தமிழனுக்கு ஒத்த சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம்...இந்திய ஒருமைப்பாடு கிழியாய் கிழிக்கப் படுகின்றது!!! என்ன செய்யப் போகின்றது காங்கிரஸ்? இதைவிட காங்கிரசிற்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் அவமானம் எதுவுமே கிடையாது.
காவிரி நதிநீர்மன்றத்தை கடுமையாக விமர்சித்து கேலி செய்தவர் ஜெயலலிதா..அந்த ஜெயலலிதாவே இன்று காவிரி நதிநீர்மன்ற ஆணையத்தை நாடி இருக்கின்றார் என்று குறை சொல்லிக்கொண்டிருந்தார் கருணாநிதி... உண்மையில் இன்று என்ன நடந்திருக்கின்றது? காவிரி நதி நீர் ஆணையம் பல் இல்லாத ஆணையமாகத் தானே இருந்து வருகின்றது. ஒருவேளை அது நியாயமானதாக அல்லது ஆரோக்கியமானதாக இருந்திருந்தால் என்றோ நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வந்திருக்க வேண்டுமே..அப்படி ஒரு ஆணையத்திற்கு தலைவராக பிரதமர் இருப்பதற்கு வெட்கப் படவேண்டும்.
நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பினில் 9000 கன அடி நீரை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டது. ஆனால் இன்றுவரை அவர்கள் மடை திறப்பதற்கான அறிகுறியே இல்லை. அதற்க்கு பதிலாக அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கின்றார்கள். உச்சநீதிமன்றத்தை கேவலப் படுத்த இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது. சரி தமிழ்நாட்டு சார்பினில் மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் தமிழ் பற்றுள்ள தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வழக்கம் போல ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிவிட்டு பேசாமல் மூடிக்கொண்டுதான் செல்லப் போகின்றார்கள். உலக தரத்தை பற்றி எல்லாம் வாய் கிழியப் பேசும் தமிழகத்தை சார்ந்த நிதியமைச்சரே...உங்களுக்கு திராணி இருந்தால் தமிழக மக்களை , விவசாயிகளை காப்பாற்ற முடியுமா? வெளிநாட்டு பணத்தை இந்தியா கொண்டுவாருங்கள் என்று அண்ணா ஹசாரே குழுவினர் கேட்டபோதும், லோக்பால் மசோதாவை அமுல்படுத்த கேட்டபோது நீங்களும், கபில்சிபலும் எப்படி எத்தனை கூட்டங்கள் கூட்டினீர்கள்...இன்று உங்களால் கர்நாடகாவிற்கு சென்று உங்கள் மாநில மக்களின் நியாயமான கோரிக்கையை முன் வைத்து பேச முடியுமா?
இன்னொருவர் எங்கள் மாநிலத்திலேயே இருக்கின்றார்? அவர்
கருணா என்பது மூன்று எழுத்து..
கருநா என்பதும் மூன்று எழுத்து..
காவிரி என்பதும் மூன்று எழுத்து..
வராது என்பதும் மூன்று எழுத்து..
என்று ஒரு வீணாய் போன கவிதையை வாசித்து விட்டு கோபாலபுரம் சென்று விடுவார்.
மற்றொரு பக்கம் எல்லாக் கட்சியினரும் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் மறந்து புதிய போராட்டத்திற்கு போஸ்டர் அடிக்க கிளம்பி விடுவார்கள்.
கடைசியில் நாம் என்ன செய்யமுடியும்? தமிழன் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும், தமிழ்நாட்டினில் இருந்து கருநாடகாவிற்கு ஒரு யூனிட் மின்சாரம் கூட கொடுக்க கூடாது...ஒரு துண்டு பழங்கள், காய்கறிகள் அவர்களுக்கு கொடுக்கப் படக் கூடாது..நாம் அதைக் கொடுக்க மறுக்கின்ற போது...மத்திய அரசு நம்மைத் தடுக்க கூடாது...அந்த உரிமை அவர்களுக்கு என்றோ காணாமல் போய் விட்டது...
தமிழ் இனத்தை உசுப்பி விட்டதற்காக தேசிய இறையாண்மையை கொச்சைப் படுத்தியதாக சீமான் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தார்கள்..நேற்று கருநாடக அமைச்சர் ஒருவர் இந்த பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப் படலாம் என்று பேசி இருக்கின்றார். மத்திய அரசிற்கு திராணி இருந்தால் அவர் மீது தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று கைது செய்யுமா?

ஒரு பிரதமரையே ..இந்தியாவின் பலம் வாய்ந்த உச்சநீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தியவர்கள் அவர்கள்..உனக்கு மின்சாரம் வேண்டுமெனில் எங்களுக்கு தண்ணீர் கொடு என்பதே நமது போராட்டமாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தையே கட்டிக் காப்பாற்ற முடியாத ஒரு கையாலாகாத மத்திய அரசு...சட்டத்தை, நீதிமன்றத்தை மதித்த நமது தமிழர்கள் மீது மத்திய அரசு எந்த கேள்வியும் கேட்க தகுதி இல்லாதவர்கள். பிரச்சினையை துவக்கியவர்களை முதலில் கட்டுப் படுத்தி விட்டு பின்னர் தமிழ்நாட்டிடம் அவர்கள் பேச வரலாம்...இதுதான் உண்மையான தமிழனின் எதிர்பார்ப்பு...பதிவர்களே...உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்!!!
No comments:
Post a Comment