Monday, July 31, 2017

ராஜ்யசபாவில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை.



லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜ., 279 எம்.பி.,க்களுடன் தனிப் பெரும் கட்சியாகவும்,
கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 340 எம்.பி.,க்களுடன் அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது.
அதே நேரத்தில் 12 நியமன உறுப்பினர்கள் உட்பட 245 எம்.பி.,க்களை உடைய ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு போதிய பலம் இல்லை.
ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு 123 பேரின் ஆதரவு தேவை. பா.ஜ.,வுக்கு, 57 எம்.பி.,க்களே உள்ளனர்.
ராஜ்ய சபாவில் 10 எம்.பி.,க்களை வைத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்ததன் மூலம் தே.ஜ., கூட்டணியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பா.ஜ., -எம்.பி.,க்கள் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.
இதைத் தவிர அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவுஅளித்து வருகின்றன.
இந்தக் கட்சிகளின் 26 எம்.பி.,க்கள் மற்றும் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவும் பா.ஜ.,வுக்கு உள்ளது.
இவற்றையும் சேர்த்தால் ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம், 121 ஆக உயர்கிறது.
அதாவது பெரும்பான்மையை பா.ஜ., நெருங்கிவிட்டது.
பா.ஜ., ஆளும் உ.பி.,யில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒன்பது ராஜ்யசபா எம்.பி.,க் களின் பதவிகள் காலியாகின்றன.
அதில் எட்டு இடங்களில் வெற்றி பெறுவதற் கான வாய்ப்பு பா.ஜ.,வுக்கு கிடைத்து உள்ளது.
அப்போது கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் உதவியுடன் பா.ஜ., தலைமையி லான தே.ஜ., கூட்டணிக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் கிடைக்கும்.
*** ராஜ்ய சபா என்று ஒன்று இந்தியாவுக்கு தேவை இல்லை. யாரெல்லாம் தேர்தலில் தோற்கிறார்களோ அவர்கள் எல்லாம் பின் வாசல் வழியாக பதவி பெறுகிறார்கள்.
இது என்ன நியாயம். மக்கள் புறக்கணித்த ஒருவர் எப்படி பார்லிமென்டில் பதவி பெறலாம்.
மணிசங்கர் ஐயரும் இப்படித்தான்.
சட்ட திருத்தம் செய்து இந்த ராஜ்ய சபாவை மூட வேண்டும். இல்லையெனில் எல்லா நற்பணிகளை மாறி மாறி இந்த கெட்டவர்கள் கையில் தான்.
கனி மொழி, ராஜா, மணிசங்கர் ஐயர், அருண் ஜெட்லி, யெச்சூரி, கம்யூனிஸ்ட் ராஜா என்று பெரிய லிஸ்டை சொல்லலாம்.
தனது அடுதத கட்ட நடவடிக்கையாக மோடி, ராஜ்ய சபாவுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டும்...!!!
Image may contain: sky and outdoor

கமல் தான் ஒரு முட்டாள் என்று தன் பேட்டி மூலம் நிரூபித்து விட்டார்.

1. இவர் ஜாதி மதம் பற்றி சர்ச்சை ஆன படம் எடுப்பார், அரசாங்கம் வாய் மூடி இருக்குமா.
2. JJ அளவுக்கு இவர் ஒன்றும் மக்கள் அபிமானம் இல்லாதவர். JJ க்கு இவர் எல்லாம் கால் தூசு.
3. அஜித் பாதிக்க பட்ட போது கமல் என்ன அம்னீசியாவில் இருந்தாரா.
4. கடவுளை பற்றி தெரிய வேண்டும் என்றால், தகுந்த குருவிடம் கேட்டு தெளிவாக வேண்டும். மெரினாவில் தொலைத்து விட்டு, எலியட்ஸ் பீச்சில் தேடுவது மாதிரி இருக்குது.
அடுத்ததாக வாழ்த்துரை வழங்க இருப்பவர் ஊழலை ஒழிக்க பதினொன்றாவது அவதாரம் எடுத்துள்ள கலைஞானி கமல்..ஹாஸன் அவர்கள்.
No automatic alt text available.
யாராவது தொடருங்கள்.

