Saturday, September 29, 2012

வெட்டிப் போராட்டம் - வெற்றி வெற்றி!!!!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவது, யாவரும் அறிந்த ஒன்றே. அதில் தற்போது அரங்கேறி இருப்பது மூன்று விஷயங்கள். 
1. டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூவாய் உயர்த்தி இருப்பது. 
2. இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை   
    அங்கீகாரம் செய்திருப்பது. 
3. சமையல் எரிவாயு உருளைகளை கட்டுப்படுத்துவது. இந்த மூன்று 
    விஷயங்களுமே அடித்தட்டு மக்களை பெரிதும் பாதிக்கும் செயலாகும்.


காரணம் :

எதற்கு இந்த அதிரடி நடவடிக்கைகள்? முதல் காரணம், காங்கிரசின் ஊழல்கள், மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக. என்ன ஊழல்கள் ? 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தத்ரா ஊழல்,
நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், கருப்பு பணம் பட்டியல் வெளியிட மறுத்தல்..என்று அடுக்கி கொண்டே போகலாம்.

குறிப்பாக கடைசியாக வந்திருக்கும் நிலக்கரி ஊழல், மிகப் பெரிய தொகையினை கொண்டிருக்கின்றது. நாங்கள் வேறு நெருக்கடிகளை மக்களுக்கு கொடுப்போம். மக்கள் அதனால் அந்த ஊழல்களை மறந்து அவர்கள் பிரச்சினைக்கு போய் விடுவார்கள் என்று பகீரங்கமாகவே குரல் கொடுத்தவர் சுஷில் குமார் ஷிண்டே. அதுதான் தற்போது நடக்கின்றது.   இப்போது மக்களால் நிலக்கரி ஊழலை பற்றி யோசிக்க முடியுமா? இப்போது எதிர்கட்சியினருக்கு பெரிய ஆயுதம் கிடைத்தது போல் அந்த நிலக்கரி ஊழலை மறந்தே போனார்கள். 

வெட்டிப் போராட்டம்
அதற்க்கு ஏற்றார் போல நேற்று ஒரு மாபெரும் வெட்டிப் போராட்டம் நடந்தேறியிருக்கின்றது. இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? இந்திய அரசிற்கு 12 ,000 கோடி ரூவாய் வருவாய் இழப்பு என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது. நிச்சயம் இந்த வருவாய் இழப்பை அவர்கள் ஏற்கனவே எதிர்பார்த்து அதையும் சேர்த்து அந்நிய முதலீட்டாளர்களிடம் ஏற்கனவே வசூலித்திருப்பார்கள். அதனால் இது ஒன்று இந்திய அரசிற்கு வருவாய் இழப்பாய் நாம் சொல்ல முடியாது. அந்த இழப்பும் நமக்குத்தானே ஒழிய அவர்களுக்கு கிடையாது. சாதாரண டீ கடைகள், மற்றும் ஓட்டல்களில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு நாள் ஊதியம் போனதுதான் மிச்சம். மற்றபடி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாய் கிடைக்க வேண்டிய டிஜிட்டல் பேனர் அமோகமாய் கிடைத்திருக்கின்றது. தமிழ்நாட்டினில் கடையடைப்பு போராட்டத்திற்கு வெள்ளையன் மற்றும் விக்கிரமராசா தலைமையில் போராட்டம் என்று ஆங்காங்கே பெயர் பலகைகள் மட்டும் பிரகாசமாய் இருந்தது. போராட்டத்தின் முடிவு என்ன? ஏழையின் ஒருநாள் ஊதியம் அவுட். ஏற்கனவே வாழ்க்கை ஒரு போராட்டம், இப்போது அதைவிட பெரும் போராட்டம்.
 
இவ்வளவு பிரச்சினைக்கு பிறகும் கூட மத்திய நிதி அமைச்சர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது, பாரத பந்த்தால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்று. உண்மைதானே. அவர் ஐஸ்கிரீமையே உணவாக சாப்பிடுபவர். நாம் ஒருவேளை சோத்துக்கு சிங்கி அடிப்பவர்கள்.

சரி, இந்த எதிர்கட்சிகளாவது ஒன்று கூடி போராட்டம் செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. ஆளுக்கு ஒரு திசையில் 40 , 30 என்று சேர்ந்து கூப்பாடு போட்டு விட்டு ரயில்களையும், பேருந்துகளையும் நிப்பாட்டி விட்டு சென்று விடுகின்றார்கள். உங்கள் எதிர்ப்பால் என்ன நடந்து விட்டது? அந்த திட்டம் நிறைவேறத் தானே போகின்றது.


முடிவுதான் என்ன?
இதற்க்கு முடிவுதான் என்ன? மம்தா பேனர்ஜி எடுத்தது போல் அதிரடியாய் அனைத்து கூட்டணி கட்சிகளும் விலக வேண்டும். இல்லையேல் அந்த கூட்டணி கட்சிகளை நோக்கி போராட்டம் செய்ய வேண்டும். எனக்கு மிரட்ட தெரியாது என்று சொல்லிவிட்டால் நீ பெரிய தலைவனாகி விட முடியுமா? ஒப்புக்கு அந்த கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்துவதுதான் வேடிக்கையின் உச்சகட்டம். அட முட்டாள் தொண்டர்களே..உங்கள் உலையில் ஒரு லோடு மண் அள்ளிப் போட்டுவிட்டு அவர்கள் கைகோர்த்து கொண்டு வேடிக்கை பார்க்கின்றார்களே..இதுகூடத் தெரியவில்லையே!!!

உனக்கு எங்கள் மாநிலத்தில் இடம், கட்சி வேண்டுமெனில் நீ அந்த கூட்டணியில் இருந்து விலகு என்று ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் களத்தில் இறங்க வேண்டும்., அதை விட அந்நிய முதலீட்டாளர்கள் கடைகளில் ஒரு பொருள் வாங்க கூடாது. அந்த நிறுவனத்திற்கு ஒருவரும் வேலைக்கு செல்ல கூடாது,. அவர்களின் பொருட்கள் யாவும் விலைபோகாமலே வீணாய் போக வேண்டும், அதற்க்கு நம் மக்கள் தயாரா? கடை திறந்ததும் இரண்டு பொருட்கள் இலவசம் என்று சொன்னதும் சொந்த கடைகளை போட்டு விட்டுக் கூட அங்கே வரிசையில் காத்திருக்கும் நம் மக்களை என்னவென்று சொல்வது. 

ஹேய், நீ எங்க அரிசி வாங்குற? நான் நம்ம ஊரு முனியாண்டி கடையிலே அரிசி வாங்கினேன்? நீ? அய்யோ அந்த  நாத்தம் பிடிச்ச கடையிலா? நான் பிராடு & கோ வில அரிசி வாங்குனேன். புல் ஏசி, 5 கிலோ அரிசி வாங்குனா ஒரு லிட்டர் கோக் குடுக்கிறான், நல்லா பாலிஷ் பண்ண அரிசி. ஒருவாட்டி வாங்கி பாரு..அப்போதான் அந்த முனியாண்டி பயலுக்கு தெரியும். இப்படித் தானே நாம போய்க் கிட்டு இருக்கோம். அதனால் வெட்டிப் போராட்டம், வெறும் வெற்றுப் போராட்டம்தான்.

மானங்கெட்ட கூட்டணி தலைவர்கள் இருக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. ஒழியாது. முடிவு மக்கள் கைகளில்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...