Saturday, July 22, 2017

இன்று ஆடி அமாவாசை விரதம்.


சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தந்தையரை நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இறந்த தாய், தந்தைக்கு அவர்களது திதி நாளில் அவர்களை நினைத்து வணங்கி சிரார்த்தம் செய்வது மகனின் முக்கிய கடமையாக கூறப்படுகிறது. தாய், தந்தை இறந்த தேதி, திதி ஆகியவற்றை மறந்தவர்கள், தவற விட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை, அவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். இறந்தவர்களை நினைத்து அன்றைய தினம் வீட்டில் அவர்கள் படத்துக்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலைவாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்துக்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...