Bank Balance Enquiry.

No automatic alt text available.

#மாவட்ட_நிர்வாகிகளுக்கு_அழைப்பு!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக கைதுசெய்யப்ட்ட போது 60 நாட்கள் பொறுத்திருங்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்ததாக கூறினார்.
தினகரன் அறிவித்த 60 நாட்களானது வருகின்ற 4 ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 5 முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட இருப்பதாகவும் தினகரன் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 5 ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பின்பு அதிமுகவின் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அரசு வெளியிட்டு உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தகுதி உள்ளவர்கள் பட்டியல்.



1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை
2) குளிர்சாதன பெட்டி ( ப்ரிட்ஜ்) இருந்தால் ரேசன் பொருட்களை வாங்க இயலாது
3) மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இல்லை
4) நகர்ப்புற கிராமப்புறத்துக்கு தனித்தனி விதிகள்.
5) கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் இருந்தால்
6) மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் இருந்தாலோ
7) தொழில் நிமித்தம் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலோ
8) பதிவு செய்த நிறுவனங்கள் இருந்தால்
9) நகர்புற அந்தியோஜனா - அன்னயோஜனா திட்ட உறுப்பினர்களுக்கு
10) ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் (அதாவது மாசம் ₹8000) சம்பளம் வாங்குனாலோ
யாருக்குமே ரேசன் பொருட்கள் இல்லை. ஊஊஊ ஊஊஊஊஊஊஊஊஊஊஊ
சுருக்கமா சொன்னா வடக்குல இருந்து வாழ வக்கில்லாம ஓடி வரவனுக்கு முழு தகுதி உண்டு.
பரம்பரை வீடு இருந்தா, தப்பி தவறி செகண்ட் ஹேண்ட் ப்ரிட்ஜ் இருந்தா, தண்ணி இல்லாம விவசாயம் செய்யாத தரிசு நிலம் இருந்தா
ஒரு டாடா ஏஸ், மாருதி800 இருந்தா கூட தகுதி இல்ல, ஜிஎஸ்டி பதிவு பண்ணலனா தொழில் செய்ய முடியாது பதிவு செஞ்சா ரேசன் இல்ல.
Income tax file பண்ணலனா குத்தம். செய்தா ரேசன் பொருள் இல்லை.
எவனாவது வரட்டும் இது ஏழைகளுக்கான அரசுனு.வாய்லயே வெட்றேன். இது பினாமி அரசு முதுகெலும்பில்லாத ரெய்டு படையெடுப்புகளால் அடிமைப் படுத்தப்பட்டு இயக்கப்படும் அடிமை அரசு
நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும். எது செஞ்சாலும் ஓடி வந்து முட்டு கொடுக்க வரவங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை, உருவுனது உங்க #டவுசரையும் சேர்த்துதான்.Image may contain: 2 people, people sitting

மவுண்ட் பேட்டன் மனைவியுடன் ஜவஹர்லால் நேருவிற்கு இருந்த தொடர்பு என்ன?

