அந்தந்த விஷயங்களை அந்தந்த வயதில் அனுபவித்துவிட வேண்டும். காலம் கழித்து அதை அனுபவிக்கலாம், ஆனால், சமூகம் நம்மை கோமாளி போல பார்க்கும். ஐந்து வயது வரை மூன்று சக்கர சைக்கிள் ஓட்டலாம், 20 வயதிலும் ஓட்டலாம், ஆனால், இவ்வுலகின் பார்வை வேறுவிதமாக இருக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, April 30, 2021
30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.
சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள். சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.
காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிருமிநாசினி, முக கவசம் வினியோகம் செய்ய சுகாதார குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவரும் உயர் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க தொகுதி வாரியாக செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முகவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயன்படுத்துவதற்காக தற்காலிக நகரும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தின் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி, முகவர்களின் வாகனங்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வெளிப்புற பகுதியில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களத்தில் உள்ள 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் வெற்றி பெறுகிறவர்கள் யார் என்பது நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெரிய இருக்கிறது. அதுவரையில் வேட்பாளர்களுக்கு திக்... திக்... தினமாக சனிக்கிழமை இருக்கப்போகிறது. தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.
செரிமான பிரச்சனை, உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்.
கத்தரிக்காய் என்பது இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இது நார்ச்சத்து நிறைந்தது, மேலும் இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.
பலர் கூறக் கேட்டது.
பெண்_பார்க்கும்_படலத்தில்
பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை.
ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....
மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்.
இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன.
*காலம் மாறிவிட்டது* 🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
*ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.*
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...