Sunday, July 23, 2017

💸🌜FOREIGN EXCHANGE COUNTER 🌛💸

💸பணம் சம்பாதிப்பது என்பது ஆரம்பத்தில் ஓர் அவசியம். நாளாக நாளாக அது ஓரு வழக்கம். பிறகு அதுவே ஓரு நோய். இந்த நோயில் பீடிக்கப் பட்டவர்களை காப்பாற்ற மருந்து எதுவுமே கிடையாது. மனப்பக்குவம் தான் இந்நோயிலிருந்து காக்கும் வலிமை உடையது.
🌼பணம் கால் செருப்பு மாதிரி அளவாக இருக்க வேண்டும். அளவு குறைந்தால் செருப்பு காலைக் கடிக்கும். பணம் கையைக் கடிக்கும். அளவு அதிகமானால் ஆளின் நடையை கெடுத்து இரண்டும் மனிதனை கவிழ்த்து விடும். ஆனால் எது சரியான அளவு என்பதை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
🌸சம்பாதிப்பது மட்டும் முக்கியமில்லை. அதை சரியான படி செலவழிப்பது மிக உன்னதமான கலை. சிலபேர் நிறைய வேக வேகமாகச் சம்பாதிக்கிறார்கள். எதையுமே அனுபவிப்பதில்லை. ஏன் சம்பாதிக்கிறோம், எதற்கு சம்பாதிக்க்றோம் என்று சோசிப்பதே கிடையாது. சம்பாதிக்கும் வேகத்திலேயே பாவம் வாழ்க்கையை இழந்து இறந்து விடுகிறார்கள்.
வியாபாரம் ....
வியாபாரம்....
பணம் என்பதே லட்சியம் என அழைந்த நபருக்கு அவருடைய நெருங்கிய நண்பர் அறிவுரை சொல்ல தொடங்கினார். மனுஷன் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் இல்லை. புண்ணியம் சம்பாதிப்பதும் முக்கியம். அதற்கு என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாய்? என்றதற்கும் நண்பர் பிடி கொடுக்காமல் பேச கடுப்பானவர்
" டேய் நாளைக்கே நம்ப கதை முடிஞ்சா சொர்க்கமோ நரகமோ போக வேண்டி வந்தா...
எங்கடா போவ?" என்று உஷ்ணமாக கேட்டார்.
" வியாபாரம் எங்க நல்லா நடக்குமோ அங்கதான் போவேன்" என்றாரே பார்க்கலாம். அங்கேயும் கடை போடுவதே அவர் எண்ணம். கடைத்தேறுவது நோக்கம் இல்லை. என்ன செய்ய?
🌼நம்மூர் ரூபாய் அமெரிக்காவில் மதிக்கப்படமாட்டாது. அமெரிக்கா போகிறவர்கள் டாலராக மாற்றி கொண்டால் தான் அமெரிக்காவில் குப்பை கொட்ட முடியும். அமெரிக்காவில் இந்தியர்கள் தான் அதிகம் குப்பை போடுகிறார்கள். அதே மாதிரி மேல் உலகம் போகிறவர்கள் பணத்தை புண்ணியமாக FOREIGN EXCHANGE ஆக மாற்றி கொள்ள வேண்டும்.
எனவே தான தர்மம் தான் FOREIGN EXCHANGE COUNTER ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...