இந்தியாவின் முன்னால் பிரதமர் ஜவர்ஹலால் நேருவும், மவுண்ட் பேட்டன் மனைவியும் உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்திருக்க வாய்ப்பில்லை என்பது மவுண்ட் பேட்டனின் மகள் பமீலா ஹீக்ஸ் எழுதிய “Daughter of Empire: Life as a Mountbatten” என்ற புத்தகத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மவுண்ட் பேட்டனின் மனைவி எட்வினாவிற்கும், ஜவஹர்லால் நேருவிற்கும் இடையில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
Image may contain: 3 people, people smiling
ஒருவரோடு ஒருவர் உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு கடிதங்களால் காதலைப் பகிர்ந்து கொண்டனர். பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக காணப்பட்டதால், இந்த காதல் விவகாரம் வெளிப்படையாகவே இருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர் எட்வினா தன் கணவர், குழந்தையுடன் இங்கிலாந்துக்கு பிரிந்து சென்றுவிட்டார். பிறகு நேருவும் எட்வினாவும் கடிதங்கள் மூலம் காதலைத் தொடர்ந்துள்ளனர்.
எந்நேரமும் அவர்களைச் சுற்றிப் பணியாளர்கள், போலீஸ் என இருந்ததாலும் பொதுமக்கள் நடுவில் வாழ்ந்ததாலும் அவர்களுக்கு உடல்ரீதியான உறவு வைத்துக்கொள்வதற்கு நேரம் இல்லை.
அவர்களின் கடிதங்களைப் படித்த பின்னர்தான் அவர்களுக்கிடையில் இருந்த ஆழமான காதலை புரிந்துகொள்ள முடிந்தது. என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நேருவிற்கு மரகதக்கல் பதித்த மோதிரத்தை நேரிடையாக நேருவிடம் கொடுக்காமல், இந்திராவிடம் எட்வினா கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்.

ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.
1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.
2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.
3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.
4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.
5. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.
6. ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.
7. நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.
8. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.
9. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
10. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.
11. கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.
12. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.
13. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
14. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
15. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.
16. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.
17. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
18. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
19. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.
20. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
21. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
22. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
23. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
24. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
25. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.
26. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.
27. ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.
28. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வரஞ வேண்டும்.
29. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.
30. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.
31. துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.
32. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.
33. ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-
34. தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.
35. தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.
36. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
37. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
38. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.
39. கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
40. வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.
41. கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
42. குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
43. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
44. கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.
45. கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.
46. கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.
47. மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.
48. கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.
49. கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.
50. சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

Sunday, July 30, 2017

சேவை செய்ய வருகின்றோம்..............

பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து 5 ஆண்டில் 300% சதவிகிதம் உயர்வு! 8.54 கோடி ரூபாயாக இருந்தது 34.31 கோடியாக மாறியுள்ளது! , வெளியிட்டவுடன் செய்தியை நீக்கிய தேசிய ஊடகங்கள்!
பாஜக தலைவர் அமித்ஷா மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அவரின் மொத்த சொத்து மதிப்பு (மனைவியுடையதும் சேர்த்து) ரூ 34.31 கோடியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ 8.54 கோடியாக இருந்ததாக "Business Insider" குறிப்பிட்டுள்ளது, கிட்டதட்ட 5 ஆண்டுகளில் 300% சதவிகிதம் அமித்ஷாவின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டியதே இத்தனை மடங்கு என்றால் கணக்கில் வராதது எத்தனை மடங்காக இருக்கும் என எதிர்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றது.
சேவை செய்ய வருகின்றோம் எனக் கூறும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு இத்தனை மடங்கு உயர்கிறது என்றால் இவர்கள் யாருக்கு சேவை செய்கின்றார்கள் தங்களுக்காகவா அல்லது நாட்டு மக்களுக்காகவா அரசியல்வாதிகளிடையே ”கொடி மற்றும் கட்சி” பாகுபாடு மட்டும் தான் இருக்கின்றதே தவிற வேறு எந்த வித்தியாசமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த செய்தியை வெளியிட்ட தேசிய ஊடகங்கள பாஜக விற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததும் சில மணி நேரங்களில் அந்த செய்தியை உடனடியாக நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது.
இது தான் ஊடக தர்மமா என கடும் விமர்சனங்களை நடுநிலையாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

எப்பவுமே எச்சிலை பொறுக்கி தின்னுபவன் இப்படி த்தான் பேசுவான்.



