Wednesday, April 28, 2021

கவுத்திமலை அனுமன் தீர்த்தத்தின் மகிமைகள்.

 திருவண்ணாமலை வட்டம் கவுத்திமலை (கௌதமமலை) அடிவாரத்தில் வெங்காயவேலுார் என்கிற கிராமத்தில் வனப்பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது

ஸ்ரீகாரியசித்தி ஆஞ்சநேயர் திருக்கோயில்.
கேட்டறியப்பட்ட ஆலய அமைப்பிற்கான பிண்ணனி.
கவுத்திமலை வனப்பகுதியில் காட்டுப்பன்றி மயில் குரங்குகள் மான்கள் காட்டுப்பூனைகள் குள்ளநரிகள் என பலவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் வனப்பகுதியின் எல்லையில் வயது முதிர்ந்த ஆண் குரங்கு ஒன்று நடைபாதையில் இறந்து கிடந்ததை கண்ட இவ்வாலய பூசாரி குரங்குக்கு முறைப்படியான இறுதி சடங்குகளை செய்து அதே இடத்தில் நல்அடக்கம் செய்திருக்கிறார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு குரங்கு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அமானுஷ்ய சப்தங்கள் வருவதை ஏற்கனவே பூஜை செய்யும் நேரங்களில் அறிந்திருந்த பூசாரியின் கனவில் அனுமன் தோன்றி குரங்கு புதைக்கப்பட்ட இடத்தில் தானே ஆத்மஸ்வரூபமாக உள்ளதாகவும் தனக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்திட வேண்டுமாய் ஆணையிட்டதின் பேரிலும் இவ்வாலயம் அமைக்கப்படுள்ளது.
இவ்வாலயத்தில் ஸ்ரீகாரியசித்தி ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் ஆஞ்சநேயர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அனுமனுக்கு அபிஷேகம் செய்யப்படும் அபிஷேக நீரே இங்கு அனுமன் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் தெளிக்க சிறுபாத்திரங்கள் மூலமாக அனுமன் தீர்த்தத்தை பெற்று செல்கின்றனர்.
அனுமன் மேனியை சுத்தம் செய்த அபிஷேக நீரையே தீர்த்தமாக பெற்று நம் தலையில் தெளித்துக்கொள்வதாலும் பருகுவதாலும் பலருக்கும் தீராத நோய்களும் தீருவதாகவும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனத்தெளிவை வழங்குவதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த அனுமன் தீர்த்தம் தெளிக்கப்படும் இடங்களில் உள்ள துர்சக்திகளெல்லாம் விலகி ஓடும் என்ற ஆழமான நம்பிக்கையின் காரணமாக சுற்றியுள்ள கிராமத்தினர் பலரும் தங்களின் வீடுகளிலும் நிலங்கள் கால்நடைகள் தொழில் செய்யும் இடங்களிலும் தெளிப்பதற்காக தீர்த்தம் வாங்க இவ்வாலயத்திற்கு வருகின்றனர்.
இவ்வாலயத்தில் காரிய வெற்றிக்காக மட்டைத்தேங்காய் மண்டபத்தில் கட்டப்படுகிறது திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் வீடு வாகனம் அமைய குடிப்பழக்கம் நிறுத்த நோய் உபாதைகள் நீங்க திருடுபோன பொருள் கிடைக்க என பல்வேறு கோரிக்கைகளுக்காக மட்டைத்தேங்காய் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளதாக கோயில் பூசாரி தெரிவித்தார். பேய் பிசாசு தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களும் தாயத்து கட்டி தீர்த்தம் வாங்கி செல்கின்றனர்.
இந்த அனுமன் தீர்த்தத்தை பெற பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் சனி ஞாயிறுகளில் இவ்வாலயத்திற்கு வருகின்றனர். அதில் ஒரு பக்தரை விசாரித்ததில் இங்கு கிடைக்கும் அனுமன் தீர்த்தத்தை பருகினால் மருத்துவருக்கே அடங்காத நோயும் அடங்கிப்போகும் என்று கூறினார். இந்த தீர்த்தத்தை தங்கள் வீட்டில் தெளித்தபின்னரே பில்லி சூனிய பாதிப்புகள் விலகி தங்களின் குடும்பம் நன்றாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தவறாமல் இங்கு வருவதாகவும் கூறினார். வெற்றிலை மாலை வடைமாலை துளசிமாலை வெண்ணை சாற்று செந்துார சாற்று என பக்தர்கள் தங்களின் பக்தியை செலுத்துகின்றனர்.
இங்கு பக்தர்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை காகிதத்தில் எழுதி பதினோறு ரூபாய் தட்சணையுடன் அனுமன் பாதத்தில் வைத்து வழிபடுகின்றனர். இதன்மூலம் தங்களின் கோரிக்கைகளை அனுமன் நிறைவேற்றி வைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாலயம் ஸ்ரீவாயுபுத்திர ஆஞ்சநேயர் அறக்கட்டளை மூலமாக இயங்கி வருகிறது. காணிக்கை உண்டியலோ எந்தவிதமான கட்டணங்களும் இங்கு வசூலிப்பதில்லை.
செரிமானக்கோளாறால் உணவுண்ண முடியாமல் மருத்துவமனையில் இருந்த எனது நண்பர் இத்தீர்த்தத்தை தெளித்து பருகியபின் உடல்நிலை தேறி வீடு திரும்பியபின் எனக்கு இவ்வாலயத்தை பற்றி தெரிவித்ததின் பேரில் இங்கு வந்து தீர்த்தம் மற்றும் செந்துார பிரசாதம் பெற்று மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இப்பதிவை உங்களுக்கும் பயன்தரும் வகையில் பதிகிறேன்.
நீங்களும் ஸ்ரீகாரியசித்தி ஆஞ்சநேயரை தரிசித்து நலம்பெறுங்கள்.
ஆலயத்தை அடையும் வழி
திருவண்ணாமலை - வேலூர் சாலை பத்து கிலோமீட்டர் தூரம்.
சத்திரம் கூட்ரோட்டிலிருந்து இடது புறம் உள்ளே இரண்டு கிலோமீட்டர்.
ஸ்ரீராமஜெயம்.
May be an image of outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...