Thursday, August 26, 2021

*இதுதான் இல்லற இரகசியம்".*

 *ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.

*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.
*‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.
*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.
‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
*‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.
*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.
பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.
*‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.
சாது யோசித்தார். *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.
*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.
*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
*‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.
*‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.
*‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*
சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.
*‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால்,
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.* ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.
குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*
*இதுவே இல்லற ரகசியம்..*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...