உலகத்திலேயே கேவலமான மதம் இந்து மதம்-திமுக
செய்தி தொடர்பாளர் பிரசன்னா-
டேய் நாதாரி.. போன தேர்தலில் உங்க செயல் தலை வர் ரோடு ரோடாய் கோயில் கோயிலாய் போய் திமுக
இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுகவில் உள்ள தொண்டர்களில் 90% இந்துக்கள் தான் அவர்கள் மத
நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உள்ளவர்கள் என்று
கூறி இந்துக்களிடம் பிச்சை எடுத்ததால் தான் திமு கவிற்கு 89 எம்எல்ஏக்கள் கிடைத்தார்கள்.
மிச்சம். இருக்கிற 10%த்தி்ல் உன்னை மாதிரி நாதா ரிகள் இருப்பதால் தான் உங்க கட்சியை மக்கள்
ஆட் சிக்கு வர விடாமல் செய்கிறார்கள்.ஆயிரம் தப்பு
செய்தாலும் அதிமுக திமுகவிற்கு பராவாயில்லை
என்று நினைக்க வைப்பதே திமுகவின் இந்து மத எதிர்ப்பு தான்.
எங்கே போகப்போகிறோம்..மீண்டும் ஓட்டு கேட்டு
வருவீர்கள் அல்லவா...காத்திருக்கிறோம்..Image may contain: 7 people, text

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!!
நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை
இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில்
நாடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், சம்ப்ருதாயங்கள் இல்லாமல் நடத்தினர். என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைபார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். 

Image may contain: 2 people, people smiling, people sittingதிருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

"வாழ்க்கையின் தத்துவம்"

ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,
“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.
‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,
’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.
உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.
சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.
இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.
"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை".
**************************************
நன்றி : படைப்பாளிக்கு....
**************************************

#இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே #இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
10. முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
11.கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
12.நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
13. சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
14.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
15.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
16.வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
17. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
18. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
19. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
20. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
21. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
22. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
23. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
24. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
25. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....

பேரிக்காய் சாப்பிடுங்கள் எடையை குறையுங்கள்.

ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.
குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.
பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.
தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.
பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

*கர்மபலன்* இதுதான்...!

