Saturday, September 29, 2012

கலைஞர்?? உண்மையை உணர்ந்த தமிழகம்!

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி இருப்பதனால் மானமுள்ள பெண்மணி மம்தா பானர்ஜி உடனே மத்திய அரசிற்கு கெடு விதித்தது. அப்படியாவது மத்திய அரசு தனது முடிவில் இருந்து மாறுமா என்று எதிர்பார்க்கின்றது.  இருந்தாலும் அய்யோ விலை ஏறி விட்டதே என்று முதலில் கண்டனம் தெரிவித்து கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்கி விடுவேன் என்று சொல்லி இருக்கும் அந்த மனதைரியம் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய ஒன்றே.  நிச்சயம் இன்று இரவிற்குள் மம்தாவிடம் பிச்சை கேட்டு, காலில் விழுந்து அந்த அம்மாவை சரிக்கட்டி விடுவார்கள். காலில் விழுந்து பிச்சை கேட்டு, சமரசம் செய்வதற்கு என்றே காங்கிரசில் ஐந்து பேர் கொண்ட கும்பல் (குழு) இருக்கின்றது. எந்த கூட்டணி கட்சித் தலைவர் பிரச்சினை கிளப்பினாலும் உடனே இவர்கள் சென்று சமாதானம் பேசுவார்கள்.

இருந்தாலும் அதைக் கூட சொல்லத் தெரியாது என்று சொல்லி இருக்கின்றார் கலைஞர். அவருடைய அவசரப்பட்ட வார்த்தைகளால் அரசியல் வாழ்க்கையில் அவர் இத்தனை காலம் சேர்த்து வைத்திருந்த அத்தனை பெயர், புகழ் அனைத்தையும் ஒவ்வொன்றாய் பறி கொடுத்து வருகின்றார் என்பதே சத்திய உண்மை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 68 இடம் கேட்டது. அதை கொடுக்க முடியாது...இப்படி எல்லாம் மிரட்டினால் நான் கூட்டணியில் இருந்து வாபஸ் பெறுவேன் என்று மிரட்டியவர்தான் இந்த தலைவர் என்பதை நாங்கள் மறக்க வில்லை. அதற்காக அன்று டெல்லியில் ராஜினாமா கடிதத்தை கொடுக்க திமுக எம்பிக்கள் தயாராக இருந்ததையும் நாங்கள் மறக்க வில்லை. அதற்காக அன்று பல திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு கூடி நின்று சோனியாவின் உருவ பொம்மையை எரித்தார்கள், பதிலுக்கு அவர்கள் கலைஞரின் உருவபொம்மையை எரித்தார்கள், திடீரென்று எங்கிருந்தோ வந்த இரண்டு காங்கிரஸ் இடைத்தரகர்கள் ஏதேதோ பேச்சு நடத்தி கடைசியில் 63 சீட்டுக்களை பெற்று சென்றார்கள். அப்போதெல்லாம் மிரட்ட தெரியாமலா இருந்தார் இந்த கலைஞர்??

ஆனால் தற்போது டீசல் விலை ஏறியதை காரணம் காட்டி வாபஸ் பெறுவேன் என்று சொல்ல முடியாது..எனக்கு மிரட்ட தெரியாது என்று சொல்லி இருப்பதுதான் வேடிக்கையின் உச்சகட்டம். தன்னுடைய பதவி, வருமானம் என்று வரும்போது மிரட்ட தெரியும் கலைஞருக்கு தமிழக நலனிற்காக மிராட்டத் தெரியாது என்று உண்மையை சொல்லி இருக்கும் அவரது மனதைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இப்படி நாட்டு நலனிற்கு எந்த உதவியும் செய்யாத அவர் அந்த தலைவர் பதவியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே. இப்படியே மௌனமாய் இருந்து இருந்து ஏற்கனவே 40000 தமிழ் உறவுகளை இழந்து விட்டோம், அதன் பின்னர் கட்சத் தீவினை காவுகொடுத்து விட்டோம். உங்களது கூட்டணியின் பலத்தை வைத்து எத்தனையோ ஆக்கப் பூர்வமான திட்டங்களை தமிழகத்திற்குள் வரவழைத்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு திட்டமும் இன்று வரை நமக்கு நடக்கவில்லை.

தனது கட்சி எம்பிக்களுக்கு தேவையான இலாகாக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார். ஈழத் தமிழர்களுக்காய் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் மீண்டும், மீண்டும் உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லி "கொல்"கின்றார். உண்ணாவிரத்தத்தை விட பயங்கரமான ஆயுதத்தை கையில் வைத்து கொண்டு அதை கடைசி வரை பயன்படுத்தாமல் வசனம் பேசியே சாகடித்தார் என்பதே உண்மை.

இதில் இருந்தே இனி இவர் சொல்லும் எதையும் நம்ப கூடாது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொள்வார்கள். அரசியலைத் தவிர கலைஞர் ஒரு அப்பாவி என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்..இதற்க்கு மேலும் உணராத ஜென்மங்களை என்னவென்று சொல்வது????

சாமீ சத்தியமா எனக்கு மிரட்டத் தெரியாது!!!?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...