Wednesday, April 21, 2021

தமிழ்சினிமாவில்சாதி .

 தமிழ் சினிமாவில் என்றும் ஜாதி பேசப்பட்டே வந்தது. அது கருணாநிதியின் காலம் தொட்டு கமல் ஹாசன் காலம் வழியாக இன்று கர்ணன் வரை .. அப்படித்தான்.

வில்லன்கள் எல்லோரும் சேட் முதலியார், பிள்ளைவாள், செட்டியார் என்று பெரிய தொந்தியுடன் காட்டி குடியானவர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டும் பழக்கத்தை சிவாஜியும், எம். ஜி. ஆர். ம் கூட செய்ய தயங்கவில்லை. இதில் உண்மை எந்த பக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்று யாரும் கேட்கவில்லை !!
மனோதத்துவ முறையில் மிகவும் பலவீனமானவன் மிகவும் பலசாலியை ஜெயிக்கும் போதுதான் விறுவிறுப்பு! மேலும் அது ஓரளவுக்கு செல்வம் இருப்பவன் இல்லாதவன் என்னும் அந்த கால கம்யூனிச தத்ததுவத்துடன் ஒட்டி வந்தது.
முக்கிய பிரச்சனை பணம் தான், செல்வம் தான் என்பது போல அன்றைய சினிமா கதைகள் மேலோட்டமாக கடந்து சென்றனர். மேலும் ஒரு சாதியினரை வில்லங்களாக காட்டும் போது அதே சாதியில் ஒரு நல்லவரை காட்டி சமன் செய்தும் வந்தனர். செட்டியாரின் அப்பா வில்லன். மகன் கதாநாயகன் புரட்சி கருத்துக்கள் பேசுவான் என்பது போன்று சொன்னார்கள்.
உண்மையான பிரச்சனை மரியாதை தான் என்பதை பத்திரிகை கதைகளில் கட்டுரைகளில் வெளிவந்தும் சினிமா எனும் பெரும் பொருள் முதலீட்டு வியாபாரத்தில் அதை சொல்ல தயங்கினார்கள். அவர்கள் தைரியமாக அணுகியிருந்தால் அதற்கான வன்முறையில்லாத தீர்வுகளை தேடியிருப்பார்கள். தேடினார்கள். காரணம் அன்று அத்தகைய நேர்மையாளர்கள் பலர் சினிமாவில் இருந்தனர்.
அந்த பரிணாமம் நிகழ்வதற்குள் சமூகத்தில் பெருமளவு வெறுப்பு அரசியலை திராவிட கட்சிகள் கொண்டு வந்து விட்டது. அதன் நிழல் சினிமாவில் விழாமல் போகுமா?
தற்குறி எஸ். ஏ. சி. போன்றவர்கள் வந்து ரத்தத்தை தெறிக்க விட்டு காட்டினார்கள்.
ஒரு சமுதாயம் தனக்கான மரியாதையை கேட்கிறது. தவறில்லை ! கேட்க வேண்டும்.
ஆனால் எப்படி என்பதில் தான் இப்போது பிரச்சனை !!
அருவாள் எடுத்து எந்த சமுதாயமும் இன்னொரு சமுதாயத்திடம் மரியாதையை பெற முடியாது.
பயத்தை உண்டாக்கலாம். ஆனால் பயம் வெகுநாட்களுக்கு இருக்காது. எதிர்வினை அதே ரீதியில் வரும் போது களேபரம்தான்.
கவுண்டனை வெட்டு, கவுண்டச்சியை கட்டு என்று சரக்கு மிடுக்குடன் தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் அபாயம். அவர்கள் மீண்டும் மீண்டும் இவர்களை வைத்து பிழைப்புத்தான் நடத்துவார்கள். இதுவரை தம் சமுதாயத்தின் மரியாதையை மீட்க ஒரு துரும்பை கிள்ளி போட்டிருக்கிறார்களா?
சும்மா நெருப்புடா.. பருப்புடா.. தெரியுமா ? என்று உங்களை ஆட விட்டவன் ஆடி காரில் போவான். நீங்கள் மாஸ் டா என்று சொல்லி தெருவில் நிற்கலாம்.
தன்னை நம்பி வந்தவர்களை மூளை சலவை செய்து அவர்களின் நம்பிக்கையை, வழிபாட்டை, கேவலப் படுத்தி தொன்மை புகழை கேள்விக் குறியதாக்கி அழித்து மொத்தமாக திசை திருப்பி இன்னொரு மதத்தில் கொண்டு போய் சேர்க்கும் பிரோக்கர்களாகவே திகழ்கிறார்கள்.
ராஜ ராஜ சோழன் கட்டிய பெருவுடையார் கோவிலில் தனிப் பட்ட முறையில் பெயர்கள் பொறித்து குறிப்படப் படும்படி வாழ்ந்த ஒரு சமூகம் இன்று தன் அடையாளம் ஆப்பிரிக்க கலாசாரம்தான் என்பது போல புள்ளிங்கோ வாக அலைவது ஏன்?? அந்த சமூக தலைவர்கள் சிந்தித்தார்களா?
கடந்த கால நிகழ்வுகளை பதிகிறேன் என்று சொல்லி இன்றைய நிலையில் மீண்டும் வன்முறைதான் தீர்வு என்று நிற்க அந்த சமுதாயத்தை தூண்டுபவர்கள் யார் என்று கூர்ந்து கவனியுங்கள். அவர்கள்தான் உங்களை புதைக்க காத்திருக்கிறார்கள்.
நான் தாழ்த்தப் பட்டவன் என்று நானே ஒத்துக் கொள்ளதாவரை நான் தாழ்த்தப் பட்டவன் இல்லை !
இதைத்தான் திரு. கிருஷ்ணசாமி போன்றவர்கள் கேட்க தொடங்கி விட்டனர்.
படு வேகமாக மாறி வரும் உலகச் சூழலில் ஒவ்வொரு சமுதாயமும் நவீன கல்வி முறையில் கடுமையாக உழைத்து முன்னேறி வந்தால் தான்
தம் வாழ்க்கையை மேம்படுத்தி தம் சமுதாயத்தையும் ஓட்டு மொத்தமாக முன்னேற்ற முடியும்.
மாறாக மீண்டும் அரிவாளை எடுப்பேன் அல்லது புள்ளிங்கோ வாக திரிவேன் என்றால் 21ஆம் நூற்றாண்டு அல்ல 22 ஆம் நூற்றாண்டும் கை நழுவி போகும்.
May be an image of one or more people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...