிவிச்சா உடனே தேசத்ரோகம் னு சொல்லி உள்ளே பிடிச்சி போட்டுருதீக.....

அமைதிப் பூங்காவாய் இருந்த தமிழ்நாடு இப்போது ஒவ்வொரு பிரச்சினையிலும் திக்கி திண்டாடி வருகின்றது. தண்ணீர் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, கடுமையான மின்வெட்டு, விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் என்று தினமும் நாம் முப்பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். ஆனால் இன்னொருவர் என்னடா என்றால், முப்பெரும் விழா என்று கனிமொழி, ஸ்டாலின், அழகிரி க்காக விழா நடத்திக் கொண்டிருக்கின்றார். ஏன்யா ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்னாச்சு? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என்னாச்சு? காவிரி நீர் பிரச்சினை என்னாச்சு? ஈழத் தமிழர் பிரச்சினை என்னாச்சு? எல்லாத்துக்கும் மேலாக கட்சத் தீவை கண்ணுக்கு எதிரா காவு கொடுத்திட்டு இப்போ அதுக்காக சவுண்டு விட்டுகிட்டு இருக்கீகளே? கேக்கிறவன் கேனையா இருந்தா கேப்பையிலே கேஸ் சிலிண்டர் வருதுன்னு சொல்வீகளோ..... எஸ்.எம்.கிருஷ்ணா வை பாத்து தமிழுணர்வை கத்துக்கோங்க??!!??

சிதம்பரம் செய்த தேசத் துரோகம்??? ஆதாரம் அம்பலம்..

நேற்று மத்திய அமைச்சர் ஒருவர் அசிம் திரிவேதி தேசத் துரோகம் செய்துவிட்டதாக கூறி இருக்கின்றார், வேடிக்கையாக இருக்கின்றது? அவர் கேலிச் சித்திரம் வரையும் ஒரு நபர், அவர் அவரது தொழிலைத் தான் செய்திருக்கின்றார். அவர் மனதில் பட்டதை அவர் சொல்லி இருக்கின்றார். அதையே தேசத் துரோகம் என்று சொன்னால் கீழே வரும் படங்களுக்கு அவர் என்ன சொல்வார்?

 
அது தேசத் துரோகம் என்றால், இது என்ன?



அடுத்தது...
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையைப் பற்றி கலைஞரிடம் கேள்வி கேட்டதே தவறு..அதற்க்கு அவர் பதில் அளித்துள்ளது அதை விட மிகப் பெரிய தவறு. கடந்த ஐந்தாண்டுகளில் அவர் முதல் அமைச்சராய் இருக்கும் போதே இந்த பிரச்சினை தலை தூக்கி விட்டது. அப்போதெல்லாம் மௌனம் சாதித்து விட்டு தற்போது போராட்டக்காரர்களும், தமிழக அரசும் இதற்க்கு பேச்சு நடத்த வேண்டும் என்று புதுசாய் ஒரு "பிட்"டை போட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு பெயர்தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு, பிள்ளையும் கிள்ளி விடுவது என்பதோ???

உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட நீங்கள் இந்த பிரச்சினையில் இப்போது கூட தலையிட்டு காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவிற்கு கொண்டு வரலாமே. அதை விட்டு விட்டு தற்போது உதவி செய்வது போல் நடிப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும் என்று தெரியவில்லை. உங்களால் மத்திய அரசிடம் வாக்குவாதம் செய்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்திற்கு வாங்கித் தர முடியுமா? அப்படி முடியும் என்றால் சொல்லுங்கள்!!! நாங்கள் உங்கள் பின்னே அணி வகுத்து வருகின்றோம்.
வெளிப்படையாக சொல்லுங்கள் தலைவர் அவர்களே ..கூடங்குளம் பிரச்சினையில் உங்களின்  ஒத்துழைப்பு யாருக்கு? நீங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கிற தமிழக மக்களுக்கா? அல்லது கூடா நட்பு  கேடாய்  முடிந்த  காங்கிரஸ் தோழர்களுக்கா?

அடுத்தது காங்கிரஸ் சார்பில் இருந்து வந்த நாராயணசாமி இன்னும் ஒருவாரத்திற்குள் மின்சார உற்பத்தி தொடங்கி விடும் என்று சொன்னார், அதன் பிறகு இன்னும் இருபது  நாளில் தொடங்கி விடும் என்று சொன்னார்..எந்த வருஷத்தின் ஒரு வாரம், எந்த வருஷத்தின் இருபது நாள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கத் தவறிவிட்டார்கள்...இருபது நாளில் நிலக்கரி ஊழல் புகார் மட்டுமே தொடங்கி இருக்கின்றது. வேறு எதுவும் ஆக்கப் பூர்வமாய் தொடங்கப் படவில்லை. உலக நாடுகள் எல்லாம் அணுஉலை ஆபத்து என்று கைவிரித்து விட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் அதனை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடக் காரணம் என்னவென்று கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது????யாரிடமாவது, ஏதாவது வாங்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழத் தான் தோன்றுகின்றது.

உங்களை ஒருவர் எதிர்த்து விட்டால் அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால், உடனே அவரது பின்பக்கத்தை, அவருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களே? கார்போராட் கம்பெனிகளில் வாங்கிய நன்கொடை நிதி 2008 கோடி தற்போது யார் வசம் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா?  வெளிநாட்டினில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத் தின் பட்டியலை உடனடியாக வெளியிட முடியுமா? 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூவாய்க்கு நிலக்கரி ஊழல் நடைபெற்றதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை விடுத்துள்ளதே? அதைப் பற்றி பொது மக்களிடம் நேரிடையாக மேடை போட்டு விளக்கம் அளிக்க முடியுமா?

இதே மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைப் படிதானே அன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை வழக்காக எடுத்து விசாரித்தீர்கள், அப்போது துணிந்து விசாரித்த உங்களால் தற்போது ஏன் துணிவாய் பதில் அளிக்க முடியவில்லை...அப்போது ராசா என்றதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து காங்கிரஸ் கரை படவில்லை என்று சொன்னீர்கள், இன்று மன்மோகன் சிங் என்றதும் காங்கிரஸ் மத்திய தணிக்கை குழு மீது பாய்கின்றதே...நாங்கள் ஒன்றும் படிக்காத பாமரர்கள் இல்லை..இன்று படித்தவர்களை விட அவர்கள்தான் உங்களை கண்காணித்துக் கொண்டு வருகின்றார்கள்..மடியில் கனமில்லை என்றால் பயம் எதற்கு?

அப்படி தமிழனை கொன்று தீர்த்தே ஆக வேண்டுமா? 

கூடன்குள அணுமின் நிலையத்தை உடனடியாக உலகமே திரும்பி பார்க்கும் மருத்துவமனையாக மாற்றுங்கள், உங்கள் சோனியா வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்...கூடங்குளத்தில் உலகத்தரத்துடன் கூடிய மருத்துவமனையை உருவாக்குங்கள்...நாங்கள் உழைக்கின்றோம் அதற்காக...

கலைஞர்?? உண்மையை உணர்ந்த தமிழகம்!

