Saturday, September 29, 2012

சிதம்பரம் செய்த தேசத் துரோகம்??? ஆதாரம் அம்பலம்..

நேற்று மத்திய அமைச்சர் ஒருவர் அசிம் திரிவேதி தேசத் துரோகம் செய்துவிட்டதாக கூறி இருக்கின்றார், வேடிக்கையாக இருக்கின்றது? அவர் கேலிச் சித்திரம் வரையும் ஒரு நபர், அவர் அவரது தொழிலைத் தான் செய்திருக்கின்றார். அவர் மனதில் பட்டதை அவர் சொல்லி இருக்கின்றார். அதையே தேசத் துரோகம் என்று சொன்னால் கீழே வரும் படங்களுக்கு அவர் என்ன சொல்வார்?

 
அது தேசத் துரோகம் என்றால், இது என்ன?



அடுத்தது...
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையைப் பற்றி கலைஞரிடம் கேள்வி கேட்டதே தவறு..அதற்க்கு அவர் பதில் அளித்துள்ளது அதை விட மிகப் பெரிய தவறு. கடந்த ஐந்தாண்டுகளில் அவர் முதல் அமைச்சராய் இருக்கும் போதே இந்த பிரச்சினை தலை தூக்கி விட்டது. அப்போதெல்லாம் மௌனம் சாதித்து விட்டு தற்போது போராட்டக்காரர்களும், தமிழக அரசும் இதற்க்கு பேச்சு நடத்த வேண்டும் என்று புதுசாய் ஒரு "பிட்"டை போட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு பெயர்தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு, பிள்ளையும் கிள்ளி விடுவது என்பதோ???

உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட நீங்கள் இந்த பிரச்சினையில் இப்போது கூட தலையிட்டு காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவிற்கு கொண்டு வரலாமே. அதை விட்டு விட்டு தற்போது உதவி செய்வது போல் நடிப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும் என்று தெரியவில்லை. உங்களால் மத்திய அரசிடம் வாக்குவாதம் செய்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்திற்கு வாங்கித் தர முடியுமா? அப்படி முடியும் என்றால் சொல்லுங்கள்!!! நாங்கள் உங்கள் பின்னே அணி வகுத்து வருகின்றோம்.
வெளிப்படையாக சொல்லுங்கள் தலைவர் அவர்களே ..கூடங்குளம் பிரச்சினையில் உங்களின்  ஒத்துழைப்பு யாருக்கு? நீங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கிற தமிழக மக்களுக்கா? அல்லது கூடா நட்பு  கேடாய்  முடிந்த  காங்கிரஸ் தோழர்களுக்கா?

அடுத்தது காங்கிரஸ் சார்பில் இருந்து வந்த நாராயணசாமி இன்னும் ஒருவாரத்திற்குள் மின்சார உற்பத்தி தொடங்கி விடும் என்று சொன்னார், அதன் பிறகு இன்னும் இருபது  நாளில் தொடங்கி விடும் என்று சொன்னார்..எந்த வருஷத்தின் ஒரு வாரம், எந்த வருஷத்தின் இருபது நாள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கத் தவறிவிட்டார்கள்...இருபது நாளில் நிலக்கரி ஊழல் புகார் மட்டுமே தொடங்கி இருக்கின்றது. வேறு எதுவும் ஆக்கப் பூர்வமாய் தொடங்கப் படவில்லை. உலக நாடுகள் எல்லாம் அணுஉலை ஆபத்து என்று கைவிரித்து விட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் அதனை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடக் காரணம் என்னவென்று கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது????யாரிடமாவது, ஏதாவது வாங்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழத் தான் தோன்றுகின்றது.

உங்களை ஒருவர் எதிர்த்து விட்டால் அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால், உடனே அவரது பின்பக்கத்தை, அவருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களே? கார்போராட் கம்பெனிகளில் வாங்கிய நன்கொடை நிதி 2008 கோடி தற்போது யார் வசம் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா?  வெளிநாட்டினில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத் தின் பட்டியலை உடனடியாக வெளியிட முடியுமா? 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூவாய்க்கு நிலக்கரி ஊழல் நடைபெற்றதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை விடுத்துள்ளதே? அதைப் பற்றி பொது மக்களிடம் நேரிடையாக மேடை போட்டு விளக்கம் அளிக்க முடியுமா?

இதே மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைப் படிதானே அன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை வழக்காக எடுத்து விசாரித்தீர்கள், அப்போது துணிந்து விசாரித்த உங்களால் தற்போது ஏன் துணிவாய் பதில் அளிக்க முடியவில்லை...அப்போது ராசா என்றதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து காங்கிரஸ் கரை படவில்லை என்று சொன்னீர்கள், இன்று மன்மோகன் சிங் என்றதும் காங்கிரஸ் மத்திய தணிக்கை குழு மீது பாய்கின்றதே...நாங்கள் ஒன்றும் படிக்காத பாமரர்கள் இல்லை..இன்று படித்தவர்களை விட அவர்கள்தான் உங்களை கண்காணித்துக் கொண்டு வருகின்றார்கள்..மடியில் கனமில்லை என்றால் பயம் எதற்கு?

அப்படி தமிழனை கொன்று தீர்த்தே ஆக வேண்டுமா? 

கூடன்குள அணுமின் நிலையத்தை உடனடியாக உலகமே திரும்பி பார்க்கும் மருத்துவமனையாக மாற்றுங்கள், உங்கள் சோனியா வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்...கூடங்குளத்தில் உலகத்தரத்துடன் கூடிய மருத்துவமனையை உருவாக்குங்கள்...நாங்கள் உழைக்கின்றோம் அதற்காக...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...