Saturday, August 28, 2021

ஆசிர்வாதம்....

 ஆசிர்வாதம் ஒன்றே போதும் அனைத்து செல்வங்களும் பெற வழி வகுக்கும்...

பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்... ️
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.. அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..
ஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது
108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்.. தீர்க்காயுசா இருப்பா என்றார். எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்.. அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார். அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.....
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.. அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர்.
இதெல்லாம் தவறு. நம்மை விட வயதானவர் என்றாலும் ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.
○ புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்.
வயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று, குடும்ப ஒற்றுமையுடன், நல்ல தொழில் வளத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழுங்க வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம்.
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை, உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள், அவர்களுக்கும் அவை கிடைக்கும், உங்களுக்கும் அவை கிடைக்கும்.
வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை.
மந்திரம், உச்சாடனம், அபிசேகம், ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான், என இந்துமதம் மறை பொருளாக உணர்த்தி வருகிறது..
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.
நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்
சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது.. மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது...
பல பாவங்களையும், தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்
ஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.
பெரியோர், மகான்கள், சாதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.
மகிழ்ச்சியுடன் வாழப் பழகு இறைவனை நாள்தோறும் தொழுது வாழு.🙏🏼
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...