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி இருப்பதனால் மானமுள்ள பெண்மணி மம்தா பானர்ஜி உடனே மத்திய அரசிற்கு கெடு விதித்தது. அப்படியாவது மத்திய அரசு தனது முடிவில் இருந்து மாறுமா என்று எதிர்பார்க்கின்றது.  இருந்தாலும் அய்யோ விலை ஏறி விட்டதே என்று முதலில் கண்டனம் தெரிவித்து கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்கி விடுவேன் என்று சொல்லி இருக்கும் அந்த மனதைரியம் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய ஒன்றே.  நிச்சயம் இன்று இரவிற்குள் மம்தாவிடம் பிச்சை கேட்டு, காலில் விழுந்து அந்த அம்மாவை சரிக்கட்டி விடுவார்கள். காலில் விழுந்து பிச்சை கேட்டு, சமரசம் செய்வதற்கு என்றே காங்கிரசில் ஐந்து பேர் கொண்ட கும்பல் (குழு) இருக்கின்றது. எந்த கூட்டணி கட்சித் தலைவர் பிரச்சினை கிளப்பினாலும் உடனே இவர்கள் சென்று சமாதானம் பேசுவார்கள்.

இருந்தாலும் அதைக் கூட சொல்லத் தெரியாது என்று சொல்லி இருக்கின்றார் கலைஞர். அவருடைய அவசரப்பட்ட வார்த்தைகளால் அரசியல் வாழ்க்கையில் அவர் இத்தனை காலம் சேர்த்து வைத்திருந்த அத்தனை பெயர், புகழ் அனைத்தையும் ஒவ்வொன்றாய் பறி கொடுத்து வருகின்றார் என்பதே சத்திய உண்மை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 68 இடம் கேட்டது. அதை கொடுக்க முடியாது...இப்படி எல்லாம் மிரட்டினால் நான் கூட்டணியில் இருந்து வாபஸ் பெறுவேன் என்று மிரட்டியவர்தான் இந்த தலைவர் என்பதை நாங்கள் மறக்க வில்லை. அதற்காக அன்று டெல்லியில் ராஜினாமா கடிதத்தை கொடுக்க திமுக எம்பிக்கள் தயாராக இருந்ததையும் நாங்கள் மறக்க வில்லை. அதற்காக அன்று பல திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு கூடி நின்று சோனியாவின் உருவ பொம்மையை எரித்தார்கள், பதிலுக்கு அவர்கள் கலைஞரின் உருவபொம்மையை எரித்தார்கள், திடீரென்று எங்கிருந்தோ வந்த இரண்டு காங்கிரஸ் இடைத்தரகர்கள் ஏதேதோ பேச்சு நடத்தி கடைசியில் 63 சீட்டுக்களை பெற்று சென்றார்கள். அப்போதெல்லாம் மிரட்ட தெரியாமலா இருந்தார் இந்த கலைஞர்??

ஆனால் தற்போது டீசல் விலை ஏறியதை காரணம் காட்டி வாபஸ் பெறுவேன் என்று சொல்ல முடியாது..எனக்கு மிரட்ட தெரியாது என்று சொல்லி இருப்பதுதான் வேடிக்கையின் உச்சகட்டம். தன்னுடைய பதவி, வருமானம் என்று வரும்போது மிரட்ட தெரியும் கலைஞருக்கு தமிழக நலனிற்காக மிராட்டத் தெரியாது என்று உண்மையை சொல்லி இருக்கும் அவரது மனதைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இப்படி நாட்டு நலனிற்கு எந்த உதவியும் செய்யாத அவர் அந்த தலைவர் பதவியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே. இப்படியே மௌனமாய் இருந்து இருந்து ஏற்கனவே 40000 தமிழ் உறவுகளை இழந்து விட்டோம், அதன் பின்னர் கட்சத் தீவினை காவுகொடுத்து விட்டோம். உங்களது கூட்டணியின் பலத்தை வைத்து எத்தனையோ ஆக்கப் பூர்வமான திட்டங்களை தமிழகத்திற்குள் வரவழைத்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு திட்டமும் இன்று வரை நமக்கு நடக்கவில்லை.

தனது கட்சி எம்பிக்களுக்கு தேவையான இலாகாக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார். ஈழத் தமிழர்களுக்காய் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் மீண்டும், மீண்டும் உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லி "கொல்"கின்றார். உண்ணாவிரத்தத்தை விட பயங்கரமான ஆயுதத்தை கையில் வைத்து கொண்டு அதை கடைசி வரை பயன்படுத்தாமல் வசனம் பேசியே சாகடித்தார் என்பதே உண்மை.

இதில் இருந்தே இனி இவர் சொல்லும் எதையும் நம்ப கூடாது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொள்வார்கள். அரசியலைத் தவிர கலைஞர் ஒரு அப்பாவி என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்..இதற்க்கு மேலும் உணராத ஜென்மங்களை என்னவென்று சொல்வது????

சாமீ சத்தியமா எனக்கு மிரட்டத் தெரியாது!!!?

வெட்டிப் போராட்டம் - வெற்றி வெற்றி!!!!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவது, யாவரும் அறிந்த ஒன்றே. அதில் தற்போது அரங்கேறி இருப்பது மூன்று விஷயங்கள். 
1. டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூவாய் உயர்த்தி இருப்பது. 
2. இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை   
    அங்கீகாரம் செய்திருப்பது. 
3. சமையல் எரிவாயு உருளைகளை கட்டுப்படுத்துவது. இந்த மூன்று 
    விஷயங்களுமே அடித்தட்டு மக்களை பெரிதும் பாதிக்கும் செயலாகும்.


காரணம் :

எதற்கு இந்த அதிரடி நடவடிக்கைகள்? முதல் காரணம், காங்கிரசின் ஊழல்கள், மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக. என்ன ஊழல்கள் ? 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தத்ரா ஊழல்,
நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், கருப்பு பணம் பட்டியல் வெளியிட மறுத்தல்..என்று அடுக்கி கொண்டே போகலாம்.

குறிப்பாக கடைசியாக வந்திருக்கும் நிலக்கரி ஊழல், மிகப் பெரிய தொகையினை கொண்டிருக்கின்றது. நாங்கள் வேறு நெருக்கடிகளை மக்களுக்கு கொடுப்போம். மக்கள் அதனால் அந்த ஊழல்களை மறந்து அவர்கள் பிரச்சினைக்கு போய் விடுவார்கள் என்று பகீரங்கமாகவே குரல் கொடுத்தவர் சுஷில் குமார் ஷிண்டே. அதுதான் தற்போது நடக்கின்றது.   இப்போது மக்களால் நிலக்கரி ஊழலை பற்றி யோசிக்க முடியுமா? இப்போது எதிர்கட்சியினருக்கு பெரிய ஆயுதம் கிடைத்தது போல் அந்த நிலக்கரி ஊழலை மறந்தே போனார்கள். 

வெட்டிப் போராட்டம்
அதற்க்கு ஏற்றார் போல நேற்று ஒரு மாபெரும் வெட்டிப் போராட்டம் நடந்தேறியிருக்கின்றது. இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? இந்திய அரசிற்கு 12 ,000 கோடி ரூவாய் வருவாய் இழப்பு என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது. நிச்சயம் இந்த வருவாய் இழப்பை அவர்கள் ஏற்கனவே எதிர்பார்த்து அதையும் சேர்த்து அந்நிய முதலீட்டாளர்களிடம் ஏற்கனவே வசூலித்திருப்பார்கள். அதனால் இது ஒன்று இந்திய அரசிற்கு வருவாய் இழப்பாய் நாம் சொல்ல முடியாது. அந்த இழப்பும் நமக்குத்தானே ஒழிய அவர்களுக்கு கிடையாது. சாதாரண டீ கடைகள், மற்றும் ஓட்டல்களில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நாள் ஊதியம் போனதுதான் மிச்சம். மற்றபடி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாய் கிடைக்க வேண்டிய டிஜிட்டல் பேனர் அமோகமாய் கிடைத்திருக்கின்றது. தமிழ்நாட்டினில் கடையடைப்பு போராட்டத்திற்கு வெள்ளையன் மற்றும் விக்கிரமராசா தலைமையில் போராட்டம் என்று ஆங்காங்கே பெயர் பலகைகள் மட்டும் பிரகாசமாய் இருந்தது. போராட்டத்தின் முடிவு என்ன? ஏழையின் ஒருநாள் ஊதியம் அவுட். ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டம், இப்போது அதைவிட பெரும் போராட்டம்.
 
