Monday, September 10, 2012

உதயகுமாரின் கபட எண்ணத்தின் விளைவே கூடங்குளம் கலவரம்


கூடங்குளம் அணுமின் நிலயத்திற்கு எதிரான மக்களின் போரரட்டம் பற்றியும் ,  அந்த போராட்டத்திற்கு மக்களை வஞ்சகமாக உபயோகித்து வரும் திரு. உதயகுமாரை குறித்தும்   இந்த சூழலில் இன்று அந்த காரியம் நடந்தே விட்டது.


இந்த கலவரத்தை உதயகுமார் தான் திட்டமிட்டு நடத்தினார் என்பதை நான் எழுதுவதற்கு பின்வரும் காரணங்கள் தான் உள்ளது .
முற்றுகை போராட்டம் என்று அறிவித்த திரு. உதயகுமார் மக்களை குறிப்பாக பெண்களையும் , குழந்தைகளையும் கடற்கரையோரம் அழைத்து வந்தது அவர் செய்த கபட நாடகத்தின் உச்ச கட்டம் .  இதை அறியாமல் மக்கள் அவர் பின்னால் நடந்து வந்தது வேதனையின் உச்சம் என்று தான் சொல்லமுடியும் .  நான் இப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருக்கிறது . 



ஒரு வேளை முற்றுகை போராட்டம் நில வழியாக நடந்து இருந்தால் , காவல் துறை மிக எளிதாக அவர்களை தடுத்து எந்த சேதமும் இல்லாமல் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள்  ஆனால் இவரோ பெண்களையும் , குழந்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கூட்டத்தை கடற்கரைக்கு கொண்டு வந்தது ஒரு மாபெரும் சூழ்ச்சி.  ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் எனில் , ஒருவேளை அவர் திட்டமிட்டபடி ஒரு பெரும் கலவரம் கடற்கரையோரப் பகுதியில் நடந்து இருந்தால் , கூட்ட நெரிசலில் சிக்கி பெண்களும் , குழந்தைகளும் கடலில் குதித்தால் அவர்கள் கதி என்ன என்று நினைத்து பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை.  எப்படி மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் சம்பவம் நடந்ததோ அப்படி நடந்திருக்கும் .  ஆனால் கடவுளின் பெரிதான ஆசியால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.  காவல்துறை இதை உணர்ந்து மெதுவாக செயலபட்டதால் அப்படி ஒரு பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.  ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடத்திருந்தால் உதயகுமார் அதை பெரிய பிரச்சினையாக எடுத்து தன போராட்டத்தை விரிவுபடுத்தலாம் என நினைத்திருக்கலாம் .

நான் இப்படி பேசுவதும் , எழுதுவதும் திரு. உதயகுமார் மீது நான் செலுத்தும் அபாண்ட குற்றசாட்டுகள் என்று நீங்கள் நினைக்கலாம் .  அப்படி என்றால் ஏன் கேள்விக்கு பதில் கூறுங்கள் .
  1. சின்னச்சிறு பிள்ளைகளை கடலோரம் அழைத்து வந்தது ஏன் ?
  2. பெண்களையும் , சிறு பிள்ளைகளையும் முன் நிறுத்தியது ஏன் ?
  3. தன்னை நம்பி வந்த ஜனங்கள் கலவரத்தில் சிக்கி இருக்கும் பொழுது திருடன் போல தப்பி சென்றது ஏன் ?
  4. காந்திய போராட்டம் என்று தன்னை வர்ணிக்கும் உதயகுமார் , காந்தியை போல செய்யாமல் தலைமறைவானது ஏன் ?
  5. நேற்று போராட்டத்தின் போது , பலமுறை காவல்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் , வர மறுத்துவிட்டு இன்று பேச்சுவார்த்தைக்கு விழைவது ஏன் /
இப்படி பல கேள்விகளுக்கு உதயகுமார் சொல்லும் பதில்களை இன்னும் நம்புவதற்கு அப்பாவி ஜனங்கள் இருக்கும் வரை திரு. உதயகுமார் போன்ற கபட தாரிகளின் நாடகம் இன்னும் பல அப்பாவி ஜனங்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டே தான் இருக்கும் .


எனது தாழ்மையான கோரிக்கை ஒன்றே ஓன்று தான்

  • மக்களே ,  உங்களை வஞ்சித்து நடத்தி உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி உங்களை தவிக்க விட்டு ஒளித்து ஓடி போன திரு. உதயகுமார் உங்கள் நலனை விரும்புகிறவர் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து உங்களின் போராட்டத்தை  கைவிட்டு அரசோடு பேச்சு வார்த்தை நடத்துங்கள்
  • காவல்துறையே , தயை கூர்ந்து வஞ்சிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , அவர்களை வஞ்சித்து இதுவரை நடத்திய திரு, உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டத்தின் மீது வெகு விரைவில் நடவடிக்கை எடுங்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...