Saturday, July 29, 2017

"அறுக்க மாட்டாதவன் கைல ...."



சீன் - 1
நேத்து பொறந்த தம்மாத்தூண்டு பையன்.. சரவணா ஸ்டார்... அவங்க அப்பாவோட வியாபாரத்தை அடுத்த லெவல் கொண்டு போய் கலக்கல் பண்றான்... டிவிய தெறந்தாலே புது புது கதாநாயகிகளோட அதகளம் பண்றான்... பணம் அவன் அப்பன் வீட்டு பணமா ஆயா வீட்டு பணமாகிறது முக்கியமில்லை... அவனோட இருப்பை காட்டிகிட்டே இருக்கானே... தொடர்ந்து....
சீன் - 2
விஜய் டிவி.... நல்லதோ கெட்டதோ.. கல்யாண வீடுன்னா மாப்பிள்ளையா இருக்கானுக ... எழவு வீடுன்னா பொணமா கெடக்கானுக.... சூப்பர் சிங்கர் ஆகட்டும்... கலக்கபோவதாகட்டும்... ஜோடி நம்பர் ஒன் ஆகட்டும்..... இன்னைக்கி பிக் பாஸ்.... அவனுகளோட நிகழ்ச்சிகளை பற்றி விவாதிக்காம யாரும் கடந்து போக முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வச்சிட்டுட்டானுக..
சீன் - 3
அவர் எப்படி அரசியலுக்கு வந்தாரு... எப்படி எம்எல்ஏ ஆனார்.... அதெல்லாம் இப்போ விவாதமில்லை... இன்னைக்கி யாரு தமிழக முதல்வர்னு கேட்டா எடப்பாடி பழனிச்சாமி... அரசின் எல்லா கட்டுப்படும் அவர் கைல.. அவரும் ஒரு பக்கம் தினகரன்.. இன்னொரு பக்கம் பன்னீர் அணி... எல்லாத்துக்கும் மேல டெல்லிலருந்தும் ஏன்... தமிழ்நாட்லருந்துமே பிஜேபி மூலமாகவும் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்னைகள்... பிரசர்கள்.... தொல்லைகள்.... இதோ அவரும் தொடர்ந்து முதல்வர் பதவியை தக்கவச்சு ஒட்டிக்கிட்டு தான இருக்கார்....
இப்போ விசயத்துக்கு வருவோம்......
ஒரு நல்ல அரசியல் தலைவராக தனது இருப்பை காட்டிக்கொள்ளவும்... அதை நிலைநிறுத்திக்கொள்ளவும்.... அசாதாரணமான சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு மேல் செல்லவும் ஒருவனுக்கு தேவை.....
1. ஒரு நல்ல கட்சி....
2. பணம்...
3. மீடியா....
4. பதவி.....
மேலே சொன்னவற்றில் எது இல்லை ஸ்டாலினிடம்...... திமுக எனும் பலம் பொருந்திய கட்சி... அதனிடம் இருக்கும் 89 எம்எல்ஏக்கள்.... கலைஞர் டிவி மற்றும் சன் டிவி.... மாநில எதிர்க்கட்சி தலைவர் என்கிற பதவி அந்தஸ்து ... இதுக்கு மேல என்ன வேணும் இவருக்கு அரசியல் பண்றதுக்கு .....
அதிரடியாய் அரசியல் பண்ணி தினம் தினம் தன்னுடைய இருப்பை புத்திசாலித்தனத்தை அரசியல் தந்திரங்களை புதிது புதிதாய் காட்டி ஆளும் கட்சியை நிலைகுலைய வைத்து அவர்களின் எம்எல்ஏக்களே குழப்பம் அடைந்து தவறான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு நிலைமையை காந்திரக்கோலம் ஆகியிருக்க வேண்டாமா... எது தடுக்கிறது அவரை...
கலைஞர் டிவின்னு ஒன்னு இருக்கான்னு கூட தெரியாத அளவுக்கு ஒரு சிறந்த மீடியத்தை வீணாக்கி கொண்டிருக்கிறார்....
சும்மா திரிந்த கமல் கூட இன்றைக்கு Talk of the state ஆக ஆகிவிட்டார்.. ஒரே மாதத்தில்... இவர் என்னடாவென்றால் ஆளுநரிடம் மனு, சட்டசபை வெளிநடப்பு, மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், காகித சங்கிலி ஆர்ப்பாட்டம் ... இப்படி இன்னமும் 1960-களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்....
ஒரு தலை சிறந்த அரசியல்வாதியின் மகனாக இருந்தும் அரசியலில் படிப்படியாய் முன்னேறி இன்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்கிற நிலையை அடைந்தவர் என்கிற மரியாதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வடிவேலு மாதிரியான காமெடியனாக தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்..... சீக்கிரம் சந்திரமுகியாவே மாறிடுவார்னு நினைக்கிறன்....
இதையெல்லாம் யோசித்துப்பார்த்தால் நினைவுக்கு வருவது.... "அறுக்க மாட்டாதவன் கைல ...." என்கிற பழமொழி தான்....
இது அநேகமாக தமிழகத்தின் சோதனையான காலகட்டம் போலிருக்கிறது... . ம்ம்ம்ம்ம்...... இதையும் ..அனுபவிப்போம்.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...