Sunday, August 29, 2021

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணியின் இன்றைய நிலை..?

 2006ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்ற பெண்ணை ஓதுவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார், தேவாரம் பாடும் பாக்கியம் பெற்ற பெண், திருச்சியை திரும்பிப் பார்க்க வைத்த பெண் ஓதுவார். தமிழகத்தில் வரலாறு படைத்த முதல் பெண் ஓதுவார்,
பெரியார் நெஞ்சில் குத்திய முள் நீக்கப்பட்டது என திக, திமுகவினரால் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அன்று பேசப்பட்டார் இன்று.?
திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள செம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆதிதிராவிடர் குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில், திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஓதுவார் ஆக பணியாற்றத் தொடங்கினர்.
2010 ஆம் ஆண்டு அவருக்கு திருமணமான நிலையில் 2011-ல் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், குறைவான சம்பளம் மற்றும் குடும்ப சூழ்நிலையாலும் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கையற்கண்ணி கூறிதாவது, "அப்பா கூலி வேலை செய்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். என்னால மேற்கொண்டு படிக்க முடியாததால ப்ளஸ் டூ முடித்ததும் திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து படித்து முடித்தேன். அப்ப கோயில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்னு அறிவிப்பு வந்தது. பெண்களில் இதுவரைக்கும் ஓதுவார் இல்லைன்னு சொல்லி என்னையும் விண்ணப்பிக்கச் சொன்னாங்க (சொன்னது யார்.?). 2004-ல விண்ணப்பித்தேன். 2006-ல் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இண்டர் வியூக்கு வரச் சொன்னாங்க. அதுல தேர்வாகி ஓதுவார் ஆனேன். காலை எட்டு மணி, மதியம் 12 மணி, மாலை ஐந்து மணி, இரவு எட்டரை மணின்னு நாலு கால பூஜையின்போதும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுவேன்' என்றவர், சிறு தயக்கத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.
'இந்த வேலைக்காக நானும் என் மகளும் அங்கே தனியா வீடு எடுத்துத் தங்கினோம். சம்பளம் ரொம்ப குறைவு. வாடகை கொடுத்து, வீட்டுச் செலவைச் சமாளிக்க முடியல. அதான் ஏழு வருஷம் கழிச்சு வேலையை விட்டுட்டேன். வேலைய விடும்போது 1,875 ரூபாய்தான் எனக்குச் சம்பளம்.இதில் எப்படி குடும்பம் நடத்துவது..?
100 நாள் வேலைக்கு சென்றால், வேலை செய்யாமலேயே தினம் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கும் அரசு.. மாத சம்பளமே 1875 கொடுத்தால் எப்படி வேலை பார்ப்பது..? அதை வைத்து எப்படி குடும்பம் தான் நடத்துவது..?" என கூறியுள்ளார்.
"தமிழகத்தின் முதல் ஓதுவாராக இருந்த அம்மாவுக்கு தற்போது வேலை இல்லை. டிரைவர் வேலை பார்க்கும் அப்பாவுக்கும் வருமானம் போதவில்லை. இதனால் வீட்டில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. எனவே ப்ளீஸ் எங்க அம்மாவுக்கு வேலை கொடுங்க” என கதறி அழுகிறார் அங்கயற்கண்ணியின் மகள் தர்ஷினி ஸ்ரீ (10).
குறிப்பு ; இத்தனை ஆண்டுகளாக இந்த அர்ச்சகர்கள் பாவம் என்னமாதான் இந்த சம்பளத்தில் இத்தனை அர்ப்பணிப்போடு சேவை செய்கின்றார்களோ..?
அதே போல் இப்பொழுது கருணாநிதியின் மகன் முதல்வர் ஸ்டாலினால் ஓதுவாராக கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பெண் சுஹாஞ்சனா என்பவர் சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எவ்வளவு நாளோ..?
அர்ச்சகர் பணி என்பது அர்ப்பணிப்போடு செய்வது..
செய்து வந்தார்கள்.. வசதியான வாழ்க்கை வாழ அல்ல..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...