இவ்வளவு பிரச்சினைக்கு பிறகும் கூட மத்திய நிதி அமைச்சர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது, பாரத பந்த்தால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்று. உண்மைதானே. அவர் ஐஸ்கிரீமையே உணவாக சாப்பிடுபவர். நாம் ஒருவேளை சோத்துக்கு சிங்கி அடிப்பவர்கள்.

சரி, இந்த எதிர்கட்சிகளாவது ஒன்று கூடி போராட்டம் செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. ஆளுக்கு ஒரு திசையில் 40 , 30 என்று சேர்ந்து கூப்பாடு போட்டு விட்டு ரயில்களையும், பேருந்துகளையும் நிப்பாட்டி விட்டு சென்று விடுகின்றார்கள். உங்கள் எதிர்ப்பால் என்ன நடந்து விட்டது? அந்த திட்டம் நிறைவேறத் தானே போகின்றது.


முடிவுதான் என்ன?
இதற்க்கு முடிவுதான் என்ன? மம்தா பேனர்ஜி எடுத்தது போல் அதிரடியாய் அனைத்து கூட்டணி கட்சிகளும் விலக வேண்டும். இல்லையேல் அந்த கூட்டணி கட்சிகளை நோக்கி போராட்டம் செய்ய வேண்டும். எனக்கு மிரட்ட தெரியாது என்று சொல்லிவிட்டால் நீ பெரிய தலைவனாகி விட முடியுமா? ஒப்புக்கு அந்த கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்துவதுதான் வேடிக்கையின் உச்சகட்டம். அட முட்டாள் தொண்டர்களே..உங்கள் உலையில் ஒரு லோடு மண் அள்ளிப் போட்டுவிட்டு அவர்கள் கைகோர்த்து கொண்டு வேடிக்கை பார்க்கின்றார்களே..இதுகூடத் தெரியவில்லையே!!!

உனக்கு எங்கள் மாநிலத்தில் இடம், கட்சி வேண்டுமெனில் நீ அந்த கூட்டணியில் இருந்து விலகு என்று ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் களத்தில் இறங்க வேண்டும்., அதை விட அந்நிய முதலீட்டாளர்கள் கடைகளில் ஒரு பொருள் வாங்க கூடாது. அந்த நிறுவனத்திற்கு ஒருவரும் வேலைக்கு செல்ல கூடாது,. அவர்களின் பொருட்கள் யாவும் விலைபோகாமலே வீணாய் போக வேண்டும், அதற்க்கு நம் மக்கள் தயாரா? கடை திறந்ததும் இரண்டு பொருட்கள் இலவசம் என்று சொன்னதும் சொந்த கடைகளை போட்டு விட்டுக் கூட அங்கே வரிசையில் காத்திருக்கும் நம் மக்களை என்னவென்று சொல்வது. 

ஹேய், நீ எங்க அரிசி வாங்குற? நான் நம்ம ஊரு முனியாண்டி கடையிலே அரிசி வாங்கினேன்? நீ? அய்யோ அந்த  நாத்தம் பிடிச்ச கடையிலா? நான் பிராடு & கோ வில அரிசி வாங்குனேன். புல் ஏசி, 5 கிலோ அரிசி வாங்குனா ஒரு லிட்டர் கோக் குடுக்கிறான், நல்லா பாலிஷ் பண்ண அரிசி. ஒருவாட்டி வாங்கி பாரு..அப்போதான் அந்த முனியாண்டி பயலுக்கு தெரியும். இப்படித் தானே நாம போய்க் கிட்டு இருக்கோம். அதனால் வெட்டிப் போராட்டம், வெறும் வெற்றுப் போராட்டம்தான்.

மானங்கெட்ட கூட்டணி தலைவர்கள் இருக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. ஒழியாது. முடிவு மக்கள் கைகளில்.....

கலைஞரிடம் 12 கேள்விகள்? 0 பதில்கள்!

காங்கிரசின் கொள்கையும், திமுக கொள்கையும் ஒன்றா? எதில் மாறுபட்டு இருக்கின்றது? 12 கேள்விகளை கேட்டுப் பார்த்தோம்...பதில் உங்களை போன்றே நாங்களும் ஆவலில்???



  1. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு வாக்கு சேகரிப்பீர்களா, இல்லை திமுக விற்கு வாக்கு கேட்பீர்களா?
  2. 1 .5 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றது சரி என்று சொல்கின்றது காங்கிரஸ், திமுக வின் கொள்கையும் அதுதானா?
  3. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வந்தே தீருவோம் என்கின்றது...திமுக வின் நிலையம் அதுதானா?
  4. திமுக வின் அடுத்த தலைவர் யார்? பேராசிரியர் அன்பழகனா? ஸ்டாலினா? அல்லது அழகிரியா? அல்லது கட்சிக்காக உங்கள் குடும்பத்துக்காக சிறைக்கெல்லாம் சென்று வந்த கனிமொழியா?
  5. டீசல் விலை ஏற்றம் மற்றும் சிலிண்டர் மானியம் கட்டுப்பாட்டினில் திமுக முழு ஆதரவா?
  6. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தமிழக மக்களுக்கு ஆதரவா? எதிர்ப்பா?
  7. காவிரி நதிநீர்ப் பிரச்சினை விசயமாக தமிழ் நாட்டிற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? தமிழ் நாட்டிற்கு பேசுவீர்களா? அல்லது கரு நாடகா விற்கு ஆதரவா?
  8. தமிழ் நாட்டு சட்டம் ஒழுங்கை ப்பற்றி அதிகமாக கவலைப்படும் நீங்கள், உங்கள் ஆட்சியில் நடந்த தொடர் கொள்ளைகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எத்தனை பேரை கைது செய்து உள்ளே அடைத்தீர்கள்??
  9. உங்கள் ஆட்சியில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை உங்கள் அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க கொல்லப்பட்டு இறந்தாரே...அதற்க்கு நீங்கள் கொடுத்த தண்டனை என்ன? ஆகத்து 30 , இல் உங்கள் கட்சி மந்திரி மாலைராஜா தலித் இனத்தை சார்ந்த காளியப்பனை தாக்கியதற்கு நீங்கள் அளித்த தண்டனை என்ன?
  10. கிரானைட் ஊழலில் தற்போது பதுங்கி இருக்கும் உங்கள் அழகிரி மகனின் நடவடிக்கை குறித்து நீங்கள் சொல்ல போவது என்ன? உங்கள் ஆட்சியில்தானே அந்த ஊழல் நடந்து இருக்கின்றது?? இல்லை என்று மறுக்க முடியுமா?
  11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிப்ரவரி 19  சட்டத்திற்கும், நீதிக்கும் பெரும் வன்முறை வெடித்ததே..அதை உங்களால் தடுக்க முடிந்ததா?
  12. ஒவ்வொரு நாளும் என் இன மீனவச் சமுதாயம் இலங்கையால் கொல்லப்பட்டார்களே...ஏன் என்று கேட்க உங்களுக்கு துணிவிருந்ததா?
முக்கிய குறிப்பு..மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம்...நான் கண்டனம் தெரிவித்து விட்டேன், கவிதை எழுதி விட்டேன்..எனது நாளேட்டில் கருத்து தெரிவித்து விட்டேன்..பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்று சொன்னதையே சொல்லாமல் வேறு ஆக்கப்பூர்வமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்...கிடைக்குமா?

