Thursday, April 29, 2021

நல்ல கருத்து.................

 வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்....

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.... !!!
பறவைகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு கல் போதும்.....
மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு "சொல்" போதும்......!
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்...
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்...
அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்... !
வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை....
பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!
வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..
கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..
அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ...
எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் ... அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....
ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு...
மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு...
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.✍🏼🌹*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...