
அவர்களை கேள்வி கேட்கும் உரிமை நம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லை, உரிமை என்று சொல்வதை விட வசதி, வாய்ப்புகள் என்று சொல்லலாம். அவர்களை நாம் கேள்வி கேட்கும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே. அந்த ஒரு நாளுக்கு பிறகு அவர்களது ஆட்டம் பேயாட்டமாகவே இருக்கின்றது.
கர்நாடகா தண்ணீர் தர மறுக்கின்றது. அது நமக்கு வர வேண்டிய நியாயமான பங்கு. இந்தியாவின் மிகப் பெரிய விசயமாக நாம் மதிப்பது உச்ச நீதிமன்றத்தை தான்...அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே காலில் தூக்கி போட்டு மிதித்து விட்டார்கள் கன்னடர்கள். தனது தாய்மொழிக்காக, தனது சொந்த மாநிலத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.எம் கிருஷ்ணா குரல் கொடுத்து பேசி வருகின்றார்.,

எஸ்.எம்.கிருஷ்ணா விற்கு கன்னடன் என்ற வெறி இருக்கும் போது உங்களுக்கு தமிழன் என்ற உணர்வு கூட இல்லையா? கர்நாடகாவில் மட்டும்தான் விவசாயி இருக்கின்றானா? தமிழ்நாட்டில் இருப்பது உன் கண்களுக்கு தெரியவில்லையா? இன்னொருவர் தமிழன், தமிழ் பால், தமிழ் மோர், என்று படம் காட்டிகொண்டு இருப்பவருக்கு பல எம்பிக்கள் இருக்கின்றார்கள். நீங்கள் நினைத்தால், உண்மையில் தமிழர்கள் மீது அன்பிருந்தால் உங்களால அந்த உரிமையை வாங்க முடியாதா? என் இன மக்களை கொன்றவர்களின் வாழ்வுரிமைக்காக டெ(த்)சோ மாநாடு எல்லாம் நடத்தினீங்க...அதுல என்னத்த சாதிச்சீங்க தலைவரே? இரண்டு நாளைக்கு முன்னாடி வந்து சிரிச்சிக்கிட்டே ஆட்டம் போட்டுட்டு போயிட்டானே அந்த கொடுங்கோலன் ராஜபக்சே....கிரிக்கெட்டுல நாம ஒரு சிக்சர் அடிச்ச சிங்கள வெறிபிடிச்ச நாய், நம்ம மீனவர்களை ஆறு பேரை அடிக்கிறானுங்க...இப்போ சொல்லுங்க இந்தியா செயிக்கணும்னு என் மீனவ குடும்பம் நினைப்பானா? நாங்க மட்டும் இந்தியா, இந்தியா னு கனவு காணனும், நீங்க மட்டும் சுவிஸ் பேங்க், சுவிஸ் பாங்குனு பணத்துல மிதக்கனுமா?

அமைதிப் பூங்காவாய் இருந்த தமிழ்நாடு இப்போது ஒவ்வொரு பிரச்சினையிலும் திக்கி திண்டாடி வருகின்றது. தண்ணீர் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, கடுமையான மின்வெட்டு, விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் என்று தினமும் நாம் முப்பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். ஆனால் இன்னொருவர் என்னடா என்றால், முப்பெரும் விழா என்று கனிமொழி, ஸ்டாலின், அழகிரி க்காக விழா நடத்திக் கொண்டிருக்கின்றார். ஏன்யா ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்னாச்சு? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என்னாச்சு? காவிரி நீர் பிரச்சினை என்னாச்சு? ஈழத் தமிழர் பிரச்சினை என்னாச்சு? எல்லாத்துக்கும் மேலாக கட்சத் தீவை கண்ணுக்கு எதிரா காவு கொடுத்திட்டு இப்போ அதுக்காக சவுண்டு விட்டுகிட்டு இருக்கீகளே? கேக்கிறவன் கேனையா இருந்தா கேப்பையிலே கேஸ் சிலிண்டர் வருதுன்னு சொல்வீகளோ..... எஸ்.எம்.கிருஷ்ணா வை பாத்து தமிழுணர்வை கத்துக்கோங்க??!!??
No comments:
Post a Comment