கருணாநிதியின் வாய்ச்சவடால்

ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் திமுக அஞ்சாது. எங்கள் மீது எத்தனை பொய் புகார்கள் கொடுத்தாலும் திமுக அதை சட்டப்படி சந்திக்கும் என்றெல்லாம் பிலீம் காட்டிய கருணாநிதியின், திமுக எம்.பி.க்கள், கட்சிகாரர்கள் இன்று ஜனாதிபதியிடம் சென்று அழுது இருக்கின்றார்களாம்.

அதாவது ஜெயா அரசினால் எங்கள் கட்சிக்கே ஆபத்து வந்து விடும், ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று புலம்பி விட்டு வந்திருக்கின்றார்கள். எதையும் சட்டப்படி சந்திக்க தயார் என்று சொன்னாரே ஒருவர். அது, என்னாயிற்று?

திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவதால் பயந்து நடுங்கும் தலைமை எங்கே நாளை நமது வீட்டிற்கே வந்து ஸ்டாலின், அழகிரியையும் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சமே இந்த ஜனாதிபதி சந்திப்பிற்கு காரணம்.

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தற்போது சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஈழத் தமிழர்களும், நம் தமிழக மீனவர்களும் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டு கொல்லப்பட்ட போது எங்கே சென்றார்கள் இந்த ஈனத் தமிழர்கள் (திமுக எம்.பி.க்கள்), அன்றும் இதை போன்றே ஜனாதிபதியிடம் காத்திருந்து மனு கொடுத்திருந்தால் அவர்களுக்கு நாம் கோயில் கட்டி கும்பிட்டிருக்கலாம். ஆனால் தற்போது தனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்போதும், தொடர் கைது நடவடிக்கைகளிலும் நொந்து போய் நிர்கதியாய் நிற்கின்றது திமுக.

ஜெயா அரசு தனது கட்சிக்காரர்களை கைது செய்யும் போது கூட கவலைப்படாத கருணாநிதி தற்போது தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி சிக்குவாரோ என்ற அச்சத்திலும், அழகிரி மகன் ஒலிம்பஸ் கிரானைட் வழக்கிலும் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சமே இன்று ஜனாதிபதி மாளிகை வரை நடக்க வைத்திருக்கின்றது.
ஜெயா அரசு தனது மகனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு  ஆத்திரப்படும் கருணாநிதி அன்று கூடவே இருந்து கழுத்தறுத்த காங்கிரஸ், தனது துணைவியாரின் மகளை கைது செய்த போது மௌனம் சாதித்ததன் பின்னணி என்ன?

அப்போது கூட என் மகளை கைது செய்ததற்கு உங்களை பலி வாங்காமல் விட மாட்டேன் என்று கொடுத்துகொண்டிருக்கும் ஆதரவை திரும்ப பெற்று இருக்கலாம். ஆனால் முடியாது? ஏனெனில் ஆதரவை திரும்ப பெற்றவுடனேயே அழகிரியின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களே என்ற அச்சமே...

அதுமட்டுமில்லாமல் மத்தியில் இப்போது இவர்கள் ஆதரவு பெற்ற கட்சிதான் ஆட்சி புரிகின்றது. ஆனால் பிரதமரை, சோனியாவை பார்க்காமல், அங்கே சென்று புகார் அளிக்காமல் இந்திய குடியரசுத் தலைவரை சந்திக்க காரணம் என்ன? 356 ஐ பயன்படுத்தலாம் என்ற எண்ணமா?

ஒருவேளை கனிமொழியை விட அதிகப்படியான ஊழலை அழகிரி மகன் செய்து விட்டாரோ என்று நினைக்கத் தூண்டுகின்றது... ஊழலில் அதிகம் சாதித்தது துணைவியாரின் மகளா? அல்லது சொந்த மனைவியின் பேரனா? என்று விரைவில் பட்டிமன்றம் நடத்தி கூட பார்த்து விடலாம்.

ஒலிம்பஸ் கிரானைட்சுக்கு உரிமம் வழங்கிய போது 10 சதவிகிதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டும் அது 100 சதவிகிதம் வரை சுரண்ட பட்டிருப்பதாக தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருக்கின்றார். இதையே ஒரு சாதாரண குடிமகன் செய்தால் இதுவரை விட்டு வைத்திருப்பார்களா? அவன் மீது குண்டர், தடா, கடா, பீடா  என்று வழக்குகள் போட்டு குவித்திருப்பார்களே.
உண்மைகளை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்து அழகிரி சபதம் போட்டு விட்டார்...தன மீதோ அல்லது தன மகன் மீதோ குற்றம் நிருபிக்கா விட்டால் ராஜினாமா செய்யத் தயாரா? என்று அனல் பறக்கும் வசனங்கள், பேட்டிகள் கொடுத்தார்..இதற்க்கு என்ன சொல்ல போகின்றார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டே இந்த அவசர ஜனாதிபதி சந்திப்பாக இருக்கும் என்று பொது மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும் போதாது, எந்த பாவமும் அறியாத வினோத், கோபி மற்றும் பாண்டியனை உயிரோடு எரித்து கொன்ற வழக்கினையும், நெல்லை சப் -இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டி கொன்ற வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகின்றோம்.
கருணாநிதியின் கடந்த கால ஆட்சியில் இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் என்று அறிவித்தார்கள். ஆனால் அது ஏழை பொது மக்களுக்கு அல்ல, கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு என்று இப்போதுதான் புரிகின்றது.  அவர் தவறே செய்ய வில்லை என்றால் சட்ட ரீதியாக சந்தித்து இருக்கலாமே...ஏன் தலைமறைவாக செல்ல வேண்டும் என்றும் மக்கள் கேள்விகள் கேட்கின்றார்கள்.

மின்வெட்டு என்பது சமீபத்தில் சற்று குறைந்திருக்கின்றது. இப்போது அம்மா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளை ஏன் கருணாநிதி எடுக்க வில்லை. தமிழ்நாடே இருளில் மூழ்கிய காலங்கள் பல இருக்கின்றது. தமிழ் நாட்டை இருளில் மூழ்கச் செய்து விட்டு இவர்கள் நில அபகரிப்பு மற்றும் கொள்ளைகளிலும் ஈடுபட்டு இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இப்போதைய நிலவரம்.

உடனே சில பதிவர்கள் இந்த அம்மா மட்டும் ஒழுங்கா? சொத்து குவிப்பு வழக்கில் இன்னமும் வாய்தா வாங்க நினைக்கின்றதே என்றும் கேட்டிருக்கின்றார்கள். நியாயம்தான்...ஆனால் பொது மக்கள் இப்போது விழித்து கொண்டு விட்டார்கள். அவருக்கும் விரைவில் இதே நிலை ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. பார்க்கலாம். ஆனால் தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் காணாமல் போய் விடுமோ என்ற பயம் இருக்கின்றது. அந்த அளவிற்கு நிலப்பறிப்பு சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றதே...இதற்காகவாவது இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை.

சுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே‏

39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-
  • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்! 
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! 
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. 
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.

சர்வதேச தினங்கள்‏

சர்வதேச தினங்கள்

பெப்ரவரி 21  – சர்வதேச தாய்மொழி தினம்
மார்ச் 8     – சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 21    - இனப்பாரபட்ச ஒழிப்பு தினம்
மார்ச் 22    - உலக நீர் தினம்
மார்ச் 23    – உலக வளிமண்டலவியல் தினம்
ஏப்ரல் 7    – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22 - உலக புவிதினம்
ஏப்ரல் 23   – உலக புத்தக தினம்
மே 3      – உலக பத்திரிகை சுதந்திர தினம்
மே 15     - உலக குடும்ப தினம்
மே 17     – உலக தொலைத்தொடர்பு தினம்
மே 22     - உயிரின பல்வகைமை தினம்
மே 31     – உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்
ஜுன் 4     – சர்வதேச சிறுவர் தினம்
ஜுன் 5    – உலக சுற்றாடல் தினம்
ஜுன் 17   – காடுகள் தினம்
ஜுன் 20    – உலக அகதிகள் தினம்
ஜுன் 26    – போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜுலை 11   – உலக சனத்தொகை(குடித்தொகை) தினம்
ஆகஸ்ட் 9   – ஆதிவாசிகள் தினம்
ஆகஸ்ட் 12   – சாவதேச இளைஞர் தினம்
செப்டம்பர் 16 - சர்வதேச ஓசோன் தினம்
அக்டோபர் 1  - சர்வதேச முதியோர் தினம்
அக்டோபர் 5  – உலக ஆசிரியர்கள் தினம்
அக்டோபர் 9  – உலக தபால் தினம்
அக்டோபர் 10  – உலக மனநல திம்
அக்டோபர் 16  -  உலக உணவு தினம்
அக்டோபர் 17  – வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24  – ஐக்கிய நாடுகள் தினம்
அக்டோபர் 24  – உலக அபிவிருத்தி தகவல் தினம்
நவம்பர் 16  – சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
நவம்பர் 26  – ஆபிரிக்க கைத்தொழில் மயமாக்கல் தினம்
நவம்பர் 21  – உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 25  – பெண் வண்முறை எதிர்ப்பு தினம்
டிசம்பர் 1  – சர்வதேச எயிட்ஸ் தினம்
டிசம்பர் 2  – அடிமைத்தன ஒழிப்பு தினம்
டிசம்பர் 3  – வலது குறைந்தோர் தினம்
டிசம்பர் 10  – மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 18  – சர்வதேச இடப்பெயர்வாளர் தினம்

பிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்‏

Good News to get Birth / Death Certificates in ONLINE (PDF Copy) and CORRECTIONS also Possible without spending your time and money. NRI can benefit more by this service.இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுல
கத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - 
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp


உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth
https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - 
https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் -http://tirunelvelicorp.tn.gov.in/download.html

SHARE SHARE SHARE - Save Money and Don't waste your Money and Time for this

மின்தடையை போக்க ஜெயலலிதா அவர்கள் இந்த நடிவடிக்கை எடுப்பார்களா..?‏


 how save power some tips tneb
- போர்லேண்டர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
- 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.

- தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.

- அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.

- முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.

- அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!

- இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.

- பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம். நன்றி தட்ஸ் தமிழ்
இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!

விரைவான விரிவான நடைமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் நல்லதொரு மின்விநியோகம் நடைப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

உச்சநீதிமன்றமாவது, பிரதமராவது? போங்கடா போங்க


தமிழனுக்கு ஒத்த சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம்...இந்திய  ஒருமைப்பாடு கிழியாய் கிழிக்கப் படுகின்றது!!! என்ன செய்யப் போகின்றது காங்கிரஸ்? இதைவிட காங்கிரசிற்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் அவமானம் எதுவுமே கிடையாது.

காவிரி நதிநீர்மன்றத்தை கடுமையாக விமர்சித்து கேலி செய்தவர் ஜெயலலிதா..அந்த ஜெயலலிதாவே இன்று காவிரி நதிநீர்மன்ற ஆணையத்தை நாடி இருக்கின்றார் என்று குறை சொல்லிக்கொண்டிருந்தார்  கருணாநிதி... உண்மையில் இன்று என்ன நடந்திருக்கின்றது? காவிரி நதி நீர் ஆணையம் பல் இல்லாத ஆணையமாகத் தானே இருந்து வருகின்றது. ஒருவேளை அது நியாயமானதாக அல்லது ஆரோக்கியமானதாக இருந்திருந்தால் என்றோ நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வந்திருக்க வேண்டுமே..அப்படி ஒரு ஆணையத்திற்கு தலைவராக பிரதமர் இருப்பதற்கு வெட்கப் படவேண்டும்.

நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பினில் 9000 கன அடி நீரை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. ஆனால் இன்றுவரை அவர்கள் மடை திறப்பதற்கான அறிகுறியே இல்லை. அதற்க்கு பதிலாக அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கின்றார்கள். உச்சநீதிமன்றத்தை கேவலப் படுத்த இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.
சரி தமிழ்நாட்டு சார்பினில் மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் தமிழ் பற்றுள்ள தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வழக்கம் போல ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிவிட்டு பேசாமல் மூடிக்கொண்டுதான் செல்லப் போகின்றார்கள். உலக தரத்தை பற்றி எல்லாம் வாய் கிழியப் பேசும் தமிழகத்தை சார்ந்த நிதியமைச்சரே...உங்களுக்கு திராணி இருந்தால் தமிழக மக்களை , விவசாயிகளை காப்பாற்ற முடியுமா? வெளிநாட்டு பணத்தை இந்தியா கொண்டுவாருங்கள் என்று அண்ணா ஹசாரே குழுவினர் கேட்டபோதும், லோக்பால் மசோதாவை அமுல்படுத்த கேட்டபோது நீங்களும், கபில்சிபலும் எப்படி எத்தனை கூட்டங்கள் கூட்டினீர்கள்...இன்று உங்களால் கர்நாடகாவிற்கு சென்று உங்கள் மாநில மக்களின் நியாயமான கோரிக்கையை முன் வைத்து பேச முடியுமா?

இன்னொருவர் எங்கள் மாநிலத்திலேயே இருக்கின்றார்? அவர்
கருணா என்பது மூன்று எழுத்து..
கருநா என்பதும் மூன்று எழுத்து..
காவிரி என்பதும் மூன்று எழுத்து..
வராது என்பதும் மூன்று எழுத்து..
என்று ஒரு வீணாய் போன கவிதையை வாசித்து விட்டு கோபாலபுரம் சென்று விடுவார்.

மற்றொரு பக்கம் எல்லாக் கட்சியினரும்  மற்ற அனைத்து பிரச்சினைகளையும் மறந்து புதிய போராட்டத்திற்கு போஸ்டர் அடிக்க கிளம்பி விடுவார்கள்.

