Monday, August 23, 2021

நாத்திகன் மனமுடைந்து போனான்.

 இன்றைய

நற்செய்தி
கதையாக,,
அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன் மேடையில்.
அவன் பேச,பிணம் கூடத்துடிக்கும்,
அந்த அளவு தயாரிப்பு.,
அவன்சிறுமதி கட்சிக்காரர்கள்,
அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.
"கடவுள் இல்லை,
புராணம்வேதம்
எல்லாமே பொய்
மதத்தலைவர்கள்...
தங்கள் பிழைப்புக்காக உண்டாக்கிக்
கொண்ட கட்டு
கதைகள்"....
என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாக பேச
அவனுடைய வாய் திறமையைக் கண்டு, ஜனங்கள் திரளாகக் கைதட்ட
கடைசியாக .....,
"கடவுளுமில்லை.... கத்திரிக்காயுமில்லை...., எல்லாம் பித்தலாட்டம்" .எனசொல்லிவிட்டு....,
"யாராவது, இதை மறுத்து கேள்வி கேட்கவேண்டுமா?
தாராளமாக மேடைக்கு வரலாம் இறுமாப்புடன்
அழைத்தான்.
அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த......
"கோவில் வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரரில் ஒருவன் மேடைமீது ஏறினான்..!
தன் தோளிலிருந்த பையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து.....
தோலை மெதுவாக உரித்தான்......!!
பார்த்துக்
கொண்டிருந்த நாத்திகனுக்கு கோபம் வர,,,
"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே...! கோபத்துடன்
நாத்திகன்.
பழத்தை உரித்து பரதேசி சுளை சுளையாகத் தின்று கொண்டே....,
பொறுங்க பொறுங்க....!
தின்னுட்டு நான் கேள்வியைக் கேட்கிறேன்.....என சொல்லியவாறு ரசித்துத் ஆரஞ்சு பழத்தை தின்று.
தின்று முடித்து,
இறுமாப்புடன் நின்றநாத்திகனை நோக்கி.....,
பழம் இனித்ததா? புளிக்கிறதா..?
என பரதேசிகேட்க.
அட பைத்தியக்கானே...
நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா,புளிப்பா? எவ்வாறு சொல்லமுடியும்"....
நாத்திகன் கோபத்துடன் கேட்க!
"கடவுள் யார்...?
எப்படிபட்டவர்.....?
அவரின் ஆற்றல் என்ன...?
என்பதை....,
நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால் தானே உனக்குத் தெரியும்"....
அனுபவித்து பார்க்காமல், உனது சிறு மதியால் கடவுள் இல்லை என்று கூறுவது நியாயமா?
" இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது......,
பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி வழிபட்டு....,
நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும் ..
"கடவுளை இல்லை என்று எவ்வாறு நீ சொல்லுவாய்..?
நீ படித்தது இந்த அளவுதானா?
"அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்"........,
என்றான் அந்த பிச்சைக்காரன்.
உன் வயிற்றுக்கு நீதான் உணவருந்த தண்ணீர் அருந்த வேண்டும்,
பிறருக்கு இதுதான் அழகென்று சொல்ல உங்களுக்கு தகுதி எப்படி வந்தது?
கூடி இருந்த ஜனங்கள்
வெகுநேரம் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நாத்திகன் மனமுடைந்து போனான்,,
ஒரு பெரிய கூட்டமே நாம் சொன்னதை கேட்டுக் கொண்டிருக்க.....,
இந்த பிச்சைக்காரன் நம்மையே மடக்கி மட்டம்தட்டிட்டானே.என நாத்திகன் மூக்கறுபட்டு தலைகுனிந்து போனவன்தான்......
வாசிக்க,வசிக்க,
ரசிக்க,சுவாசிக்க
இரை வேண்டும்,
இறையும்-
வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...