நம்முடைய வேத-ஶாஸ்த்ர-புராண-இதிஹாஸங்கள்-பெரியோர்கள் எல்லாருமே ஒருமித்துக் கூறுவது.....
*வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், ஸந்தோஷங்களும் நம்முடைய பூர்வஜன்ம கர்மபலன்தான் என்பதே!*
*ப்ரத்யக்ஷ தெய்வம்* என்று நாமெல்லாம் கொண்டாடும் நம் *பெரியவாளும்* இதைப் பலமுறை கூறியிருக்கிறார்.
இதன் எடுத்துக்காட்டாக ஒரு ஸம்பவம்...
பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மிகவும் அடக்கமானவர்கள். புத்ரஸந்தானம் தவிர மற்ற ஸௌபாக்யங்களுக்கு குறைவில்லை.
பெரியவாளை தர்ஶனம் பண்ண வரும்போதெல்லாம், மானஸீகமாகவும், வாய்விட்டும்... பலமுறை புத்ரபாக்ய அனுக்ரஹத்துக்காக ப்ரார்த்தனை பண்ணுவார்கள்.
ஒரு தடவை கூட, பெரியவா அவர்கள் மனஸு குளிரும்படியாக எதுவுமே சொன்னதில்லை!
ஒருநாள் தம்பதி இருவரும் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்கள். நமஸ்காரம் செய்தார்கள்.
"பெரியவாளோட அனுக்ரஹத்ல எல்லாம் இருக்கு! பெரியவாளுக்கு சொல்லித்தான் தெரியணும்-னு இல்ல....! ஆனாலும், எங்களோட கொறையை பெரியவாளைத்தவிர யார்கிட்ட சொல்லி ஆற முடியும்?...."
பெரியவா பதில் எதுவும் பேசாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
மிகவும் நல்ல மநுஷ்யர்கள் தான்! குழந்தை வரம் வேண்டி, பாவம், கெஞ்சுகிறார்கள்..... ஆனால், கர்மவினை மிகமிக அதிகமாக இருந்தால், அனுக்ரஹம் கூட தனக்குத்தானே அணை கட்டிக்கொள்ளுமே!
மிகவும் பரிவுடன், அவர்களுடைய ஜன்மாந்த்ர கர்மவினையை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்...
"பாருங்கோ! நாம... பண்ற பாப-புண்யங்கள்தான்... நம்மளோட விதியை நிர்ணயம் பண்றது. அது ஜன்ம ஜன்மாவா நம்மளை தொடர்ந்து வந்துண்டேதான் இருக்கும். அதுக்குத்தான் பாபகார்யங்களை பண்ணப்படாது; நெறைய புண்யகர்மாக்களை பண்ணணும்-னு சொல்றது..! நமக்கு எதெது இந்த ஜன்மா-ல வாய்ச்சிருக்கோ.... அது நல்லதோ, கெட்டதோ பகவானோட சித்தம்-னு ஸந்தோஷமா அதை ஏத்துண்டு வாழணும்!....
ஒனக்கு இந்த ஜன்மா-ல புத்ரபாக்யம் கெடையாது!...
ஏன் தெரியுமோ?....
எல்லாமே காரண-கார்யங்கள்தான்! நீ.... போன ஜன்மாக்கள்ள ஒனக்கு பொறந்த கொழந்தேள் எல்லாத்தையும், எப்பப்பாத்தாலும் _மூதேவீ! பீடை! சனியன்!_..ன்னு வாய் ஓயாம கரிச்சுக் கொட்டிண்டிருந்தியே! பின்ன... ஒனக்கு இந்த ஜன்மா-ல எப்டி கொழந்தை பொறக்கும்?... சொல்லு!... "
கண்கள் கலங்க பெரியவா சொன்ன ஜன்மாந்த்ர ஸத்யத்தை ஜீரணித்துக் கொண்டு, கர்மபலனை அனுபவிக்கும் மனோதிடத்தை வேண்டியபடி, பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்கள்.
நாம் பேசும் பேச்சுக்கூட கணக்காயிருக்கணும் என்று பெரியவா உபதேஸிப்பார். நம் ஆத்திரம், கோபத்தை தீர்த்துக் கொள்ள, அடுத்தவர்களை தூற்றுவது, உருவத்தை வைத்து கேலி செய்வது, நம் குழந்தைகள் மட்டுமில்லை, நம் சுற்றம்-நட்பு, ஏன்? முன்பின் தெரியாதவர்களானாலும், அவர்களை நோக்கி வீசப்படும் வசவுகள், நிந்தனைகள் எல்லாமே..... அப்படி நிந்திப்பவர், அதை தூண்டுபவர், ஆமோதிப்பவர், அதைத் தடுக்காமல் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பவர் இப்படியாக இத்தனை பேர் கணக்கிலும் debit side-ல் வரவு வைக்கப்படுகிறது.
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், இது அத்தனைபேருக்கும் பொதுவான இயற்கையின் விதி! நியதி!
இந்த ஜன்மத்தில் நமக்கு வாய்த்திருக்கும் _அம்மா, அப்பா, ஸஹோதர-ஸஹோதரிகள், நண்பர்கள், கணவன்-மனைவி, சுற்றம்_, அத்தனையுமே... நாம் பூர்வ ஜன்மங்களில் ஆசைப்பட்டதுதான்! ஆனாலும், நம்முடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளால், இவை அநுகூலமாகவோ, ப்ரதிகூலமாகவோ இருக்கும்.
நல்ல அன்பான பெற்றோர்கள், கணவன்-மனைவி, ஸொந்தங்கள் இருந்தும், நாம் அவர்களை மதிக்காமல், கரித்துக்கொட்டி வெறுத்து ஒதுக்கினால், இந்த ஜன்மத்தில் நாம் ஏதோ அவர்களை பழி வாங்கியதாக நினைத்து ஸந்தோஷப்படலாம். ஆனால், இந்த அன்பான நன்மை, அடுத்தடுத்த ஜன்மங்களில், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதே ஸத்யம்!
அதோடு, இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
*ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்...*
🙂🙏

Saturday, July 29, 2017

உண்மையைத் தவிர வேறல்ல.