கடைசியில் நாம் என்ன செய்யமுடியும்? தமிழன் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும், தமிழ்நாட்டினில் இருந்து கருநாடகாவிற்கு ஒரு யூனிட் மின்சாரம் கூட கொடுக்க கூடாது...ஒரு துண்டு பழங்கள், காய்கறிகள் அவர்களுக்கு கொடுக்கப் படக் கூடாது..நாம் அதைக் கொடுக்க மறுக்கின்ற போது...மத்திய அரசு நம்மைத் தடுக்க கூடாது...அந்த உரிமை அவர்களுக்கு என்றோ காணாமல் போய் விட்டது...

தமிழ் இனத்தை உசுப்பி விட்டதற்காக தேசிய இறையாண்மையை கொச்சைப் படுத்தியதாக சீமான் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தார்கள்..நேற்று கருநாடக அமைச்சர் ஒருவர் இந்த பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப் படலாம் என்று பேசி இருக்கின்றார். மத்திய அரசிற்கு திராணி இருந்தால் அவர் மீது தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று கைது செய்யுமா? 

ஒரு பிரதமரையே ..இந்தியாவின் பலம் வாய்ந்த உச்சநீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தியவர்கள் அவர்கள்..உனக்கு மின்சாரம் வேண்டுமெனில் எங்களுக்கு தண்ணீர் கொடு என்பதே நமது போராட்டமாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தையே கட்டிக் காப்பாற்ற முடியாத ஒரு கையாலாகாத மத்திய அரசு...சட்டத்தை, நீதிமன்றத்தை மதித்த நமது தமிழர்கள் மீது மத்திய அரசு எந்த கேள்வியும் கேட்க தகுதி இல்லாதவர்கள். பிரச்சினையை துவக்கியவர்களை முதலில் கட்டுப் படுத்தி விட்டு பின்னர் தமிழ்நாட்டிடம் அவர்கள் பேச வரலாம்...இதுதான் உண்மையான தமிழனின் எதிர்பார்ப்பு...பதிவர்களே...உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்!!!

Wednesday, September 26, 2012

கிரானைட் புதையல்..! இதுவரை அறிந்திடாத தகவல்கள்

தற்போது கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பான செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. கிரானைட் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

கிரானைட் உருவாகும் விதம்

புவியின் மேல் ஓட்டில், இயற்கையாக உருவாகும் மிக உறுதியான கற்பாறை தான் கிரானைட். புவியின் அடியில் உள்ள ‘மாக்மா’ என்ற கற்குழம்பு குளிர்வடைந்து ப்ளுட்டோனிக் பாறை உருவாகிறது. இதுவே நாளடைவில் கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ., ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது. இப்பாறைகள், மிக கடினமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கிடைக்கும் இடங்களை பொறுத்து கிரானைட்டின் தன்மை அமைகிறது. இதை வைத்து, தரம் பிரிக்கப்பட்டு, விழி நிர்ணயிக்கப்படுகிறது. கிரானைட்டில் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், மைக்கா ஆகிய தாதுக்கள் உள்ளன.
 
கிரானைட் கற்களின் பண்புகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி திரவ நிலையில் குழம்புகளாக மாற்றின.

நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத்தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின.

இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் ‘கிரானைட்’. படிகங்களாலும், களிமண் பாறைகளாலும் இந்த கிரானைட்,தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களை பொறுத்து, வலிமையையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.

உயர்தர ‘பாலிஷ்’ செய்த பின்னும், கிரானைடின் சில இடங்கள் மங்கலாக இருக்கும். பார்ப்பதற்கு ‘வாட்டர் மார்க்’ போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.

கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல், கிரானைடில் உள்ள சிறிய தாதுப் பொருட்கள், ‘பாலிஷ்’ செய்யும்போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும். அந்த இடத்தில் சிறு குழி விழும். இதையும் சரி செய்யும் தொழில்நுட்பம் தற்போது உள்ளன.

பாறை குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன. இந்த துவாரங்கள், கிரானைடில் இருக்கும். ஆனால் நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.

கிரானைட் தயாராவது எப்படி

கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடி வைத்து தகர்த்து எறியப்படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின அளவு திட்டமிடப்படுகிறது. அப்போது தான், வெட்டும்போது கற்கள் வீணாவது தவிர்க்கப்படும்.

வெட்டி எடுத்த கிரானைட் கற்கள், தேவையான அளவிற்கு மாற்றப்படுகின்றன. ‘வாட்டர் ஜெட் கட்டிங்’ என்ற தொழில்நுட்பம் வெட்டுவதற்கு பயன்படுகின்றது.

சரியான அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டின் ஓரங்கள், பக்கவாட்டுப்பகுதிகள் சரி செய்யப்பட்டு செப்பனிடப்படும். இது கல் குவாரியிலேயே நடக்கும். பின் மொத்தமாக இருக்கும் கிரானைட்டுகள் தேவையான எண்ணிக்கையில், சரியான அளவில் ‘கேலிப்ரேஷன்’ முறையில் சிறு சிறு துண்டுகளாக்கப்படும்.

கற்கள் பாலிஷ் செய்யப்படும். பின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரத்தின் உதவியுடன், கற்களின் பரிமாணங்கள் சரிசெய்யப்படும். இதை ‘ஆஷ்லர்’ முறை என்பர். இதன் பின் கற்கள் விற்பனைக்கு தயாராகும்.

கிரானைட்டில் இருப்பது என்ன

கிரானைட் பாறைகளில், களிமண் பாறைத் தனிமங்கள், படிகக்கல், கருப்பு அப்ரகம் (பயோடைட்) ஆகியவை இதன் முதன்மை உட்பொருட்கள்.

களிமண் பாறை தனிமங்கள், 65 முதல் 90 சதவீதமும், படிகக்கல் 10 முதல் 15 சதவீதமும் இருக்கும். இது தவிர, வேறு சில வேதிப்போருட்களும் இதில் உள்ளன.இவற்றை 2000 க்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.

இதில் உள்ள தனிமங்கள்:

சிலிகான் டை ஆக்சைடு – 72.04 %

அலுமினியம் ஆக்சைடு – 14.42 %

பொட்டாசியம் ஆக்சைடு – 4.12 %

சோடியம் ஆக்சைடு – 3.69 %

கால்சியம் ஆக்சைடு – 1.82 %

இரும்பு (II) ஆக்சைடு – 1.68 %

இரும்பு (III) ஆக்சைடு – 1.22 %

மக்னீசியம் ஆக்சைடு – 0.71 %

டைட்டானியம் டை ஆக்சைடு – 0.30 %

பாஸ்பரஸ் பென்டாக்சைடு – 0.12 %

மாங்கனீஸ் (II) ஆக்சைடு – 0.05 %

தண்ணீர் – 0.03 %
காலத்தால் அழியாத பல நினைவுச்சின்னங்கள், கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன. எகிப்து பிரமிடுகள், கிரானைட் கற்களால் ஆனவை. பல்லவ மன்னர்கள், மகாபலிபுரத்தில் உருவாக்கிய சிற்பங்கள் ஒரு வகை கிரானைட் கற்கள் தான். 11 ம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசர்கள், கிரானைட்டின் பயனை அறிந்திருந்தனர். ராஜ ராஜ சோழன், கிரானைட் கற்களை பயன்படுத்தி கோவில்களில், கலை நயம மிக்க சிற்பங்களை அமைத்தார்.
பிரிட்டனில் 1832 ம் ஆண்டு, முதன்முதலில் கிரானைட் கற்கள், பாலிஷ் செய்து பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில்தான், கிரானைட் கற்களின் உபயோகம், கவுரவத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

நவீன காலத்தில், நினைவு சின்னங்கள் அமைக்கவும், சிற்பங்கள் வடிக்கவும் கிரனைட் கற்கள் பயன்படுகின்றன. கட்டடங்களில் அதிக அளவு கிரானைட் உபயோகம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள ‘அபெர்தீன்’ நகரில் கிரானைட் கற்களை பயன்படுத்தி அதிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த நகரம் ‘கிரானைட் சிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரானைட் கற்களை பயன்படுத்தி ரயில் பாதையே அமைக்கப்பட்டுள்ளது.

