தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதில் எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

ஆனால், சோதனை முடிந்ததும், எட்டு பக்க ரகசிய அறிக்கையை வருமான வரித்துறையின் தலைவருக்கு அனுப்பியுள்ளார், தமிழக சீனியர் வருமான வரித் துறை அதிகாரி. அதில் பல முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த அறிக்கையை படித்த மத்திய வருவாய்த் துறை செயலர், ஒரு ரகசிய குறிப்பை எழுதி பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், 'சபரீசன், துபாயில் யாருடன் அடிக்கடி தொடர்பில் உள்ளார் என்பது குறித்து விசாரணை தேவை' என சொல்லப்பட்டுள்ளதாம். 'தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பின், சபரீசனுக்கு பிரச்னைதான்' என்கின்றனர் அதிகாரிகள்.
No comments:
Post a Comment