அதென்னப்பா, சாமன்யனுக்கும், மாச சம்பளக்காரனுக்கும் சொத்துமதிப்பு எத்தனை வ௫சமானாலும் ஏறுவேனேன்னு சொல்லுது?
ஆனா இந்த அரசியல் வாதிங்களுக்கு,
அதுவும் ஆளும் கட்சிகாரார்களுக்கு 100
சதவீதம்,200 சதவீதம், 300 சதவீதம்னு
ஏறுது ?
எப்படியப்பா???
அது எப்படியென்னு கேட்டு சொல்லுங்கப்பா?
எல்லா௫ம் வசதியா வந்து௫லாம்ல்லா!
செய்தி கீழே:
பாதுகாப்புத்துறை மந்திரியாக அமித்ஷா பொறுப்பேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்ய அவர் மனுத்தாக்கல் செய்தார்.மனுத்தாக்கலில் அமித் ஷாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு அமித் ஷாவின் அசையக் கூடிய சொத்து மதிப்பு ரூ. 1.90 கோடியாக இருந்தது. 2017ம் ஆண்டு ரூ. 19 கோடியாக உயர்ந்துள்ளது.
அமித் ஷா மற்றும் அவர் மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2012ம் ஆண்டு அமித் ஷாவின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 8.54 கோடியாக இருந்தது.
தற்போது ரூ. 34.31 கோடியாக அதிகாரித்திருக்கிறது.
அமித் ஷாவின் பரம்பரை அசையும் சொத்து மதிப்பு ரூ.10.38 கோடியாக இருக்கிறது.
ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடும் ஸ்ம்ரிதி இரானி மற்றும் கணவரின் சொத்து மதிப்பும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
2014ம் ஆண்டு ரூ. 4.91 கோடியாக , இருந்த ஸ்ம்ருதியின் சொத்து மதிப்பு ரூ. 8.88 கோடியாக அதிகாரித்திருக்கிறது.

Corporates Support ஆகவும்...

தற்பபோதய பாஜகவின் போக்கும், திட்டங்களும் நேர்மை என்ற போர்வையில் Corporates Support ஆகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிபதாகவும் உள்ளன
இந்த போக்கு தேசத்தை, தேசத்தின் Majorty population மிகவும் தவரான வழியில் கொண்டுபோய்விடும் என்பதுதான் உண்மை. என்று இந்த தேசத்தின் 80% ஏழைகள், கொதிதத்து எழுவார்களோ அதுவரையில் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை.
என்று சோறு தண்ணி யில்லாமல் இந்த ததேசத்தின் 80% மக்கள் நடுதெருவுக்கு வருகிறார்களோ, அன்று துண்டைகாணும் துணியைகாணும்தான். காங்கிரஸ், திராவிடகட்சிகள் ஊழல் செய்து கோடிகோடியாக சம்பாதித்தாலும் ஏழைகளுக்கு தேவையான எலும்புதுண்டை வீச மறந்ததில்லை. இந்த வியாபார நுணுக்கம் தெரியாமல் Corporateகளுடன் சேர்ந்து கும்மியடித்து, ஏழைகளை புறக்கணிக்கிறார்கள். இது உங்களுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல..

அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்....