“மதுச் சிதைவு” விளைவு விதி


பிரிட்டிஷ் அரசு சி.வி.இராமனுக்கு 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கி ‌கௌரவித்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விருதுபெற்ற விஞ்ஞானி இராமனை சிறப்பிக்கும் விதத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்தின் போது மது தாராளமாக வழங்கப்பட்டது.


விஞ்ஞானி இராமனிடம் மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால் அவர் மது எதையும் தொட்டுக்கூடப்பார்க்க வில்லை. சில விஞ்ஞானிகள் இராமனிடம் வந்து தலைமை விருந்தினரான தாங்கள் மதுவை அருந்தாவிட்டால் எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.


அதற்கு இராமன் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று பதில் அளித்தார்.


இதுவரை பழக்கமில்லாமல் இருக்கலாம். இன்றே அப்பழக்க‌த்தை ஆரம்பியுங்களேன். மது குடித்தால் உடலின் என்ன விளைவு ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று விஞ்ஞானிகள் இராமனை வற்புறுத்தினார்கள்.


அதற்கு இராமன் ஒளிச் சிதைவு விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமே தவிர, மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாமே என்றார்.

இவரின் சிறப்புகள் :
இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டதுஇத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

மின்தடையை போக்க ஜெயலலிதா அவர்கள் இந்த நடிவடிக்கை எடுப்பார்களா..?

 how save power some tips tneb
- போர்லேண்டர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
- 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.

- தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.

- அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.

- முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.

- அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!

- இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.

- பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம். நன்றி தட்ஸ் தமிழ்
இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!

விரைவான விரிவான நடைமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் நல்லதொரு மின்விநியோகம் நடைப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

Saturday, September 22, 2012

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!


டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
ஆனால் மறுபக்கம் இலங்கையோ, இந்தியாவை பகை நாடாகவே பார்க்கிறது. இந்தியாவின் பரம விரோதியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கிக் கொடுத்து வருகிறது. இலங்கையை கிட்டத்தட்ட சீனாவுக்கு திறந்திவிட்டிருக்கும் இலங்கை, புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டுள்ளது.
இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது. இப்போது பாகிஸ்தான்தான் உண்மையான நட்பு நாடு என்று வேறு ராஜபக்சே முழங்கியிருக்கிறார்,
இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலர்.
வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.
இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.
மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கையின் இந்த செயல் இந்தியாவை அவமானத்தில் நெளிய வைத்துள்ளது. ஆனாலும் இலங்கையை இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இந்தியாவுக்காக நாங்கள் போரை நடத்தினோம் என பந்தை திருப்பி அடிக்கிறார் ராஜபக்சே.
ஆனால் கொஞ்சமும் வெட்கமோ உள்ளார்ந்த தர்மமோ இல்லாமல் ராஜபக்சே இந்தியா வருவதும், அவருக்கு இந்தியா உபசாரம் செய்வதும் தொடர்கிறது.
விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தவரை, சீனா, பாகிஸ்தான் என அத்தனை இந்திய விரோத நாடுகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டிருந்தது, இந்திய மூட அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறதோ!

இது கையாலாகாதவனின் பேச்சு!


டெல்லி: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என அரசின் சமீப கால நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.
நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்து, ஒரு அமைதியற்ற, நிம்மதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.
இந்த நிலையில், தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கம் தந்தார்.
அவரது 15 நிமிட நேர உரை எத்தனை அபத்தம் என்பதைப் பாருங்கள்… இதுகுறித்த உங்களின் பார்வையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்…
பிரதமர் பேச்சின் அபத்தம் 1: ‘நமது தேசத்தின் நலனை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம். இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை.
1991ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினேன். அப்போது சிலர் இது குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்பினர்.
ஆனால், அவர்களால் தொடர்ந்து அம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை. அதேபோல் இப்போதும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் முயற்சி பலிக்காது.’

உண்மை: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்துக்கு பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் விஷ ஊசி போட்டது நான்தான் என்பதை எத்தனை கூசாமல், அதுவும் பெருமையாகப் பேசுகிறார் பாருங்கள். இருட்டில் தேசத்தை நிறுத்திவிட்டு ஒளிருது இந்தியா என்ற பாஜவின் அண்டப் புளுகை தோற்கடிக்க, மன்மோகன் சிங் விடும் ஆகாசப் புளுகு இது!
பொருளாதார சீர்த்திருத்தங்களால் இந்தியா என்ற சந்தைக்கு எக்கச்சக்கமான குப்பைகள் வந்து குவிந்தன. இது பெரிய நன்மையா என்ன?
உடனே வேலை வாய்ப்புகள், ஐடி வளர்ச்சி என கூறிவிட வேண்டாம். நாம் இன்னும் இந்த இரண்டிலும் கூலிகளாகவே உள்ளோம். சுயமான உற்பத்தி, நிறைவான வளர்ச்சி என்ற இரண்டுமே நம்மவர்களுக்கு இன்னும் பிடிபடவில்லை. இங்கேயுள்ள மாபெரும் ஐடி நிறுவனங்கள் ஒன்றும் உற்பத்தி சார்ந்தவை அல்ல.. பிள்ளை பிடிக்கும் பெரிய கம்பெனிகள்… அவ்வளவுதான்!
‘நியாயமாக ரூ 17 உயர்த்தியிருக்க வேண்டும்’
பிரதமர் பேச்சின் அபத்தம் 2: நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.
டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ.17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் விற்கப்படும் டீசல் பெரும்பாலும் பணக்காரர்களின் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது. அவர்களுக்குப் பயன், மத்திய அரசுக்குப் பெரும் நிதிப் பற்றாக்குறையா?

