Monday, September 10, 2012

SUN TV செய்தது சரியா ...?

இன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது .   தொடர்ந்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும் , உண்மை நிலையை மக்கள் அறியும் விதத்திலும் இந்த செய்திகள் ஒளி பரப்ப பட்டது வரவேற்க தகுந்தது .  

கிட்ட தட்ட இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் சென்னை பட்டணத்தின் பெரும்பாலான ATM இருக்கும் இடங்களை SUN TV யின் தொலைகாட்சி பதிவு செய்தது .  அதில் இரவு 9 மணிக்கு ஒரு ATM ல் காவலாளி இல்லை என்றும் அதிகாலை 1  மணிக்கு ஒரு காவலாளி தூங்கி கொண்டு இருப்பதையும் ,  அதிகாலை 1 . 30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பியும் அற்புதமான ஒளி பரப்பை செய்து முடித்தது SUN TV யின் செய்திகள் .



அண்ணா சிலையின் முன் உள்ள ATM ல் இரவு 9 மணிக்கு காவலாளி இல்லை என்று ரிப்போர்ட்டர் பேசினார் .  அந்த இரவில் விழித்திருக்கும் சக்திக்காக ஏன் அவர் ஒரு தேநீர் அருந்த சென்றிருக்க கூடாது ....?

ICICI வங்கியின் ATM ஒன்றில் தூங்க கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பி அவரது முகம் திரையில் நன்கு விழும் படி காண்பித்து அவரிடம் தூங்கி கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க அவர் மிகுந்த தர்ம சங்கடத்துடன் இப்பொழுது தான் என்று தலை குனிந்து சொல்ல ,  நான் ரொம்பவே நொந்து தான் போனேன் .

அந்த காவலாளி தூங்கினதை  நான் நியாயப்படுத்தவில்லை .  இருந்தாலும்   அவர் என்ன மாதிரி சூழ்நிலையில் அந்த இரவு வேலையை தேர்ந்து எடுத்தாரோ .. அநேக இரவு நேர காவலாளிகள் பகல் நேரம் வேறு வேலை செய்கிறதை நான் அறிந்திருக்கிறேன் .  எல்லாம் குடும்பத்தை காப்பாற்ற தான் .  நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் பேசியிருக்கலாம் ( TV யில் காண்பிக்காமல் ) ,   இல்லை என்றால் ஒரு பொதுவான ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் .  எதுவும் செய்யாமல் ஒரு அப்பாவியின் முகத்தை அழகாக காட்டி விட்டீர்கள் .   இனி மேல் அவருக்கு எப்படி அந்த வேலை நீடிக்கும் ..?
இப்படி அப்பாவி மக்களை முன்னால் நிறுத்தி , பிரபலமாகும் அநேகர் இந்த நாட்களில் எழும்புகிறார்கள் .  அதனால் பாதிக்கப்படுவது என்னவோ ... மக்கள் தான் 



என்னடா ...  இப்படி எழுதுகிறார் என நினைக்கலாம் ...!  ஆம் ... வேறென்ன செய்ய ... பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?  என்பதை  இப்பொழுதும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...