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?
தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்.
1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது.
2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.
3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்..... அதிலிருந்து லாபமும் பெற முடியும்....
4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.
5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.
6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்....!!!
மாஸ்டர்_பிளான்... இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்..... அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது சாமர்த்தியம் தான்.....!!!
ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது... இதை ஏன் bsnlசெய்ய முன்வரவில்லை....?

நம்ம நாட்டு மக்களை பற்றிய சில உண்மைகள்......

1. நம்ம நாட்ல இருக்குற ஒவ்வொரு கல்யாணம் ஆகாத ஆணும் ஒரு அழகான பெண்ணை கல்யாணம் பண்ணிக்கத்தான் ஆசைபடுறான்....
2. நம்ம ஊட்ல காலிங் பெல் சத்தம் கேட்டதும் நம்ம குழந்தைங்க இல்லனா கணவன் கதவை திறக்க ஓடுவோம்.. பெண்கள் தங்கள் துப்பட்டாவை தேடி ஓடுவார்கள்...
3. நம்ம சொந்தக்காரர்களை ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டான்ட் கூட்டிட்டு போறதும் அங்கிருந்து கூட்டிட்டு (pick-up / drop) வரதும் நம்ம குடும்பங்களின் ஒரு முக்கியமான சம்பிரதாய நிகழ்ச்சி.....
4. வீதி உணவுகளை வெறித்தனமாக வாங்கி சாப்பிடுவோம்... ஆனால் அதனால் நமக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி துளிகூட கவலை கிடையாது நமக்கு
5. ஒவ்வொரு இந்திய தாய்க்கும் இரண்டு தலையாய கடமைகள் உள்ளன... ஒன்று வேலைக்கு செல்வது (அல்லது ஹவுஸ் ஒய்ப்) இரண்டு அவர்களின் டிரஸ்களுக்கு மேட்சிங் செலக்ட் செய்வது ...
6. நம்ம எல்லாருக்குமே ரகசியமா ஒரு கேர்ள் / பாய் பிரண்ட் கட்டாயம் இருப்பாங்க...அவங்க நம்மள ஏமாத்தினாலும் அத பத்தி பெருசா கண்டுக்க மாட்டோம்.. ஆனா அப்பா அம்மாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிட கூடாதுன்றதுல ரொம்ப கேர் புல்லா இருப்போம்....
7. பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சு மாப்ள வீட்டுக்கு போகும் போது கண்டிப்பா கண்ணுல தண்ணி வச்சுக்கணும்... சந்தோசமா இருக்குறதா காட்டிக்கவே கூடாது
8. நமக்கு எவ்ளோ தான் வயசானாலும்... நாம எங்க போரம் வரோம்ங்கற detail எல்லாதையும் நம்ம அப்பா அம்மா கிட்ட சொல்லியே ஆகணும்.. No excuses. No exemption
9. நாம ஒருவேளை வெளியூர்ல இருக்கோம்னா தினமும் நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி பேசியே ஆகணும்... ஒரு நாள் பேசலைன்னாலும் உடனே நம்ம அம்மா ஊர்ல இருக்குற நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி என்னச்சின்னு பதட்டத்தோட விசாரிப்பாங்க...
10. நம்ம அப்பா அம்மா எதிரிலே ஏதாவது அப்ளிகேசன் பாரம் நிரப்பிகிட்டு இருக்குறப்போ அதுல செக்ஸ் அப்படிங்கற வார்த்தை வந்துட்டாகூட ரொம்ப சங்கோஜமா பீல் பண்ணுவோம்.
11. வீட்டுக்கு வர்ற கெஸ்ட்கள் கூட நாம வீட்டுக்குள்ள இருந்து பேசுறத நேரத்தை விட அவங்க கிளம்பி வாசல் வந்தப்புறம் கதவுகிட்ட வச்சு பேசுறது தான் ரொம்ப ஜாஸ்தியாய் இருக்கும்.
இதெல்லாம் உண்மையிலேயே நீண்ண்ட ஆராய்சிக்கி பொறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புக்கள் ........

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...