உண்மை: இந்தியாவை  விட இன்னும் அதிக அளவு, அதாவது கச்சா எண்ணெயை கிட்டத்தட்ட 100 சதவீதம் இறக்குமதி செய்துவரும் பாகிஸ்தானில் இந்தியாவைவிட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மிகக் குறைவு. அதாவது 30 சதவீதம் வரை குறைவு. எப்படி?
சரி, கச்சா எண்ணெயின் இன்றைய விலைதான் என்ன? பீப்பாய் ஒன்று 93 டாலர்கள். ஆனால் இதே கச்சா எண்ணெய் மூன்று ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தது… அதாவது 160 டாலர்கள் வரை. அன்றைக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ 38தான். அன்றைக்கு காட்டியது லிட்டருக்கு ரூ 5 வரை நஷ்டம் என்ற கணக்கு. இன்று கச்சா விலை 100 டாலருக்கும் குறைவுதானே. மூன்றுமாதங்கள் முன்பே ஆர்டர் தந்தாகிவிட்டது என்று பார்த்தாலும், அன்று விலை இன்னும் 6 டாலர்கள் குறைவாகத்தானே இருந்தது.
பெட்ரோல் விஷயத்தில் தொடர்ந்து அத்தனை அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் ஆண்டுக்கு ரூ 20000 கோடி வரை நிகர லாபம் பார்த்து வருகின்றன. ஆனால் விலையை ஏற்ற நஷ்டம் என்ற ஒரே பொய்யை விதவிதமாகக் கூறி வருகின்றனர்.
இத்துடன் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் இன்னொரு கொடுமை. ஆனால் நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் இதுபற்றியெல்லாம் பேசாமல், வெறும் நஷ்டக் கணக்கை பொத்தாம் பொதுவாகக் கூறுவது அபத்தத்தின் உச்சம்.
ஒரு நிறுவனத்தின், அதுவும் அரசு நிறுவனத்தின் நஷ்டத்துக்கு காரணங்களா குறைவு?
அப்புறம் டீசல் பணக்காரர்களின் கார்களுக்குத்தான் அதிகம் பயன்படுகின்றதாம். அடடா.. பிரதமர் அவர்களே.. நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி போலும்.. டீசலின் பயன்பாடு ஏழை எளிய விவசாய மக்களுக்குத்தான் அதிகம் என்பதால்தானே அதில் இத்தனை நாள் கை வைக்காமல் இருந்தீர்கள்? டீசல் பணக்காரர்களுக்கானது என்ற மகா உண்மை இத்தனை நாள் தெரியாமல் போனது எப்படி? அப்படியெனில் ஏழைகளின் எரிபொருளான பெட்ரோல் விலையை ஏன் தாறுமாறாக உயர்த்திக் கொண்டே போகிறீர்கள்?
டீஸல் விலை உயர்வு என்றதும், பஸ், ஆட்டோ, லாரி உள்பட அனைத்துக் கட்டணங்களும் உயர, காய்கறி, மளிகைப் பொருள் என அனைத்தின் விலைகளும் உயர்கின்றனவே… அது சட்ட விரோதம்தானே..? அதைத் தடுக்க உங்களுக்கு துப்பில்லாமல் போனது ஏனோ?
பணம் மரத்தில் காய்க்கலை..
பிரதமர் பேச்சின் அபத்தம் 3: ரூ. 5 உயர்த்திய பிறகும் ஒரு லிட்டர் டீசலின் விலை இறக்குமதி விலையைவிட ரூ. 13.86 குறைவாகவே இருக்கிறது. மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 32.70 குறைவாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு ரூ. 347 குறைவாக விற்கப்படுகிறது. இதையெல்லாம் சமாளிக்க ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கும் மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்.
அதே சமயம், பெட்ரோல் மீதான ரூ.5 மதிப்பிலான வரியைக் குறைத்துள்ளோம். ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் கோடிக் கணக்கான நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு செய்தோம். சமையல் எரிவாயு சிலிண்டரைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். புதிய விதிமுறையினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் என்பது உறுதி. அதற்கு மேல் பயன்படுத்தினால் அவர்கள் கூடுதல் விலை தந்தே ஆக வேண்டும்.
உண்மை: கவுண்டர் கேட்பது போலத்தான் கேட்கத் தோன்றுகிறது… ‘உன்னையெல்லாம் யார் இப்படி பேசச் சொல்லிக் கொடுக்கிறாங்க!?’
பிரதமர் அவர்களே… நாட்டு நிலவரம் தெரியாவிட்டால் தெரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டு இருப்பதுதானே… பெரும்பாலான மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 12 சிலிண்டர்கள் இருந்தே தீர வேண்டும்.
உண்மையிலேயே நீங்கள் ஏழைகள் மீது கரிசனம் கொண்டவர் என்றால், நியாயமாக பணக்காரர்களுக்கு அனைத்து சிலிண்டர்களையும் மார்க்கெட் விலையிலும், ஏழைகளுக்கு மாநிய விலையிலும் தர வேண்டும். காரணம் ஏழைகள், நடுத்தர மக்களை விட பணக்காரர்கள் பல மடங்கு அதிக சிலிண்டர்கள் வாங்குகிறார்கள். அதேபோல, எம்பிக்கள், அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் போன்றவர்களுக்கு இலவச சிலிண்டர்களை முற்றிலும் ரத்து செய்திருக்க வேண்டும்.
ஏழை நடுத்தர மக்களுக்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது பிரதமரே? நாங்கள் இத்தனை நாட்கள் கேட்ட கேள்வியை திருப்பிக் கேட்டால் நீங்கள் நியாயவாதி ஆகிவிட மாட்டீர்கள்!
சொந்த வணிகத்துக்கு சூனியம்!
பிரதமர் பேச்சின் அபத்தம் 4: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து இருப்பதால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது ஆகும். பெரு நகரங்களில் வணிக வளாகங்கள் அதிகரித்து இருப்பது போல் சிறிய கடைகளும் பெருகி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அனைவருக்குமே வாய்ப்புகள் உண்டு.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் விவசாயிகள் பயன் அடைவார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், நவீன போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் 50 சதவீத முதலீட்டை மேற்கொள்ளும். இதனால் காய்கறிகள், பழங்கள் ஆகியவை சேதம் அடைவது தடுக்கப்படும். இது விவசாயிகளுக்கு மட்டும் இன்றி நுகர்வோருக்கும் பலன் அளிப்பதாக அமையும்.
உண்மை: சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், பிர்லா, பார்தி போன்ற பெருமுதலாளிகளை அனுமதித்தே பெரும் தவறுதான். இந்த பெருமுதலாளிகள் வைத்திருக்கும் கடைகளில் நமக்கு தேவையானதை, தேவையான அளவு வாங்க முடியவில்லை. அவர்களை வைத்ததுதான் அளவு, தருவதுதான் தரம் என்றாகிவிட்டது. இந்த லட்சணத்தில் அந்நிய முதலாளிகள் வேறு.
சொந்த நாட்டு மக்களின் வணிகம் அழியும் என்பது ஒருபக்கம், நமது நுகர்வு முறை மாறி, வருவாய் – நுகர்வு – கடன் என்ற நச்சுச் சூழல் நிரந்தரமாய் நின்றுபோகும்.
சீர்த்திருத்தங்களைச் செய்யாததால்தான் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்ற அரிய கண்டுபிடிப்பையும் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் பொய்யான வாதம். உலகில் இதுவரை திடீர் வீழ்ச்சி கண்ட அத்தனை நாடுகளும் பொருளாதார சீர்த்திருத்தத்தை கடைப்பிடித்தவைதான். அப்படியெனில் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்ததற்கு சீர்திருத்தம்தானே காரணம்? இதை ஒப்புக்கொள்வாரா மன்மோகன்? மாட்டார், அதற்கு வேறு காரணங்கள் கூறுவார்.
தனது கையாலாகாத்தனத்தை மறைக்க விதவிதமான விளக்கங்களைக் கூறி தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ளும் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியாகிவிட்ட டாக்டர் மன்மோகன் சிங்கைப் பார்த்து பரிதாப்படுவதா? சொந்தப் பொருளாதாரத்தை சொந்த நாட்டின் வளங்களை வைத்துக் கட்டமைக்கத் தெரியாமல், நாட்டை வெறும் சந்தையாக மாற்றுவதே சாதனை என்பதில் உறுதியாக நிற்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டத்தை நினைத்து ஆத்திரப்படுவதா?
பிரதமர் அவர்களே.. என்றைக்கு நீங்கள் வல்லரசுகளின் தரகர் என்ற நிலையிலிருந்து மாறி, 120 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கப் போகிறீர்கள்?

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...